இடுகைகள்

சீரியல் கொலைகார ர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சடலங்களை மறைக்க சீரியல் கொலைகாரர்கள் மெனக்கெடுகிறார்களா?

படம்
                சித்திரவதை தொடர் மற்றும் சைக்கோ கொலைகார ர்களை மோசமானவர்கள் என்று எப்படி பிரிப்பது , இதற்கு பலரும் பல்வேறு வித எடுத்துக்காட்டுகளை கூறுவார்கள் . ஆனால் எளிதான ஒன்று யார் உங்களையும் , உங்களது நண்பர்கள் , குடும்ப உறுப்பினர்களை கொல்கிறார்களோ அவர்கள்தான் என்று கூறலாம் . ஒரு கொலைகாரர் எந்தளவு மோசமானவர் என்பதை அவர் செய்யும் சித்திரவதையை வைத்து முடிவு செய்யலாம் . இந்த வகையில் டெப்ரி டாமர் , அனைத்து குற்றவாளிகளுக்கும் முன்னோடியான ஆள் . இவர் , தான் கொல்லும் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பிறகு தலையில் ட்ரில்லிங் மெஷி்ன் வைத்து துளையிடுவார் . பிறகு அமிலங்களை எடுத்து உள்ளே ஊற்றுவார் . இதனால் பலரும் மயக்கத்தில் இருக்கும்போது , இறந்துபோனார்கள் . எதற்கு இப்படி சித்திரவதை செய்தீர்கள் என்று விசாரித்தபோது , நான் செய்யும் விஷயங்களை வலியில்லாமல் செய்ய நினைத்தேன் என பேட்டி கொடுத்தார் டாமர் . பிரான்சில் குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்ற கில்லெ்ஸ் டி ரைஸ் , பதினைந்தாம் நூற்றாண்டில் முக்கியமான கொலையாளி . இதற்கு அடுத்து ஆல்பர்ட் பிஷ் உள்ளே வர

சீரியல் கொலைகாரர்களுக்கான கலாசாரம், அறிகுறிகள், குணங்கள் !

படம்
                      சைக்கோ கொலைகாரர்களின் கலாசாரம் சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய அறிமுகத்தை நான் முன்னமே உங்களுக்கு அசுரகுலம் நூலில் தந்துவிட்டேன் . இந்த இரண்டாம் பாகத்தில் குற்றவாளிகளின் உருவாக்கம் , காலத்தின் பங்கு , அதைச்சார்ந்து இயங்கும் மனிதர்கள் , ஊடகங்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி பேசலாம் . ஹிட்லர் , முசோலினி ஆகியோர் கொடுங்கோலர்கள் , அவர்கள் குறிப்பிட்ட மக்களின் மீது வெறுப்பைத் தூண்டினார்கள் , மக்களை அழித்தொழித்தார்கள் என்று ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன . அவை உண்மைதான் . அதேசமயம் அதற்கு தூண்டுதலாக இருந்த காலம் , நாட்டில் நிலவிய வறுமை , பொதுநலனை குலைத்த சுயநலம் , யார் மீது குற்றம்சாட்டுவது என பரிதவித்த மக்களின் மனநிலை ஆகியவையும் சர்வாதிகாரிகள் உருவாகுவதற்கு காரணம் . வரலாற்றில் கொடூரமான ஆட்சியாளர்களை மக்களேதான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள் என்பது நகைமுரணாக தோன்றலாம் . ஆனால் ஜனநாயகம் இப்படித்தான் இயங்குகிறது . சீரியல் கொலைகாரர்கள் என்பது எப்போதும் ஊடகங்களுக்கு தனி கலாசாரம் போல , சுவாரசியமான விஷயமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது