இடுகைகள்

மண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்றிலுள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வளரும் தாவரம்!

படம்
  காற்றில் தாவரம்! பெரிய மரத்தின் இடையே சிறு செடிகள் வளருவதைப் பார்த்திருக்கிறீர்களா? மரத்தில் கணுக்களுக்கு இடையில் சிறு செடிகள் வளரும். இவை, வளர மண் தேவையில்லை. காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வாழ்கின்றன. இத்தாவர இனங்கள், ஒட்டுண்ணி போல மரத்தில் இருந்து சத்துகளை உறிஞ்சுவதில்லை. இந்த தாவர இனங்களுக்கு  எபிபைடஸ் ( ) என்று பெயர். பொதுவாக கூறும்போது காற்றுத் தாவரங்கள் என்று தாவரவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  எபிபைடெஸ் இன தாவரங்கள் வெப்பமண்டல மழைக்காடுகளில் அதிகம் வளர்கின்றன. இங்கு வெளிச்சம் அதிகம் கிடைக்காது. ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இன்று அடர்ந்த காடுகளிலிருந்து எபிபைடெஸ் இன தாவரங்களை மக்கள் பலரும் வீடுகளில் அலங்காரச் செடியாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  https://www.allaboutgardening.com/epiphytes/

கண்களைக் கவரும் வெப்ப நீரூற்று!

படம்
  ஆளை மயக்கும் வண்ணத்தில் வெப்ப நீரூற்று!  ஃபிளை கீசர்  ( Fly geyser ) அமெரிக்காவின் நெவடாவில் பிளாக் ராக் பாலைவனம் உள்ளது. அங்குதான் ஃபிளை கீசர் அமைந்துள்ளது. ஹூவாலாபெய் எனுமிடத்தில் உள்ள வெப்ப நீரூற்று இது. பூமியின் ஆழத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக இந்த நீரூற்று உருவானது. மலைகளின் வினோதமான நிறம் நீரூற்றில் கலந்துள்ள கனிமம் மற்றும் சில தாவர இனங்கள் காரணமாக ஏற்படுகிறது. பாலைவனத்தில் முன்னர் ஏரி ஒன்று இருந்தது. தற்போது அது, வறண்ட ஏரிப்படுகையாக உள்ளது.  நீரூற்றின் உயரம் 3.7 மீட்டர் ஆகும். இதிலிருந்து சூடான நீர் பீய்ச்சி அடிப்பதை பல கி.மீ. தொலைவிலிருந்தும் பார்க்கலாம். 1916ஆம் ஆண்டு மனிதர்கள் விவசாய நீர்தேவைக்காக நிலத்தை துளையிட, அதிலிருந்துதான் வெப்ப நீரூற்று வெளியாகத் தொடங்கியது. பிறகு இதற்கு நூறு அடி தள்ளி மற்றொரு இடத்தில் ஆய்வு நிறுவனம், நிலத்தில் துளையிட்டது.  அதிலும் வெப்பமான நீர் கிடைத்தது. ஆனால் அவர்கள் நினைத்தளவு வெப்பம் கிடைக்கவில்லை. இதன் வழியாக உருவானதுதான்  ஃபிளை கீசர். இதற்கு அடுத்து இங்கு 2006இல் இயற்கையான உருவான நீரூற்றின் பெயர், வில் கீசர்.   சில நாட்களுக்கு ஒருமுறை வெப்

தெரியுமா? புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்!

படம்
  தெரியுமா? ஆக்சலரோகிராஃப் (Accelerograph) நிலநடுக்கத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி. இதிலுள்ள மூன்று ஆக்சலரோமீட்டர் தலைப்பகுதி, நிலநடுக்கத்தை அளவிடுகிறது. இதனை இணையத்தில் நேரடியாகவும் இணைத்து பயன்படுத்தலாம்.  ஆக்சலரோமீட்டர் இக்கருவியை ஹெலிகாப்டர், கப்பல், விமானம் ஆகியவற்றில் ஈர்ப்புவிசை சார்ந்த ஆய்வுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். சீஸ்மோமீட்டரையும் ஆக்சலரோமீட்டராக பயன்படுத்தலாம்.   ஆசிட் ராக்  பாறையில் 60 சதவீத அளவுக்கு சிலிகா  இருந்தால் அல்லது சிலிகா கனிமங்களாக இருந்தால் அதற்கு ஆசிட் ராக் என்று பெயர். இதில் பத்து சதவீதம் அளவுக்கு குவார்ட்ஸ் இருக்கும். 

90 நொடியில் மண்ணில் இயல்பை அறியலாம்!

படம்
  90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.  மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத் வழியாக இணைத்தால் 90 நொடிகளில

பாறைகள் மண்துகள்களாக மாறும் செயல்பாடு! - ஆர்கானிக் வெதரிங்

படம்
  பாறைகளில் ஏற்படும் மாற்றம்! நடக்கும்போது, விளையாடும்போது காலில் ஒட்டியுள்ள மண்ணைப் பார்த்திருப்பீர்கள். இந்த மண் எப்படி உருவாகிறது என அறிவீர்களா? பாறைகள் மெல்ல உடைந்து துண்டுகளாகி, சிறு துகள்களாகி மண்ணாகிறது. இயற்கையாக நடைபெறும் இச்செயல்பாட்டிற்கு, வெதரிங் (weathering) என்று பெயர்.  பாறைகள் உடைந்து சிறு துண்டுகளாகி மண் துகள்களாக மாறுவதற்கு மரம், விலங்குகள், நுண்ணுயிரிகள், மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக உள்ளன. இதனை  சூழலியல் வல்லுநர்கள், பயாலஜிகல் வெதரிங் (Biological weathering)என்று குறிப்பிடுகின்றனர். ஷ்ரூஸ் (Shrews), மோல்ஸ் (Moles), மண்புழுக்கள், எறும்புகள்  ஆகியவை பாறையில் துளைகளையும், விரிசல்களையும் ஏற்படுத்துகின்றன. இவற்றில், பறவைகள் தம் எச்சம் மூலமாக  விதைகளை விதைக்கின்றன. விதைகள் முளைத்து செடியாகி, மரமாகும்போது பாறை மெல்ல உடைபடுகிறது.  சயனோபாக்டீரியா (Cyanobacteria),  பாறையில் வளரும் செடிவகை (Lichens), பாசி, பூஞ்சை ஆகியவையும் பாறைகளைத் துளையிடுகின்றன. இதற்கு, வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக பாறையிலிருந்து, தனக்குத் தேவையான கனிமங்களைப் பெறுகின்றன. பிட்டாக் ஷ

மண்ணிலுள்ள அமிலங்கள், பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி! - தெரியுமா?

படம்
  மண்ணிலுள்ள அமிலங்கள்! இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் ஒரேமாதிரியான சத்துக்களை கொண்டிருப்பவை அல்ல. சில இடங்களிலுள்ள நிலங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். மண்ணிலுள்ள அமிலத்திற்கு எதிரிடையான வேதிப்பொருளை மண்ணில் பயன்படுத்தும்போது மண், பயிர்களை விளைவிப்பதற்கு ஏதுவான நிலையைப் பெறும். பெரும்பாலான பயிர்கள் அமிலம், காரம் என அதிகம் மிகாத மண்ணில்தான் சிறப்பாக விளைகிறது.  மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கும் அதிலுள்ள அமில, கார அளவுகள் முக்கியமானவை. ஆசியா மற்றும் அமெரிக்காவில் அதிகம் விளையும் பூ தாவரம், ஹைட்ரேஞ்சியா (Hydrangea). இந்த தாவரம் அமிலம் நிரம்பிய மண்ணில் விளைந்தால், நீலநிற பூக்களும், காரம் நிரம்பிய மண்ணில் விளைந்தால் ரோஸ் நிற பூக்களையும் பூக்கின்றன. மண்ணிலுள்ள அமில, கார அளவை பிஹெச் அளவுகோல் மூலம் எளிதாக கணக்கிடலாம்.  மேற்குலகில் நிலத்திலுள்ள அமிலத்தன்மையை சீர்படுத்த சுண்ணாம்பை பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, நிலத்தின் அமிலத்தன்மை நடுநிலையாக பிஹெச் 7 என்ற அளவுக்கு மாறுகிறது.  பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி ( Biome Domes )  உலகில் பாலைவனங்கள், காடுகள் என பல்வேறு நிலப்பரப்புகள்  உண்டு.

மண்ணின் தரத்தை 90 நொடியில் அறியலாம்!

படம்
  90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.  மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத் வழியாக இணைத்தால் 90 நொடிகளில

கரையான்புற்று எப்படி உருவாகிறது?

படம்
  கரையான்கள் மரம், செடிகளில் வெளிப்புற ஓட்டிலுள்ள செல்லுலோஸை (cellulose) உண்ணும் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. எறும்பு, குளவிகள் ஏன் கரப்பான்பூச்சிகளுக்கும் நெருங்கிய உறவுகொண்டவை. உலகம் முழுவதும் 2,750 கரையான் பூச்சி இனங்கள் உள்ளன.  காடுகளில் இறந்துபோன மரங்களை அரித்து தின்று மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. அதேவேளையில் கட்டுமானங்களிலுள்ள  மரப்பொருட்களையும் விட்டுவைப்பதில்லை. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவீனமடைகின்றன.  கரையான்கள் ஆப்பிரிக்காவின் சாவன்னா, பசிபிக் கடல் பகுதிகள், பருவமழைக்காடுகளில் புற்றைக் கட்டி வாழ்கின்றன. மரங்களை அரித்து நார்ச்சத்து பொருளான செல்லுலோஸை அதிகளவு உண்டாலும் அதனை எளிதில் செரிக்க ஒருவித பாக்டீரியாவை உடலில் கொண்டுள்ளன. கரையான் புற்றுகள் (termitarium) உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதில் 2 லட்சம் கரையான்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.    கட்டுமானப் பொருட்கள் கரையான்கள், தூய்மையான மண் மற்றும் தம் கழிவுகளைக் கொண்டு புற்றுகளை எழுப்புகின்றன. இவை விரைவில் காய்ந்துவிடுவதால் உறுதியாக இருக்கும்.  இடம்  உயர்ந்த மலைப்பகுதி, மரங்களின் அடிப்பகுதி, நிலத்த

மரம் நடுவது கார்பனைக் குறைக்காது - புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

படம்
மரம் நடுவது மட்டுமே தீர்வல்ல! செய்தி: வெப்பமயமாதல் விளைவால் 2050 ஆம் ஆண்டு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மரக்கன்றுகள் நடுவதைக் கடந்து கார்பன் அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.  நீராதாரம் பெருகவும், வெப்பநிலை பாதிப்பைக் குறைக்கவும் சூழலியலாளர்கள் சொல்லும் ஒரே தீர்வு, மரக்கன்றுகளை நடுவதுதான். ஆனால் உலகில் வெளியாகும் டன் கணக்கிலான கார்பன் வெளியீட்டுக்கு மரக்கன்றுகள் நடுவது தீர்வாகுமா என ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம், வெப்பமயமாதலின் விளைவாக ஐரோப்பாவில் வெப்ப அலை பாதிப்புகள் தொடங்கிவிட்டன. விவசாயம், விமானத்துறை, இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆகியவை மூலமாக வெளியேறும் கார்பன் வெளியீடு அதிகம். இதனைக் குறைந்த விலையில் சமாளிக்க மரங்கள் உதவலாம். இதற்கு மாற்றாக சூழலியலாளர்கள் சொல்லும் யோசனை, மரங்களை வளர்த்து, வெட்டி மின்சாரத்திற்கு பயன்படுத்தலாம். பின்னர், அதிலிருந்து வரும் கார்பனை சேகரித்துவைக்கும் இம்முறைக்கு பயோஎனர்ஜி கார்பன் கேப்சர் அண்ட் ஸ்டோரேஜ் (BECCS) என்று