தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்








36 நாட்களில், பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள் மற்றும் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் எனும் வரலாற்று பின்புலம் கொண்ட படங்களை இயக்கியுள்ளீர்கள். 1870 இல் மாரதோன் பகுதியில் கிரீக் பண்டிட்கள் ஆங்கில சுற்றுலாப் பயணிகளை கடத்தினர் என்பது போன்ற பாதியளவு உண்மைகளைத்தான் வரலாற்றில் இருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளீர்கள். 15 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒருவரை விடுதலைப்போராளியை மெசியா என்று நாடே அவரை நினைக்க அவர் சிறிது காலத்திலேயே கடும் சர்வாதிகாரியாக மாறுகிறார் என்பது நிகழ்வாக இருக்கையில் படம் தன்னுள் இதுபோன்ற ஒன்றை புனைவாக தன்னுள் கொண்டிருக்கிறது. எதார்த்தம் மற்றும் கனவு எதார்த்தம் என இரண்டுக்கும் இடையில் உங்களுடைய படங்கள் எப்போது தோன்றத் தொடங்கின?

 மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் தத்துவரீதியான – அரசியல் அதிகார பிரதிபலிப்பைக் கொண்ட அதிகாரத்தின் பிரச்சனைகளைப் பேசுகிற என்னுடைய மூன்று படங்களும் கசப்பான முடிவுகளைக் கொண்டுள்ள படமாகும். மனிதனுடைய நம்பிக்கை எப்படி குறிப்பிடப்பட்டாலும் என்னுடைய படத்தில் அவை தனக்குள்ளேயே சிறிதாகி மறைந்துபோகும் துன்பியல் தன்மையைக் கொண்டுள்ளது. மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் கிழக்கு ஐரோப்பாவில் தொடர்ந்திருந்த அதிகார நீட்சியின் காரணமாக உலகின் பகுதிகளில் நிகழவேண்டிய சமூகவியல் செயல்பாடுகள் நிகழாது என்று கூறும் இறைத்தூதர் குறித்தவற்றைக் கூறும் படம் எனலாம். நான் இதை அக்காலகட்டத்தில்  கூறவில்லை. புனைவுகளை வடிவமாக இதற்கு பயன்படுத்தியுள்ளேன். அதிகாரப்பூர்வமான உண்மைகளை நான் பயன்படுத்தாததின் காரணம், அவை படத்தின் கவிதை போன்ற மொழியினை கெடுத்துவிடும். அவற்றைப் பயன்படுத்தினால் படத்தில் உயிர்த்தன்மை இருக்காது. நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர்களான ஓஸிமா மற்றும் தவியனிஸ் என இருவரும் இந்த முறைகளைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்தைப் பேசியிருப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரை உலகில் உள்ள மற்ற இயக்குநர்களில் உங்களுடைய கதாபாத்திரங்கள் மனதில் தங்குவதற்கு காரணம் அவற்றின் தனித்த தெளிவான வேறுபாடு கொண்டிருப்பது மட்டுமல்லாது, குறிப்பிட்ட காலத்தையும் தன்னோடு கொண்டு இருப்பதுதான் என்று கூறமுடியும்.  கிரீசின் சுவர், கற்கள், கூரைகள், வானம், மழை, பனி, என நீங்கள் காட்சிபடுத்தும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து எனக்கு எந்தக் கேள்வியுமில்லை. இடம் குறித்து கவனமாக விஷயங்களைக் கூறுவதில் தங்களுக்கு பெரும் ஆர்வமுள்ளது. வரலாறு , காலம் குறித்து விஷயங்களைக் கூறுவதில் எது தங்களை வேறுபடுத்துகிறது? முதல்படமான மறுகட்டமைப்பு ஒரு உண்மையில் நடந்த கொலை பற்றி பத்திரிகைச் செய்தி மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி உருவானது. வரலாற்றின் தொடர்ச்சிதான் தானே பேசுகிறது. ஸ்பைரோஸில் நாயகன் வடக்கிலிருந்து தெற்கு கிரீஸ் நோக்கி பயணிக்கிறான். தேனீக்காவலர் படத்தில் முந்தைய வாழ்க்கை அவருடைய நினைவுச்சித்திரங்களாக விரிகிறது. எதார்த்தம் மற்றும் வரலாற்றை உண்மையில் ஒருங்கிணைக்கிறீர்கள். ஏறத்தாழ மறுகட்டமைப்பு போன்று இதனைக்கூறலாம். கிரீக் வரலாற்று நாயகர்களோடு தங்களது கதைமாந்தர்களை ஆய்வு செய்து உருவாக்குகிறீர்கள். உங்களது படங்களில் நுட்பமான தன்மையுடன் ஆவணப்படத்தன்மையை நுழைப்பது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

நுட்பமான தன்மையில் வரலாற்றைக் காணும் போக்கை ஆவணப்படத்தன்மை என்று கூற விரும்பவில்லை. அதற்கு பதிலாக இதனை கிரீக் மரபு என்று கூறலாம். கிரீக் செவ்விலக்கியங்களை நாம் திரும்ப பார்க்கும்போது அவை புராணங்களை அடிப்படையாக அவற்றின் உள்ளடக்கங்களை பின்புலமாக கொண்டே தனித்துவமாக உருவாகியுள்ளன என்பதை அறியலாம்.  வரலாற்றோடு எனது தொடர்பு என்பது கிரீக் தேச மனிதனாக கிரீக் வரலாறு, கலைப் பண்பாடு முக்கியமாக இலக்கியம் மற்றும்  ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. எனது நாட்டில் பல ஆண்டுகளாக மரபொழுங்குக்கு உட்படாத முறையில் வரலாறு பாவிக்கப்பட்டிருந்தது. பொதுவான இசைவுத்தன்மை என்பதே இதனை ஏற்றுக்கொள்ள வைத்தது. 1974 இல் சர்வாதிகாரத்தன்மை ஆட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக வரலாறு – அரசியல் சார்ந்த படங்களில் ஓர் பெரு வெடிப்பு நிகழ்ந்தது. இத்தகைய படங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்தன. சர்வாதிகார ஆட்சியின்போது, சினிமாதுறை எனது செயற்களமாக இருந்ததால்  நான் எனது படங்கள் உட்பட எதையும் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. கிரீக் சினிமாவில் ஆட்சியாளர்கள் குறித்த படங்கள் அவர்கள் அதிகாரத்தில் இல்லாதபோது உருவாகி வந்தன என்றாலும் அது காலம் கடந்த முயற்சி எனலாம்.  அதே நேரத்தில் கிரீக் சினிமா மூலங்களின் போதாமை, நகைச்சுவை சார்ந்து நட்சத்திர நடிகர்களின் மிகை உணர்ச்சி ஆகியவற்றைக் கொண்ட நகைச்சுவை நாடகங்கள் கேலிக்கூத்துக்கள் நாட்டின் உள்நாட்டுத்தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டன. அப்போது பிரச்சனைகளை மையமாகக் கொண்ட படங்களாக ககோயன்னியினுடைய ‘ஸ்டெல்லா கோண்டோரோஸின் ‘ட்ரகோஸ் என்பவை மக்களின் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களை, கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வந்தவை. கோண்டவ்ரோஸின் பாரனாயிம் என்பது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.

      காலம் குறித்து நாம் பேசுவதென்றால் நிச்சயம் வரலாற்று காலம் மற்றும் நிகழ்வுக்காலம் என இரண்டையும் பிரித்து வைத்துவிட வேண்டும். பொதுவாக, காலநகர்வு நினைவுகள் வழியாக நிகழும். வரலாறு குறித்த விஷயங்களில் எப்போதுமே மாறுதல்கள் செய்யக்கூடாது. பழைய அமெரிக்கப் படமான லஸ்லோ பெனன்டெக் இயக்கிய படத்தில் நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்திற்கு படம் நகர்வதை எளிமையாக அதே விஷயங்களைக் கொண்டு ஒளியமைப்பை மட்டும் மாற்றிக் காட்டியிருப்பார்.

ஸ்வீடன் திரைப்படமான மிஸ் ஜூலி இல் காலம் நகர்வது தனிப்பட்ட நினைவுகளாக பாத்திரங்களின் மூலம் நிகழும். வேறுமுறையில் கூறுவதென்றால், ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு கதாபாத்திரம் கடந்த காலத்தின் நினைவுகளை நிகழ்காலத்திலிருந்து நினைவுகூருவார்கள். பின் திரும்ப நிகழுக்கு வருவார்கள். சினிமா வரலாற்றில் முதன்முறையாக நான் சாதித்திருக்கிறேன் என்பது என்ன? என்னுடைய பணியை ஒருங்கிணைந்த நினைவுகள் என்று அழைக்கலாம். தனிப்பட்ட நினைவுகள் என்பதை விட அதிகமானதாக ஒருங்கிணைந்த வரலாற்று நினைவுகளைக் கொண்டு ஒரே இடத்தில் வெவ்வேறு காலத்தை கலப்பது. காலத்தை தனிப்பட்ட மனிதரின் நினைவுகள் மூலம் கடக்காமல் ஒன்றிணைந்த நினைவுகளாக எந்த இடைவெட்டும் இல்லாமல் கூறும் செயல்திறம் என்று கூறலாம். ஒரே காட்சியில் நான்கு வேறுபட்ட வரலாற்று காலகட்டங்கள் இணைந்து தொடர்ச்சியாக திடுக்கிடச் செய்யும்படியான பாய்ச்சல்களை திரைப்படத்தில் உருவாக்கிட முடியும். உ.தா: பயணிக்கும் வீரர்கள் படத்தில் நடிகர் 1940 இல் ரயில் ஓடத்தொடங்கிய பின் ஆசியா மைனர் பகுதியில் உருவாகிய போர் குறித்து பேசுவார். ரயில் நின்று அதிலிருந்து இறங்கிய பின்னர் கேமராவைப் பார்த்து 1922 இல் ஆசியா மைனரில் நடந்த போர் பற்றி பேசுவார். அவர் கேமரா பார்த்து பேசுவது நிகழ்காலத்தில் நடப்பதாகும். காலம் இதில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை இதிலிருந்து ஓரளவு புரிந்துகொள்ள முடியும். இம்முறையில் நிகழ்காலம், 1940, 1922 ஆகிய கால கட்டங்களை அருகருகே வைத்து வேறுபட்ட காலங்களான இவற்றை ஒப்புமைப்படுத்த முடியும். இன்னொரு காட்சியில் புதிய குழுவாக பயணிக்கும் வீரர்கள் 1952 ஆம் ஆண்டு தெருவில் நடந்து செல்லும் காட்சி வரும்அகலமான பரப்புக்காட்சியில் ஜெர்மன் கார் ஒன்று 1942 இல் அதே காட்சியில் உள்ளே நுழைகிறது. கேமரா எந்தக்காட்சியில் பயணிக்கும் வீர ர்கள் மறைந்தார்களோ அங்கே இப்போது ஜெர்மன் வீரர்கள் இருக்கிறார்கள். காட்சி ஏறத்தாழ எந்த வித தடையும் இல்லாது நகர்ந்து செல்லும். இது தொடர்ச்சியானதும், வெவ்வேறு வரலாற்று தருணங்களை கொண்டுள்ளதும். அதே சமயம் உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ள உறவினைத் தடுப்பதுமாக உதவுகிறது. இரண்டாவது உணர்ச்சியானது, சினிமா மொழியில் முதலாவதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த முறையில் நான் காலத்தை இடைவெளியாக புதுமையான முறையில் மாற்றுகிறேன். காலம் மற்றும் இடைவெளி என்பதை ஒன்றிணைத்து தொடர்ச்சியாக மாற்றும்போது வேறுபட்ட பரிமாணத்தில் காட்சிகள் உருவாகித் தோற்றமளிக்கின்றன என்றபோதும் இது சரியானதா என்பதை நான் அறியவில்லை




பிரபலமான இடுகைகள்