மண்ணிலுள்ள அமிலங்கள், பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி! - தெரியுமா?
மண்ணிலுள்ள அமிலங்கள்!
இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் ஒரேமாதிரியான சத்துக்களை கொண்டிருப்பவை அல்ல. சில இடங்களிலுள்ள நிலங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். மண்ணிலுள்ள அமிலத்திற்கு எதிரிடையான வேதிப்பொருளை மண்ணில் பயன்படுத்தும்போது மண், பயிர்களை விளைவிப்பதற்கு ஏதுவான நிலையைப் பெறும். பெரும்பாலான பயிர்கள் அமிலம், காரம் என அதிகம் மிகாத மண்ணில்தான் சிறப்பாக விளைகிறது.
மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கும் அதிலுள்ள அமில, கார அளவுகள் முக்கியமானவை. ஆசியா மற்றும் அமெரிக்காவில் அதிகம் விளையும் பூ தாவரம், ஹைட்ரேஞ்சியா (Hydrangea). இந்த தாவரம் அமிலம் நிரம்பிய மண்ணில் விளைந்தால், நீலநிற பூக்களும், காரம் நிரம்பிய மண்ணில் விளைந்தால் ரோஸ் நிற பூக்களையும் பூக்கின்றன. மண்ணிலுள்ள அமில, கார அளவை பிஹெச் அளவுகோல் மூலம் எளிதாக கணக்கிடலாம்.
மேற்குலகில் நிலத்திலுள்ள அமிலத்தன்மையை சீர்படுத்த சுண்ணாம்பை பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, நிலத்தின் அமிலத்தன்மை நடுநிலையாக பிஹெச் 7 என்ற அளவுக்கு மாறுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக