இடுகைகள்

நூல்வெளி2: ப்ராட்லி ஜேமஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல்வெளி 2: புகழ்பெற்ற சிறுகதைகள்

உலகம் உங்கள் கையில் உலகப்புகழ் சிறுகதைகள் பேரா.கி.நடராஜன் பாவை பப்ளிகேஷன்ஸ் விலை ரூ. 70 இந்நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. அதனை டால்ஸ்டாய் செகாவ், மாப்பசாந், டாஸ்டாவ்ஸ்கி, சோமர்செட்மாம், ஓ ஹென்றி, ஆஸ்கார் வைல்ட், ஜேம்ஸ் தர்பர்,ஆர்.கே. நாராயணன் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர்.  முதல் கதையான மூன்று துறவிகள் கதை அனைவருமே வாசித்திருக்கக்கூடிய கதைதான். சடங்குகளை ஒழித்து தூய மனதோடு இறைவனை நினைத்திருந்தால் போதும் என்னும் டால்ஸ்டாய் எழுதிய கதை. தன்னலமிக்க அரசன், மேகிக்களின் அன்பளிப்பு போன்றவற்றை நீங்கள் நிச்சயம் உங்களது ஆங்கில துணைப்பாடத்திலேயே வாசித்திருக்கலாம். அதைப்பற்றி மாங்கு மாங்கு என்று பரீட்சையிலே விளக்கு விளக்கு என்று விளக்கிவிட்டதால் அக்கதைகள் குறித்து புதிதாக சொல்ல ஏதும் இல்லை. புள்ளிபோட்ட வளையம் - ஆர்தர் கானன்டாயில், நகைகள் - கைடி மாப்பசாந், தாயார் - சோமர்செட் மாம், ஜோஸியக்காரனின் வாழ்க்கையில் ஒரு நாள் - ஆர்.கே. நாராயணன்  என இக்கதைகள் புதிதான வாசிப்பனுபவத்தை அளித்தன என்று கூறமுடியும். புள்ளி போட்ட வளையம் கதையில் சுவாரசியம் என்னவென்றால் ஷெர்லாக் ஹோம்ஸ் அக

பேருயிரின் அழுகை: நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
யானைகள் ஆதியில் இருந்தன கோவை சதாசிவம் தடாகம் வெளியீடு விலை ரூ.40 தலைப்பு உணர்த்துவதுதான். பத்திரிகைச் செய்திகளில் அட்டகாசம்  அட்டூழியம் என்று திட்டமிட்டு எழுதி எழுதி எப்படி ஒரு பேருயிரை மனிதர்களுக்கு எதிராக நிறுத்தி பொதுக்கருத்து ஒன்றினை உருவாக்கி அதனை எப்படி மெல்ல அழித்தார்கள் என்பதை விளக்குகின்ற நூல் இது. காடு இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம் இது. இதுவேறுபடுவது எங்கென்றால் சங்க காலப் பாடல்களிலிருந்து யானைகள் குறித்த தரவுகளை மேற்கோள் காட்டி விளக்கி இன்றைய காலத்தில் நிலைமை எப்படியுள்ளது என்று விளக்குகின்ற தன்மையில்தான்.  அதோடு யானை என்றால் பொதுவாக அதன் பழக்கவழக்கங்கள் எப்படி என்று அறியாது அறியாமையால் கூறிவரும் சில பொதுவான வழக்குகளான யானைக்கும் அடி சறுக்கும், தன் தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்டது என்பது போலான வார்த்தைகளுக்கு அறிவியல் பூர்வமான முறையில் விளக்கமளித்துள்ளார் ஆசிரியர் சதாசிவம்.  சங்க காலத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுக்கு பரணி பாடுவதிலிருந்து அலங்காரப் பொருட்களுக்காக அதனை சுட்டுக்கொல்வது வரையிலான பல குற்றங்களை பட்டிலிடும்போது உண்மையிலே மனம்

