தேனீக்காவலர் படம் குறித்து...- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

 தேனீக்காவலர் படம் குறித்து...
மிசெல் சைமெண்ட் – 1987
ஆங்கில மூலம் - டான் ஃபைனாரு
தமிழில்- லாய்ட்டர் லூன்




தங்களது முந்தைய படமான சிதெராவிற்கு பயணம் என்பது உலகளவிலான அரசியல் குறித்த விமர்சனத்தைக் கொண்டிருந்தது. இறப்பு குறித்த கருத்துகளை வார்த்தைகளில் கூறாவிட்டாலும், அந்த விஷயங்கள் குறித்து குறிப்பிடத்தக்க சிந்தனையை, கோணத்தை படம் முன்வைக்கிறது. இது தங்களுடைய முந்தைய படங்களைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கிறது. தேனீக்காவலர்  படமானது மாஸ்ட்ரோய்னிஃ மற்றும் ரெஜியனி பழைய காம்ரேடுகள் வரலாற்றில் கிடைத்த சந்திப்பை தவறவிடுவது குறித்த உரையாடல் அரசியலைக் கொண்டுள்ளது. மீதி படம் தனிப்பட்ட மனிதர்களின் விதி பிரச்சனைகள் பற்றியும் பேசுகிறது.

நாம் பேசிக்கொண்டிருக்கும் மனிதன் 55 வயதானவனும், அரை நூற்றாண்டை வரலாறை தன் முதுகின் மேல் சுமந்துகொண்டிருப்பன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் தன் முந்தைய உலகை மாற்றும் நம்பிக்கைகள் குறித்தும், நிறுவன நண்பர்களோடான கடந்துபோன நிகழ்வுகள் குறித்தும் முன்பு தெளிவாக குறிப்பிடுகிறது.  பல்வேறு மாற்றங்கள் கிரீஸ் மற்றும் உலகத்தில் நிகழ்ந்த நாற்பதாண்டு காலம் வரலாற்றில் அவன் வாழ்ந்து நம்பிக்கையுடன் கூடத்தான். நம் காலத்திற்கான மனிதனாக நிற்கிறான். அவன் பின்னே கடந்த சிறுபெண் அவனை அழைத்து ‘எனக்கு நினைவிருக்கிறது என்கிறாள். இது நினைவு மற்றும் நினைவற்ற தன்மை இரண்டிற்குமான முரண்பாடு எனலாம்.  ‘ஏன் அவன் தற்கொலை செய்துகொண்டான்? என்று முன்பு அவன் தற்கொலை செய்து கொண்டதை நம்பாமல் கேள்வி கேட்டேன். அவன் நம்பிக்கையிழந்தது போல் தெரிந்தாலும் தொடர்ந்து அவன் தன் பணியினை மேற்கொள்கிறான். கடினமான தேன் கூடுகளைக் கடந்தும் குறிப்பிட்ட தகவல் தொடர்பை உருவாக்கிக் கொள்ள முயலுகிறான். மைதானத்தில் கைதிகள் கைகளை விரிப்பது போல சில சூழ்நிலைகளில் கைதியாக மாட்டிக்கொண்ட அவன் இறந்த காலத்தோடு தொடர்புகொள்ள முயலுகிறான். ஆனால் நாம் வேறு ஒன்றைத் தேடுகிறோம். நாம் முக்கியமான வரலாற்று கால கட்டத்தில் இருக்கிறோம். மாற்றங்கள் எப்போது எப்படி நடந்தேறும் என்று தெரியாது காத்திருக்கிறோம். எது நடந்தாலும் மாற்றங்கள் அந்த மாநிலத்தில் இருக்கும் நம்மை வெளியே இழுப்பது உறுதியான ஒன்று. மனிதர்களின் வரலாறு பெரும் அகலமான இடைவெளிகள் நிறைந்திருக்கிற, அமைதி நிறைந்த நிகழ்வுகளையும் கொண்டுள்ளது. நாம் வாழ்கின்ற கால கட்டத்தின் அமைதி பயங்கரமானதாக உள்ளது. அச்சத்தை உருவாக்குவதாக உள்ளது.

