இடுகைகள்

காயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யோகா பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  ரிக் வேதத்தில் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோப்பு விற்பவர்கள் கூறுவது போல இருக்கிறது என யோசிக்காதீர்கள். எளிமையாக செய்யும் உடற்பயிற்சிதான் யோகா. உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் யோகா செய்கிறார்கள். சரியாக செய்கிறார்களா என்று கேட்கக்கூடாது. செய்கிறார்கள். அந்தே... உடல், மனம், ஆன்மா என்ற மூன்றும் ஒன்று என்று கூறிய பதஞ்சலி முனிவரின் தத்துவத்தில் யோகா பயிற்சி உள்ளது. ஒருவரின் ஆன்ம சக்தி என்பது உள்ளிழுக்கும்,வெளிவிடும் மூச்சில் உள்ளது. மூச்சைக் கட்டுப்படுத்துவதன் வழியாக உடலை புத்துயிர்ப்பு செய்வதோடு, ஆயுளையும் அதிகரிக்கமுடியும். இந்திய அரசியல்வாதிகள், வலதுசாரி கட்சிகள் யோகாவை கருத்தியலுக்காக பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல. பெரும்பாலான மேற்குலக மக்கள் அதை உடற்பயிற்சியாகவே கருதுகிறார்கள்.  பொதுவாக யோகா  பயிற்சிகள், உடலின் இறுக்கத்தை தளர்த்துபவை. உடலை இறுக்கமாக்கும் எடை பயிற்சிகள் போல அவற்றை செய்துவிட்டு குளிக்கக்கூடாது. குளித்துவிட்டு யோகா செய்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும்.

தசை இயக்கம் பற்றிய அறிவை ஆய்வாளர்கள் பெற உதவியவர்! - ஜீன் ஹான்சன்

படம்
  ஜீன் ஹான்சன் (Jean hanson 1919-1973) இங்கிலாந்தின் டெர்பிஷையர் நகரில் பிறந்தவர். பெற்றோர் டாம், எமிலி ஹான்சன் 1951ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கிங் கல்லூரியில் படித்து முனைவர் பட்டம் பெற்றார். தான் வாழ்நாளின் இறுதிவரை, இதே கல்லூரியில்தான் உயிரி இயற்பியலில் ஆராய்ச்சி செய்தார் ஜீன் ஹான்சன்.  1953ஆம் ஆண்டு ஹியூ ஹக்ஸ்லே என்ற ஆராய்ச்சியாளரைச் சந்தித்தார். இவரின் ஆதரவுடன்  எம்ஐடியில் ராக்ஃபெல்லர் உதவித்தொகையுடன் மின்னணு நுண்ணோக்கியில் தசைகளின் இயக்கம் பற்றி ஆராய்ச்சி செய்தார்.  தசை, அதிலுள்ள புரதம் சார்ந்த இயக்கம் பற்றிய ஆராய்ச்சியை செய்தார். இதற்குப் பிறகு முதுகெலும்பில்லாத உயிரினங்களின் தசைகளைப் பற்றி ஆராய்ந்தார்.   1966ஆம் ஆண்டு கிங் கல்லூரியில் உள்ள உயிரி இயற்பியல் துறையின் தலைவரானார். ஜீனின் தசை இயக்கம் பற்றிய ஆராய்ச்சி விளையாட்டு வீரர்கள் எப்படி வேகமாக ஓடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள உதவியது. இதயத்தசைகளை அறுவை சிகிச்சை செய்வது, காயங்களிலிருந்து உடல் மீள்வது பற்றிய அறிவை அடுத்த தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் பெற ஜீன் உதவினார்.  https://kingscollections.org/exhibitions/archiv

சறுக்கி கீழே விழும் அட்லாண்டிக் பஃபின் - கோமாளிப்பறவை

படம்
  கோமாளிப்பறவை அட்லாண்டிக் பஃபின்ஸ்களை, கடல் கோமாளிகள் என  கூறுகிறார்கள். இதற்கு காரணம், இதன் செயல்பாடுகள்தான். மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போல பறக்கும் இயல்புடையது. நிமிடத்திற்கு இறக்கைகளை 300 முறை அசைக்கிறது. மீன்களை வேட்டையாடினால் ஒரு டஜன் மீன்களை அலகில் பிடித்து வைத்து உண்ணும். இதன் ஆரஞ்சு நிற வளைந்த அலகு மீன்கள் கீழே விழாமல் தடுக்கிறது.  வெள்ளை முகம், ஆரஞ்சுநிற அலகு, கண்களைச்சுற்றியுள்ள கருப்பு வண்ணம் ஆகியவையே கோமாளித் தோற்றத்திற்கு காரணம்.  பஃபின்களின் ஆரஞ்சு நிறம் அதன் ஆரோக்கியத்தை குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆரஞ்சு நிறம் கோடைக்காலத்தில் இணைசேரும்போதுதான் உருவாகிறது. இப்படி ஆரஞ்சு நிறத்தை உருவாக்க, பஃபின் பறவை அதிக ஆற்றலை செலவழிக்கிறது. இணைசேரும் காலம் முடிந்தவுடன் ஆரஞ்சுநிறம் மங்கி, பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. டஃப்டட் பஃபின் (Tufted puffin), ரினோசெரஸ் ஆக்லெட் பஃபின் (Rhinoceros auklet puffin) ஆகிய பறவை இனங்களில் புருவங்கள் நீளமாக இருப்பது, நீர்யானை போன்ற முகத்தோற்றம் ஆகியவை உண்டு. இதெல்லாம் இணை சேர்வதற்கான காலத்திற்கான ஈர்ப்பிற்காக என ஆராய்ச்சியாளர

வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வேதிப்பொருள்! - கன்னபீடியால் எனும் சிபிடி

படம்
  கன்னபீடியால் - மேல்தட்டு வீரர்களுக்கான ரெகவரி மருந்து! 2018ஆம் ஆண்டு ஆன்டி டோபிங் ஏஜன்சி, கன்னபீடியாலை தனது தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கியது. இதனை மேல்தட்டு வர்க்க பணக்கார வீரர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தி வந்தனர்.  இதனை சுருக்கமாக சிபிடி என்று அழைப்பார்கள். சிபிடி - கன்னபீடியால். உடலில் சற்று வேகமாக வேலை செய்து உடல் சோர்வை குறைப்பதோடு வலி, வீக்கம் நீக்கி நல்ல தூக்கத்தை உடலுக்கு கொடுக்கிறது. மனப்பதற்றம் நீக்குகிறது.  கஞ்சா தாவரத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான வேதிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர். அதில் சிபிடியும் ஒன்று. மனிதர்களுக்கு இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. எலிகளை வைத்து செய்த சோதனையில் மேற்சொன்ன நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சிபிடி துறை 2025ஆம் ஆண்டில் ஒரு பில்லியன்  பவுண்டுகளாக உயரும் என எதிர்பார்க்கின்றனர்.  நீங்கள் அதிகளவு சிபிடியை உடலில் எடுத்துக்கொள்ளும்போது மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் சமநிலை அடைகின்றன. இதன் விளைவாக பதற்றம் தொடர்பான பிரச்னைகள் தீர்கின்றன என்று ஊட்டச்சத்து வல்லுநர் ஜெஸ்

வெற்றிபெற்ற தருணத்தை மறக்கமுடியாது! - நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர்

படம்
  வெற்றி பெற்ற தருணம்.... நிகாட் ஜரீன் உலக சாம்பியன் பட்டம் பெற்ற குத்துச்சண்டை வீரர் நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர் வெற்றிபெற்ற பிறகு என்ன செய்தீர்கள்? நான் அந்த இரவு முழுக்க தூங்கவில்லை. என் குடும்பம், மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். போனில் வந்த பல்வேறு குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டு இருந்தேன்.  உங்களது பயணம் துருக்கியில் 2011ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் ஜூனியர், யூத், இப்போது சீனியர் என பட்டங்களை வென்றிருக்கிறீர்கள். இந்த பதினொரு ஆண்டுப் பயணம் எப்படியிருந்தது? நிறைய ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் இந்த காலகட்டத்தில் இருந்தது. நான் தங்கமெடலை வென்றபோது நான் சந்தித்த சவால்கள், கஷ்டங்கள் தகுதியானவைதான் என்று தோன்றியது. எனக்கு நேர்ந்த சம்பவங்கள்தான் என்னை வலிமையானவளாக ஆக்கியது.  போராட்டம் சவால்களைப் பற்றி சொன்னீர்கள். அதனால்தான் ரெஃப்ரி உங்கள் கையை உயர்த்தியதும் அந்தளவு உணர்ச்சியை வெளிக்கொட்டினீர்களா? இதுவரை நீங்கள் இப்படி இருந்ததே இல்லை? எனது கை உயர்த்தப்பட்ட நொடியில் நான் உலகின் மிக மகிழ்ச்சியான மனிதராக மாறியிருந்தேன். ஆனால் அதேசமயம் இந்த வெற்றிக்காக எனது போரா

உடலின் அற்புத பாதுகாப்பு கவசம் - தோல்

படம்
          pixabay           உடலைச் சுற்றிய கவசம் - தோல் நமது உடலிலுள்ள தோல் அளவுக்கு நோயிலிருந்து நம்மைக் காக்கும் கவசம் வேறு இல்லை . நீர் உள்ளே போகாது , புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கிறது . உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது , வியர்வை மூலம் குளிர்ச்சி செய்வதும் கூட தோல்தான் . பல்வேறு அடுக்குகளாக உள்ள தோல் காயங்களிலிருந்தும் உடலைக் காக்கிறது . வியர்வை , வெளிப்படையாக தெரியும் கவசம் , உறுதித்தன்மை ஆகியவற்றை தோலின் முக்கியமான அம்சங்களாக கூறலாம் . வெளியே ஏப்ரல் மாத வெயில் காய்ந்தாலும் அல்லது எரிமலையே கூட வெடித்து லாவா உருகி ஓடினாலும் உடலின் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸிற்குள்தா்ன் இருக்கவேண்டும் . மூளை புத்திசாலித்திற்கான ஆதாரம்தான் என்றாலும் அதனால் வெப்பத்தை பொறுக்க முடியாது . 42 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகரித்தால் அது உயிருக்கே ஆபத்து . தோல் முழுக்க பல லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன . இவை எல்லாம் சேர்ந்து வேலைபார்த்துத்தான் தினசரி லிட்டர் கணக்கான வியர்வையை வெளியேற்றுகிறது . சில மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை