கட்டுமானங்களுக்கு குப்பைகேள போதும்!

 













கட்டுமானங்களுக்கு குப்பைகளே போதும்! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் சூழலுக்கு உகந்த வகையில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்கள். இந்த வீட்டை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இதில் பயன்படுத்தும் பொருட்கள் , பலவும் குப்பைக்கிடங்கில் இருந்து பெறப்பட்டவை.  இந்த வீட்டுக்கு உரிமையாளர் அபிஷேக், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். 

இவருக்கு சூழலை மாசுபடுத்தாதபடி வீட்டைக் கட்டும் ஐடியாவைக் கூறியது பொறியாளர் வினு கோபால்.  அதனை வடிவமைத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பவாஸ் தென்கிலன். வினு கோபால், குப்பைச் சுவர் (Debris wall ) என்ற நுட்பத்தை காப்புரிமை செய்து வைத்துள்ளார். இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் கட்டடங்களை வடிவமைத்து வருகிறார். இவர், உருவாக்கும் கட்டடங்கள் அனைத்துமே பிறர் தூக்கியெறிந்த குப்பைகளாலானவை. 

 கட்டுமானப் பொருட்களை 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள குவாரி, கட்டுமான இடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்.  அதை சேகரித்து வீடுகளை கட்டிவருகிறது வினுவின் குழு. இந்த வகையில்  தூக்கியெறியப்பட்ட கம்பிகள், டயர்கள் என எதையும் விடுவதில்லை. 

”நாங்கள் குப்பைகளிலிருந்து வீடுகளைக் கட்டத் தொடங்கியபோது, சிமெண்டைச் சார்ந்தே கட்டுமானத்துறை இயங்கியது. அதேசமயம் மண்வீடுகளைக் கட்டுவது கடினமானதாக இருந்தது. கட்டுமானத்திற்கான கம்பியைக் கூட எளிதாக வாங்கிவிடலாம். ஆனால், வீடு கட்டுவதற்கான மண்ணை ஓரிடத்தில் தோண்டி எடுக்க, பல சட்டச்சிக்கல்களைச்  சந்தித்தோம்” என்றார் வினு டேனியல்.  “இதுபோன்ற கட்டடங்களை கட்ட என்ன, எப்படி என்ற கேள்விகளைக் கேட்டுப்பார்த்து பதில் தெரிந்துகொண்டால் போதும்” என்றார் பாண்டிச்சேரியைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் திருப்தி தேசாய். 

அண்மையில், இவர் கைவண்ணத்தில் உருவான கிராடியூட் வில்லா கட்டடம், இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிசு பெற்றுள்ளது. கான்க்ரீட்டிற்கு நிலக்கரி சாம்பலைப் பயன்படுத்தியதால், 180 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு குறைந்துள்ளது. இதனால் திருப்தியின் கட்டடத்திற்கு பசுமைக் கட்டட அங்கீகாரம் கிடைத்துள்ளது.  பாண்டிச்சேரிக்கு வெளியில் கட்டிய சரணம் (sharanam) எனும் கிராம மேம்பாட்டு மையம், ஐ.நாவின் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின்(UNEP) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 


TOI

Building it  from the scrap (Saranya chakrapani)

Times of india  20.2.2022

https://palmexindia.com/women-eco-friendly-architecture-india/

https://www.wallmakers.org/about

https://www.truptidoshi.com/

கருத்துகள்