தமிழாக்க கட்டுரை: ஷோபா டே

மாற்றுக்கருத்தினை கண்டு ஏன் இவ்வளவு பயம்?


                                            ஆங்கிலமூலம்: ஷோபா டே
                                             தமிழாக்கம்: அன்பரசு சண்முகம்


















கடந்த இரவன்று நடந்த ஒரு விருந்தில் ரோஸ்நிற ஐஸ்க்ரீமை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் அருகில் வலதுபுறமாக வந்து சரி, ஜே.என்.யு பல்கலைக்கழகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அப்போதுதான் கன்னையா குமாருக்கு இடைக்கால பிணை கிடைத்திருந்த செய்தி கிடைத்தது .அவருக்கு அப்படி பிணை கொடுத்தது சரி/தவறு என நாடெங்கும் தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. என்னிடம் கேள்வி கேட்டவர் நான் பதில் கூறும்முன்னமேயே நான் ஜே.என்.யுவில்தான் படித்தேன். பின் கொல்கத்தா சென்றுவிட்டேன். நான் அங்கிருந்தபோது தங்கியிருந்தவர்கள் மாநில அரசோடு தினமும் சண்டையிட்டு கொண்டுதான் இருந்தார்கள். பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, சண்டையிடுவது, குடிப்பது, மறியல்களை நடத்துவது என்றுதான் இருப்போம். அது இயல்பானதாகவே இருந்து வந்தது.

மாணவர்கள் நம்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்துக்கள் ஆவர். அவர்களின் செயலாற்றல் மிக்க அறிவுத்திறன், உணர்ச்சிகரமான மனநிலை என்பதை அவர்களிலிருந்து செயல்களிலிருந்து வேறுபடுத்த முடியாது. சோர்ந்த மரணித்த சமூகமாகவே நாம் இருக்கையில் அதனை இளமையான ஆற்றல் மிக்க சிந்தனை கொண்ட இளைஞர்கள் கேள்வி கேட்டால் அமைப்புக்கு எதிரானவர்கள் என்று கூறி, பன்மைத்தன்மை கொண்ட ஒரு பெரிய நாட்டின் சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள் என்று கூறுவதா? ஆட்சேபிக்கும்படி பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவான பேச்சுகளை பேசினார்கள், அப்சல் குருவை அவர்கள் தங்கள் நாயகனாக வரித்திருக்கக்கூடும் என்று குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.  சில மாணவர்கள் எழுப்பும் கோஷங்களினால், போராட்டங்களினால்  பரந்த பல்வேறு வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்ட நாடு சிதறிவிடுமா? குற்றச்சாட்டுக்கு உள்ளான கன்னையாகுமார் விடுதலையாகிவிட்டார். அடுத்த என்ன நிகழும்?

கல்லூரியில் வழக்கமாக நிகழும் நிகழ்வு ஒன்று பெரிதுபடுத்தப்பட்டு ஜனநாயகப்பூர்வமான போராட்டம், கருத்துக்களை கூறுவது உள்ளிட்டவற்றை நசுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

குறிப்பிட்ட விருந்து நடக்கும் முன்னர் அலிகார் படம் பார்த்திருந்தேன். இப்படம் ஏற்படுத்தும் விஷயங்களும் அவ்வளவு எளிதில் கடந்து வந்துவிடக்கூடியவையாக இல்லாமல் தொந்தரவு செய்வனவாக இருந்தன. இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்க கூடிய பல்வேறு சுதந்திரங்களைக் குறித்து நினைவுபடுத்திய படம் இது. அலிகார் படத்தில் நடித்திருந்த மனோஜ் பாஜ்பாயின் கண்களை என்னால் இன்னும் மறக்கவே முடியவில்லை. ஒரு உணர்ச்சியற்ற சமூகம் எப்படி தனிநபரின் சுயத்தை அழிக்கிறது என்பதைத்தான் படம் கூறுகிறது. 60 களின் மத்தியில் இருக்கும் நாயகன் தனது பால் நிலைக்காக கடும் தாக்குதலை சந்திக்க நேருகிறது. அவரினால் கே என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவருடன் வேலை செய்பவர்கள் ஏன் அவர் கொடூரமான குற்றம் புரிந்தவர் என்பது போல நடந்துகொண்டு அவரை கல்லூரியை விட்டு வெளியேற்றுகிறார்கள் என்பதை அவர் அறிய முடிவதில்லை.

ஜே.என்.யு  குறித்து சிந்தனையாளர் ஒருவரிடம் பேசியபோது, மும்பையைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் அவரை ஆண்டு விழாவிற்கு பேச அழைத்ததைப் பற்றி கூறினார். அவர்கள் தங்களுக்கு என்ன தேவையென்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே மாணவர்களுடனான சந்திப்பிற்கு நல்ல முறையில் என்னை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். தங்கள் லட்சியத்தில் தெளிவாக இருக்கும் இது போன்ற மாணவர்களை நான் இதுவரை சந்தித்ததேயில்லை என்று ஆச்சர்யமாக கூறினார். இதுபோன்ற விவாதங்களுக்கு இளைஞர்களை அனுமதித்தால் மட்டுமே நாம் நம்மை புதுப்பித்துக்கொள்வதோடு 19 ஆம் நூற்றாண்டு சிந்தனை மற்றும் பழக்கவழக்கத்திலிருந்து வெளியே வர முடியும். ஆனால் அதற்கு பதிலாக நாம் இளைஞர்களை தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை குற்றம் என்று கூறி அவர்களுக்கு தண்டனைகளை வழங்குகிறோம்.

அதிகார வர்க்கத்தின் தவறுகளை, சிக்கல்களை பேசினால் நிம்மதியிழக்கும் அதிகாரவர்க்கத்தினர் புனரமைப்பு என்பதையே அ வர்கள் முதுகில் தூக்கிவைக்க நினைக்கிறது. தங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்ளாதவர்களை கால்களால் உதைத்து முடமாக்க வெறித்தனமான கும்பல் ஒன்று தொடர்ந்து முயல்கிறது. எதிர்கருத்துக்களை முடக்குவது என்பது ஜனநாயகத்திற்கான வழியல்ல. இப்படி தொடங்கும் நடவடிக்கைகள் எங்கு சென்று முடியும் என இதற்கான எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் இறந்த காலத்திலிருந்து இன்றுவரை காணமுடியும்.  இந்த முறையில் ரோஹித் வெமுலாவின் தற்கொலை, கன்னையா குமாருக்கு கிடைத்த இடைக்கால பிணை என மாணவர்கள் மீது தொடரும் அரசின் வன்முறைக்கு கிடைத்த மாணவர்களின் எதிர்வினை அவர்களை எச்சரிக்கும் என்று நினைக்கிறேன். நம் நாட்டின் மாணவர்களை எத்தனை சிறைகளில் அடைத்து வைக்கமுடியும்? எத்தனை மாணவர்கள் மீது பழி சுமத்தி, கைது செய்து, தாக்கி, தண்டனை  தந்துவிட முடியும்? 10 லட்சம் அல்லது 10  கோடி மாணவர்களை இப்படி செய்வார்களா?

இளைஞர்களின் குரல் தெளிவாக பெரிதாக கேட்கிறது. அவற்றில் சில அரசின் காதுக்கு இசையாக கேட்காது. ஆனால் அது முக்கியமல்ல. அவர்களுக்கு பேச உரிமையுண்டு. உங்களுக்கு கேட்க பிடிக்கவில்லையெனில் காதினை அடைத்துக்கொள்ளுங்கள். லத்திகளைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் நாட்டின் மீது காதல் கொண்ட அதற்கு நேர்மையாக நடந்துகொண்டால் போதுமானது. இம்முறையில் தேசபக்தியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் மையத்தோடு சில முரண்பாடுகள் ஏற்படக்கூடும்.

தேசபக்தி என்பது எதுவென அதிகாரப்பூர்வமாக கூற யாருக்கும் உரிமையில்லை என்பதை நாம் மனதில் கொண்டால் போதுமானது.

நன்றி: டெக்கன் கிரானிக்கல், 4.3.2016  வெள்ளி





பிரபலமான இடுகைகள்