மெக்அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்










அண்மையில் ஒரு நேர்காணலில் மற்ற இயக்குநர்களோடு அதிக தொடர்பு இல்லாமல் கிரேக்க சினிமா துறையில் நான் தனியாக இருப்பதாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறீர்களே?

       மற்ற கிரேக்க இயக்குநர்களுக்கு இதே போன்று எனக்குத் தோன்றுபவை அவர்களுக்கும் பொதுவானது என்று கூறவில்லை. நான் கிரேக்க சினிமாவின் உள்ளூர் சார்ந்த மாகாண தன்மையை படத்தில் காட்டவில்லை. என்னுடைய பாணி என்பதைத் தாண்டி அந்த தன்மையை படம் சந்திக்கும் இடங்கள் மிகவும் குறைவு. 1979 இல் தெஸ்ஸ்லோனிக்கி திரைப்பட விழாவில் ‘ஏஞ்சலோ பவுலோஸ் மரணம் வரை என்றொரு வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சலுகை பெற்ற நன்கு அறியப்பெற்ற தன்மை மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்றாலும் எதிரெதிரான தன்மையில் அல்ல. கிரேக்க சினிமா துறையோடு அன்பு – வெறுப்பு போன்றவற்றோடும் தந்தை – மகன் போன்ற உறவை அகவயமான முறையில் கொண்டிருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. கிரேக்க இடதுசாரி கட்சிகள் இறந்துபோன மொழியில் உரையாடிக்கொண்டிருப்பதைக் கண்டதால்தான் அதுபோன்ற எவ்வித முயற்சிகளையும் நான் மேற்கொள்ளவில்லை.

கிரீஸ் படைத்தலைவர்களின் ஆட்சிக்காலத்தை விட தற்போது படத்தை உருவாக்குவது சவாலானதாக மாறிவிட்டது என்று கூறியுள்ளீர்களே?

       படைத்தலைவர்களின் சர்வாதிகார ஆட்சி கொடூரமாக, அடக்குமுறை கொண்டதாக இருந்தது இங்கு கேள்வியல்ல. ஆனால் அதிகாரம் குறித்த என்னுடைய படங்கள் அதிகாரத்தின் பிரச்சனைகளை குறித்தவையே. அதிகாரத்தின் சிக்கல்கள் அரசியலாக மாறுவதை அவை சுட்டிக்காட்டின. படைத்தலைவர்கள் மக்களுக்கு வெளிப்படையாகவே மிகவும் எதிரிடையானவர்களாக விளங்கினார்கள். இடதுசாரிகள் கிளர்ச்சிப்போராட்டம் நடத்துபவர்களோடு இசைவானவர்கள் என்றாலும் இன்று அவர்கள் சிதறிப்போனவர்களாகவும், ஒழுங்கீனமானவர்களாகவும் உள்ளனர். படைத்தலைவரின் ஆட்சியில் பழைய நாடாளுமன்றத்தின் உள்ளே படம்பிடிக்க அனுமதி தந்திருந்தார்கள். ஆனால் இன்று அத்தகைய அனுமதி கிடைக்காது. 36 நாட்களில் படம் வெற்றிபெற்ற ஒன்று. அதனை உருவாக்கியதன் மையம் ராணுவத்தலைவர்கள் தணிக்கை அமைப்பினை எப்படி கட்டுப்படுத்தி தன்வயப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதைக் கூறுவதே.

36 நாட்களில் படம் உட்பட நீங்கள் இருப்புப்பாதை காட்சிகளை தொடர்ந்து பயன்படுத்திவருகிறீர்கள். விமர்சகர்கள் இக்காட்சிகளை தாங்கள் ஜான்ஷோவின் தூண்டுதலினால்தான் எடுக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவது எந்திரத்தனமான அல்லது செயற்கையான ஒன்றாக காட்சியை மாற்றிவிடாதா?

       ஜான்ஷோவினால் நான் தூண்டுதல் பெற்றேன் என்று அவர்கள் கூறுவதை மறுக்கிறேன். தொடர்ச்சியான காட்சிகள் என்பவை சினிமா வரலாறைக் கொண்டுள்ளது. இதற்கு முர்னாவுவின் படங்கள் உதாரணமாக உள்ளன. ஜான்ஷோ பயன்படுத்திய தொடர்ச்சியான காட்சியமைப்பு என்பது உண்மையானதல்ல. கொள்கைரீதியாக எனக்கும் அவருடைய காட்சியமைப்புக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. அதனை படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதத்தில் பலனும் உண்டு. இயற்கையாய் இயல்பான காட்சிகளை தொடர்ச்சியான காட்சிகள் வழி உருவாக்க முடியும். ஜான்ஷோ படங்களின் தொடர்ச்சியான காட்சிகள் நீளமாகவும் முடிவைக்கொண்டுள்ளவையும் அல்ல. அவை ஒரு பக்கவாட்டான சித்திரத்தைக் கொண்டு ஒரே அர்த்தத்தை தருபவை. தொழில்நுட்பம் காட்சியினை செயற்கையாக மாற்றினால் அதற்கு நீங்கள் எழுத்தாளரின் தனிப்பட்ட குணங்கள், பாணி குறித்து விமர்சிப்பதில் அர்த்தமில்லை.