நூல்வெளி2: ஐந்து சகோதரர்கள்

5 சீன சகோதரர்கள்
சீன நாட்டுப்புறக் கதைகள்
கூத்தலிங்கம்
புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: ரூ. 10











இந்த நூலில் மொத்தம் நான்கு கதைகள் உள்ளன. அனைத்துமே எளிமையான தன்மை கொண்டதாக எதையும் பிரசாரம் செய்யும் தன்மையில் அமையாதவை என்பவை இதில் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் இது ஒரட்டாங்கை குழுவினரது பதிப்பகம் சார்ந்த நூல் அல்லவா!

    5 சகோதரர்கள் கதை ஒன்று போலவே இருக்கும் 5 சகோதரர்களின் இயல்பான சக்தி மூலம் அவர்கள் எப்படி ஒரு வழக்கிலிருந்து தப்பிக்கிறார்கள் என்று கூறும் கதை. இத்தொகுப்பில் மார்வெல் காமிக்ஸ் போல நம்மை வசீகரிக்கும் ஒரு கதை என்று கூறலாம்.
     ஏழு வண்ண இளம்பெண்கள் கதை என்பது என்ன தலைப்பு கேட்டவுடன் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அதேதான். ஒற்றுமை என்பதை வெளிப்படுத்தும் கதை.
      எதிரொலி கதை வனதேவதைக்கு நேர்ந்த சாபத்தின் வழி எப்படி காடு அல்லது மலை நமது குரலை ஒலிக்கிறது என்று தெரிந்துகொள்ளும் விதமாக உள்ளது.
       பசுமை தேவதை கதையை நாம் தொடர்ந்து சிறு சிறு தொன்மைக் கதைகளை படமாக எடுத்து கல்லா கட்டும் டிஸ்னி வகையறா என்று கூறலாம். பல உணர்ச்சிகரமான காட்சிகள், மகிழ்ச்சி, நெஞ்சை பிழியும் அழுகை என செல்கிறது கதை. பருவகாலம் குறித்த கதை இது அதை எப்படி புனைவாக மாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் இருக்கிறது வசீகரம்.

மொத்தத்தில் எளிமையான கதைகளைக் கொண்ட மிதமான விலை கொண்ட குழந்தைகளுக்கான  நூல் என்று இதனைக் கூறலாம்.