தங்களின் கடைசி இருபடங்களிலும் கதாநாயகர்கள் பெயர் ஸ்பைரோஸ்ஃ என்றே இருக்கிறது(சிதெராவிற்கு பயணம், தேனீகாவலன்) இதற்கு  தங்கள் பார்வையில் ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா?

ஸ்பைரோஸ் என்பது எனது தந்தையின் பெயராகும். அப்பெயர் எனக்கு அவருடைய தலைமுறையே வெளிப்படுத்துகிறதாக உள்ளது. படத்தின் தன்மைக்கு இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றாலும் நான் அதனை பெரிதும் விரும்புகிறேன். இன்னொன்று, என்னுடைய ஒவ்வொரு படமும் அடுத்த படத்திற்கான விதையைக்கொண்டுள்ளது. சிதெராவிற்குப் பயணம் தேனீக்காவலன் என்ற இருபடத்தினையும் இணைக்கிறது. பெயரைத் தேர்ந்தெடுப்பது தனிப்பட்ட சிக்கலையும் கூடூ கொண்டிருக்கலாம். மற்றவர்களுடைய கதைகளைச் சொல்வதில் என்னால் இயலாது போனால் கூட என்னுடைய கதையினை தெளிவாக சொல்ல என்னால் முடியும். என்னுடைய அனுபவங்கள், நம்பிக்கைகள், மனரீதியான அதிர்ச்சிகள், தனிப்பட்ட வளர்ச்சி, முன்னேற்றம் ஆகளியவை ஒரு குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டவை. இவை தேனீக்காவலன் படம் உருவாக காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தங்களின் தந்தை பெயரை பயன்படுத்தியது, மாஸ்ட்ரோஸ்யன்னி கதாபாத்திரத்தை பயன்படுத்தியது எந்த ஒரு தனிப்பட்ட முக்கியத்துவமும் இல்லை என்கிறீர்கள். தந்தையாகும் தன்மை என்பது தங்களின் மூன்று படங்களிலும் உள்ளது. மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் கருத்தியல்ரீதியான தந்தை என்றும், சிதெராவிற்கு பயணம் படத்தில்  உயிரியல் தந்தை என்றும் தேனீக்காவலன் படத்தில் தந்தை நிலையை சிறுபெண் தேர்ந்தெடுப்பது போலவும் உள்ளதே?

எதிர்காலத்தில் உள்ள தந்தை என்ற உருவத்தைத் தேடி அலையும் பயணம் அது. மேலும் உணர்ச்சி சமநிலையைப் பாதுகாக்கவும் உதவுகிறது. குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியில் லட்சியங்கள் நம் நம்பிக்கைகளை உயிர்ப்போடு கொண்டு செல்லும்போது ஒருவரின் மூலத்தில் ஏற்படும் விரக்தியான தன்மை அவற்றை கவர்ந்துகொள்கிறது.  இந்த அரசியல் நிலைமைகள் ஒருவரின் உளவியலில் எதிரொலி போல ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. தந்தை குறித்த தேடல் என்பது உணர்ச்சிகளின் இசைவினை சேமிப்பதன் தேவை மற்றும் ஒருவர் இருப்பதற்கான தன்மை என்பது வாய்ப்பு தொடர்பை உண்டாக்குகிறத வழி எனலாம். தேனீகாவலன் படத்தின் முக்கிய கதாபாத்திரம் உயிரியல் முறையான மகளுக்கு தந்தை என்பது சிறுபெண் அவரோடு இணைந்து பயணிக்கிறாள்.  இருவருக்குமிடையே உள்ள தன்மை குறித்தும் அர்த்தம் குறித்தும் எதிர்காலத்தை பார்த்து கண்டறிய முயல்கிறார் தலைமுறை இடைவெளி என்பதைத் தாண்டி, பிளவு பெரிதாக இருப்பதை அவர் தன் உணர்வுகளின் மூலம் உணர்கிறார். மொழி இடைவெளியை விட அது பெரியதாக உள்ளது. உடல்ரீதியான அன்பு என்பது அடுத்த தலைமுறையினை தொடர்பு கொள்வதை எளிதானதாக மாற்றுவதில்லை. அவர் உள்ளே ஏற்படும் நம்பிக்கையின்மை காரணமாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தன் பிறந்த இடத்திற்கு பயணிக்க விரும்புகிறார். அங்கே ஒரு இணக்கத்தை அவர் முன்பு உணர்ந்திருக்கிறார். ஆனால் அங்கே சினிமா உள்பட அனைத்தும் அழிக்கப்பட்டு அந்த இடமே கண்ணீர் பள்ளத்தாக்கு போல இருக்கிறது. சினிமா நமது வாழ்விலும், உலகத்திற்கும் கூட முக்கியமான தன்மையைக் கொண்டிருக்கிறது. அவை குழப்பமான தன்மையில் நம் கண்ணில் படுகிறது. அதன் அர்த்தம் என்பது நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையை தொடர்பில் இருத்துவதும், குறிப்பிட்ட படைப்பாக்கத்தன்மை என்றும் கூறலாம்.

