சறுக்கி கீழே விழும் அட்லாண்டிக் பஃபின் - கோமாளிப்பறவை

 










கோமாளிப்பறவை

அட்லாண்டிக் பஃபின்ஸ்களை, கடல் கோமாளிகள் என  கூறுகிறார்கள். இதற்கு காரணம், இதன் செயல்பாடுகள்தான். மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போல பறக்கும் இயல்புடையது. நிமிடத்திற்கு இறக்கைகளை 300 முறை அசைக்கிறது. மீன்களை வேட்டையாடினால் ஒரு டஜன் மீன்களை அலகில் பிடித்து வைத்து உண்ணும். இதன் ஆரஞ்சு நிற வளைந்த அலகு மீன்கள் கீழே விழாமல் தடுக்கிறது. 

வெள்ளை முகம், ஆரஞ்சுநிற அலகு, கண்களைச்சுற்றியுள்ள கருப்பு வண்ணம் ஆகியவையே கோமாளித் தோற்றத்திற்கு காரணம். 

பஃபின்களின் ஆரஞ்சு நிறம் அதன் ஆரோக்கியத்தை குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆரஞ்சு நிறம் கோடைக்காலத்தில் இணைசேரும்போதுதான் உருவாகிறது. இப்படி ஆரஞ்சு நிறத்தை உருவாக்க, பஃபின் பறவை அதிக ஆற்றலை செலவழிக்கிறது. இணைசேரும் காலம் முடிந்தவுடன் ஆரஞ்சுநிறம் மங்கி, பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது.

டஃப்டட் பஃபின் (Tufted puffin), ரினோசெரஸ் ஆக்லெட் பஃபின் (Rhinoceros auklet puffin) ஆகிய பறவை இனங்களில் புருவங்கள் நீளமாக இருப்பது, நீர்யானை போன்ற முகத்தோற்றம் ஆகியவை உண்டு. இதெல்லாம் இணை சேர்வதற்கான காலத்திற்கான ஈர்ப்பிற்காக என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

பஃபின் பறவைகளுக்கு கடல் கிளி என்ற பட்டப்பெயரும் உண்டு. 

கடலில் 60 மீட்டர் ஆழத்தில் நீந்தும் திறன் பெற்றது பஃபின். 

வானில் பறந்துவிட்டு நிலத்தில் தரையிறங்கும்போது நீரில் சறுக்கி, தரையில் தடுமாறி விழுவது வழக்கம். பஃபின் இப்படி கோமாளித்தனமாக விழுந்தாலும், வலுவான மார்புத்தசைகள் காயங்களிலிருந்து காக்கிறது. 


National geographic mar 2022

Image - National geographic


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்