வனங்களின் சிப்பாய்

படம்
எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள் நக்கீரன் தடாகம் வெளயீடு விலை : ரூ. 30 இந்த நூலில் எறும்புகள் எனும் சிற்றுயிர்கள் மனிதர்களுக்கு என்ன செய்கின்றன என்பதைக் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் நூலாசிரியர் நக்கீரன். குரங்களுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமையைக்காட்டிலும் எறும்புகளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமையை பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் வழியே நிறுவுகின்ற இடம் சிந்திக்கவைப்பதாக உள்ளது.  இன்றைய நாளில் மனிதர்கள் தம்மைத்தாண்டி எந்த உயிர் குறித்தும் நினைப்பதேயில்லை. ஆனால் அப்படி அமெரிக்காவில் சிவப்பு எறும்புகளை அழிக்கச் செய்த விபரீத முயற்சி பின்னாளில் அந்த விளைநிலத்தை பாலைவனமாக்கி விவசாயிகளின் வாழ்வை அழித்த கதையோடு அதை நடத்தி பூச்சிக்கொல்லி வணிகர்கள் எப்படி பொய்யாக கட்டுக்கதையை உருவாக்கினார்கள் என்பதையும் விரிவாகப் பேசுகிறார் நக்கீரன்.  பிரம்ம புத்திரா ஆற்றின் மறுபுறமிருந்த மணல் திட்டுகளை உள்ளடக்கி மலட்டுத்தன்மை கொண்ட மண்ணை எறும்புகள் மூலம் தனிமனிதர் அதனை அடர்வான காடாக உருவாக்கிய செய்தி தனிமனிதராக ஒருவரின் ஆழமான எண்ணத்தின் ஆற்றலை கூறுகிறதாக இருந்தாலும் அரசு இது குறி

கிறுகிறுவானம்: தீராத கதைகளின் வானம்

படம்
கிறுகிறுவானம் எஸ்.ராமகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம் விலை ரூ. 25 புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள கிறுகிறுவானம் குழந்தைகளுக்கான கதைப்புத்தகமாக நேர்த்தியாக 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இது முழுக்க கிராமத்து சிறுவனின் தினசரி வாழ்க்கை, ஏக்கங்கள், தவிப்பு, ஆசை, கஷ்ட நஷ்டங்களைப் பேசுகிறது.  எஸ்.ராமகிருஷ்ணன்தான் அந்த குழந்தையாக மாறி எழுதுவது என்பது சில விவரிக்கும் செயல்பாடுகளில் தெரிகிறது எ.கா: சுடு சோறும், முட்டைப்பொரியலும் சாப்பிட்ட சக மாணவனின் கையை நக்குவது, பக்கத்துவீட்டில் சாப்பிடும்போது இரண்டாவது தோசையைக் கேட்பது என்பதைக் குறிப்பிடலாம்.  குழந்தைகள் பேருந்துகள், ரயில்வே என எங்கும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இதிலும் ஓட்டப்பல்லு என்றழைக்கப்படும் சிறுவன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். தனக்கு பிடித்தவர்களைப் பற்றிக் கூறும் போது தன் வீட்டில் இருக்கிற ஆடு, கோழியையும் எளிமையாக வகைப்படுத்தி தன்னோடு சேர்த்து ஓர் உயிராக  பார்க்கும் பார்வை வசீகரம்.  சாப்பாடும் கூப்பாடும்,  கைநிறைய பொய், அழுவேன் உருள்வேன் எனக்கு மிகப்பிடித்த பகுதிகளாக கூறுவேன். இவற்றில் அவர் எப்போதும் எழுதும்

நூல்வெளி2: நம் காலத்து நாயகன்

படம்
நம் காலத்துக்கு நாயகன் மி.யூ. லேர்மன்தவ் தமிழில்: பூ.சோமசுந்தரம் சந்தியா பதிப்பகம் விலை: ரூ.80  போர்படையில் குறிப்பிட்ட பதவி வகிக்கும் ஒருவர் தன் பயண வழியில் படைப்பிரிவில் முக்கியமான பதவி வகிக்கும் மக்ஸீம் மக்ஸீமிச் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மெல்ல தன் வாழ்க்கையை போர்ப்படை வீரரிடம் கூறுகிறார். அப்போதுதான் பிச்சோரின் என்னும் மனிதரைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார். இந்நாவலின் நாயகனும் பிச்சோரின்தான். ஆனால் உண்மையில் இவனை நீங்கள் ஏற்றுக்கொள்வது என்பது மிக கடினமான ஒன்றே. ஆனால் நாயகர்கள் எல்லோரும் உண்மையில் அகம் புறம் இருபத்திநான்கு மணி நேரமும், ஏழு நாட்களும் எப்படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வரும் பிச்சோரின் செய்வதையெல்லாம் பார்த்தால். கதையில் வரும் மக்ஸீம் பிச்சோரின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். ஆனால் பிச்சோரின் அவரைச் சந்தித்தாலும் முடிந்தவரை அவரைத் தவிர்த்து விட்டு கிளம்பவே விரும்புகிறான். அவன் எழுதிய குறிப்புகளை தன் வண்டிக்குள் வைத்திருக்கிற மக்ஸீம், அதை தனது பயண வழி நண்பரிடம் கொடுக்க மக்ஸீம் சொல்லி முடித்தவரையிலான கதை மெல்ல பிச்சோரின

நூல்வெளி2: ஐந்து சகோதரர்கள்

படம்
5 சீன சகோதரர்கள் சீன நாட்டுப்புறக் கதைகள் கூத்தலிங்கம் புக்ஸ் ஃபார் சில்ரன் விலை: ரூ. 10 இந்த நூலில் மொத்தம் நான்கு கதைகள் உள்ளன. அனைத்துமே எளிமையான தன்மை கொண்டதாக எதையும் பிரசாரம் செய்யும் தன்மையில் அமையாதவை என்பவை இதில் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் இது ஒரட்டாங்கை குழுவினரது பதிப்பகம் சார்ந்த நூல் அல்லவா!     5 சகோதரர்கள் கதை ஒன்று போலவே இருக்கும் 5 சகோதரர்களின் இயல்பான சக்தி மூலம் அவர்கள் எப்படி ஒரு வழக்கிலிருந்து தப்பிக்கிறார்கள் என்று கூறும் கதை. இத்தொகுப்பில் மார்வெல் காமிக்ஸ் போல நம்மை வசீகரிக்கும் ஒரு கதை என்று கூறலாம்.      ஏழு வண்ண இளம்பெண்கள் கதை என்பது என்ன தலைப்பு கேட்டவுடன் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அதேதான். ஒற்றுமை என்பதை வெளிப்படுத்தும் கதை.       எதிரொலி கதை வனதேவதைக்கு நேர்ந்த சாபத்தின் வழி எப்படி காடு அல்லது மலை நமது குரலை ஒலிக்கிறது என்று தெரிந்துகொள்ளும் விதமாக உள்ளது.        பசுமை தேவதை கதையை நாம் தொடர்ந்து சிறு சிறு தொன்மைக் கதைகளை படமாக எடுத்து கல்லா கட்டும் டிஸ்னி வகையறா என்று கூறலாம். பல உணர்ச்சிகரமான காட்சிகள், மகிழ்ச்சி, நெஞ்சை பிழியும்

நூல்வெளி2: கங்கையாக மாறும் கங்கவ்வாவின் கதை

படம்
கங்கவ்வா கங்கா மாதா கன்னட மூலம்: சங்கர் மோகாசி புணேகர் இந்தி வழி தமிழ்: எம்.வி. வெங்கட்ராம் வெளியீடு : நேஷ்னல் புக் ட்ரஸ்ட் சங்கர் மோகாசி புணேகர்               இந்த நாவலின் தொடக்கத்தில் கங்கவ்வா காசி விஸ்வநாதரை சென்று பார்த்துவிட்டு திரும்புகையில் ஏறத்தாழ அவளது வாழ்க்கையில் அவளது கடமைகளை பெருமளவு திருப்தியாக முடித்து விட்டிருக்கிறாள். அப்போதே அவளுக்கு கங்கையில் குதித்து உயிரை விடத் தோன்றுகிறது. ஆனால் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு எளிதில் யார் வெளியேறிவிட முடியும்?  தன் மகனது திருமணம், வளமான வாழ்க்கையை கண்டுவிட்டு பின்தான் இறப்பு  என்று நினைத்து வீட்டிற்கு கொண்டுவ ரும் கங்கை நீரைக் கூட வாழவேண்டும் வாழ்வேன் என்று தைரியமாக நடு இரவில் ரயிலிலிருந்து கீழே கவிழ்த்துவிடுகிறாள். இதை வாசிக்கும் போது  கதை முடிந்து விட்டது போல் தோன்றும். ஆனால் கதை தொடங்குவது இதிலிருந்துதான்.             கங்கவ்வா, பகதூர் தேசாய், கங்கவ்வாவின் தம்பி ராகப்பா ஆகிய மூன்று குடும்பங்களைச் சுற்றித்தான் கதை நிகழ்கிறது. கங்கவ்வாவின் கணவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு செய

நூல்வெளி2: வாழ்க்கைக்கான மருந்து இது

படம்
மருந்தென வேண்டாவாம் மருத்துவர் கு. சிவராமன் வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்        மருத்துவர் கு. சிவராமன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய  இந்நூல் ஈரோடு புத்தகச்சந்தையில் கூட 'டாக்டரு புதுசா சீசனுக்கு எழுதியிருக்காரு போல' என்று மக்களால் பரபரப்பாக வாங்கப்படும் உணவு குறித்த முக்கியமான நூல்தான். ஐந்தாம் பதிப்பு விரைவில் காணும் என்று நினைக்கிறேன். குமுதம் சிநேகிதியில் தொடராக வெளிவந்து பின் லோகத்தின்ட தோஸ்த் நிறுவனத்தினால் புத்தகமாக போடப்பட்டுள்ளது.          இந்நூலில் மரு. சிவராமன் தமிழ்நாட்டு பருவநிலைக்கு ஏற்றபடியான உணவுவகைகளை ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதாமல் நமது நண்பர் ஒருவர் மருத்துவமும் தெரிந்திருந்தால் எப்படி நமக்கு அந்த மருந்துகள் குறித்து கூறுவாரோ அதுபோல மிக எளிமையான எழுத்துக்களால் பகிர்கிறார். இந்நூலை வெறும் உணவு குறித்த நூல் என்று எண்ணிப் படிக்கத்தொடங்கும் ஒருவரை கட்டிப்போட்டு வசீகரிப்பதும் அதுதான்.          கொள்ளு, வாழை, வெங்காயம், மிளகு குறித்து கூறும் தகவல்களோடு அதை எப்படி பயன்படுத்துவது என்றும் சில உணவு முறைகளை எழுதியுள்ளார். அவை நிச்சயம் ந

நூல்வெளி2: பன்றித்தீனி

படம்
புதிய கலாச்சாரத்தின் சிறுவெளியீடான பன்றித்தீனி நூல் நாம் நடைமுறை வாழ்வில் உண்டுகொண்டு இருக்கும் நெஸ்லே பொருட்கள், கோககோலா, பெப்ஸி உள்ளிட்ட பொருட்களின் பின்னேயுள்ள அரசியல் முதற்கொண்டு அதனால் நமது உடல் என்னமாதிரியான பாதிப்புகளுக்கு ஆட்படுகிறது என்பது வரையிலும் தெளிவாக எடுத்துரைக்கிற நூலாக உள்ளது.                நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸ் வகைக்கு அரசு தடை விதித்துள்ளதைக் குறித்து தொடங்கும் கட்டுரை, அந்நிறுவனம் தனது பால் விற்பனைக்காக தென்னாப்பிரிக்காவில் புட்டிப்பால் சிறந்தது என்று கூறி பல லட்சம் மக்களை கொன்றழித்தது பற்றியும், அந்நிறுவனத்தில் நீர் வணிகம் எப்படி அப்பட்டமான நுகர்வுச்சூழலை உருவாக்கி ஏழை அடித்தட்டு மக்களை மெல்லக் கொல்லுகிறது என்பதையும் விரிவாகப் பேசுகிறது.             கோலா பானங்கள் குறித்த கட்டுரை அவற்றின் அரசியல் லாபிகள் குறித்தும் தாராளமயமாக்கல் சூழலில் உள்ளே நுழைந்து இந்திய நிறுவனமான பார்லே நிறுவனத்தில் வியாபாரத்தை முற்றிலும் ஒடுக்கியதோடு அந்நிறுவனத்தின் குளிர்பானப் பிரிவையும் அடிமாட்டு விலைக்கு தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்தது குறித்தும் விரிவாக ஆழம