தேனீக்காவலர் ஒருவரை ஏன் படத்தின் நாயகனாக தேர்ந்தேடுத்தீர்கள்?

அது ஒரு புதுமையான வேலை. தேனீக்காவலர் கவிஞர்களின் ஆன்மாவைத் தன்னுள் கொண்டவர். இயற்கையோடு தனிச்சிறப்பான உறவைக் கொண்டுள்ளவர்கள் அவர்கள், தேனை அவர்கள் பெறுவது ஒரு கலைஞனின் செயலைப்போல தனித்தன்மையான ஒன்று. அவர்கள் தேனீயுடன் கொள்ளும் உறவு அவர்கள் உணர்வின் தன்மையில் அமைந்தது. அந்தத் தொடர்பு தடங்கலாகும்போது அவன் (என் நாயகன்) வீழ்ச்சியுறத் தொடங்குகிறான். சிலைகளை உருவாக்குபவன் தன் சிலைகளை அழிக்கும் போது அழிவது போல தேனீக்கள் அழியும்போது எடுக்கப்பட்ட காட்சிதான் அவருடைய பகுதியில் இறுதியானது.

பயணிக்கும் வீரர்கள் படப்பிடிப்பின்போது, தீவில் வசிக்கும் தேனீக்காவலரைப் பார்த்து பேசினேன். மெல்ல அவர் என் நண்பரானார். திரைப்படத்தில் சிறிய பாத்திரம் ஏற்று நடித்தார். கிராமத்தார்களுக்கு எங்களுக்கும் இடையே ஊடகமாகவும் இருந்தார். மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் பண்டிட்களில் ஒருவராக நடித்திருந்தார். பிறகு தன் வீட்டிற்குச் சென்று வழக்கம்போல தன் தேனீக்களோடு வாழத் தொடங்கிவிட்டார். எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கச் செல்லும்போது, எந்த உதவியும் செய்யாமல் அவர் தன் தேன் கூட்டில், தேனீக்கள் உள்ளேயும், வெளியேயும் சென்று கொண்டிருப்பதை அதன் ஒலியை ஒலிப்பதிவு செய்யும் இசை பொறியாளரைப்போல வெகு கவனமாக சூழலை கவனித்துக்கொண்டிருந்தார்.  பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையில் உடலுழைப்பை விரும்புவதில்லை. அது அவர்களை களைப்படையச் செய்வதாகவும், அழுக்கு படிய வைப்பதாகவும், போதிய வருவாயினை தராததுமானதாக உள்ளது.  ஆனால் தேனீக்காவலர்கள் தங்களது பணியினை பெரிதும் நேசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் கலைஞர்களை ஒத்தவர்கள் என்று கூறுகிறேன்.







பிரபலமான இடுகைகள்