தேனீக்காவலர்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்










மிகவும் சிக்கலான தொடர்ச்சியான காட்சிகளை எடுத்துக்கொண்டால், உதாரணத்திற்கு மதுபானக் கூடத்தில் இளம்பெண் நடனமாடும் காட்சியைக் கூறலாம். இதனை ஒரு பட அரங்கில் மிக எளிதாக எடுத்துவிடலாமே?

அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் அக்காட்சியில் வெளிப்புறம் உட்புறம் என்று மாறிச் சென்று வரும் காட்சிகளை எடுப்பது என்பது அதில் சிரமமானதாக மாறிவிடும். அவற்றினை தொகுப்பதும் சிரமம். ஒரே காட்சியில் உள்ளே மற்றும் வெளியே காட்சிகளை அமைக்க தேவையிருந்தது. மேலும் கிரீக் சினிமாதுறையில் அரங்குகளில் படமாக்குதல் இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. அது சிறிது ஆபத்தானதும் கூட. யதார்த்தமான இயல்பில் இருக்கும் எனது அரங்கை நான் தேவைக்கேற்ப மாற்றிக் கூட பயன்படுத்திக்கொள்வேன்.

நீங்கள் ஒளிப்பதிவாளர் ஜிபோர்ஸ்கோஸ் அர்வானிட், அரங்க வடிவமைப்பாளர் மைக்ஸ் கரபைபெரிஸ் ஆகியோருடன் நெருக்கமான நட்புறவுடன் உங்கள் முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறீர்கள்?

படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடி கண்டறிய நாங்கள் மூவருமே இணைந்துதான் செல்வோம். எங்களுடைய திட்டப்படி அந்த இடத்தில் என்னென்ன விஷயங்களைச் செய்யவேண்டும் என்று விவாதிப்போம். ஒளிப்பதிவாளர் அர்வான்டிஸ் நிறம், ஒளியமைப்பு, கேமரா இயங்குவதற்கான இடம் குறித்து சோதித்துப் பார்ப்பார். படப்பிடிப்புக்கு நாங்கள் செல்லும்போது, பெரும்பாலான வேலைகள் முடிந்திருக்கும். எங்களுடைய படங்களின் உருவாக்க செயல்முறை பெரும்பாலும் இந்த முறையில்தான் அமைந்திருக்கும். நாங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டவர்களாக இருப்பதால் விரைவில் முடிவுகளை நோக்கிச் செல்ல முடிகிறது. படப்பிடிப்பு அரங்குகளில் சுவர்களைத் தள்ளி வைக்க முடிந்தால் கேமரா இயங்குவதற்கு எளிதாக இருக்கும்தான். ஆனால் உருவாக்கப்படும் சுவர் உண்மையான சுவர் என்று என்னால் நம்ப முடியவில்லை. இயல்பான உண்மை என்பது தேவை என்றே நினைக்கிறேன். எப்படியாயினும் நிறுவன பட அரங்குகளில் என்னால் மகிழ்ச்சியாக திருப்தியாக வேலை செய்ய முடியாது.

என்ன மாதிரியான லென்ஸ்களை பயன்படுத்துகிறீர்கள்?

இந்த முறை நான் அண்மைக்காட்சிகள் எடுப்பது உட்பட பல வித லென்ஸ்களை பயன்படுத்தியுள்ளேன். பொதுவாக அண்மைக்காட்சிகளை எடுப்பதற்கு இப்படி நான் லென்ஸ்களை பயன்படுத்தியது கிடையாது என்றாலும் இடம் மற்றும் நடிகர்கள், கேமரா இடையிலான இடைவெளியின் தன்மையை மாற்றவேண்டிய தேவையை உணர்ந்தேன். பொதுவாக எப்போதும் நான் பயன்படுத்துவது 35 எம்.எம். லென்ஸ்களைத்தான். சில சமயங்களில் 40 எம்.எம். லென்ஸ்களையும் பயன்படுத்துவேன்; அரிதான சமயங்களில் 80 எம்.எம். லென்ஸ்களைப் பயன்படுத்துவேன். 35 எம்.எம். லென்ஸானது அகலமானதாக காட்சி மாறுபடாமல் மனிதனின் கண்களைப்போல காட்சிகளை உருவாக்குவதால் எனக்கு அது பிடித்தமானதும், திருப்தி அளிக்கக்கூடியதுமாகும். 40 எம்.எம். லென்ஸானது குறிப்பிடத்தக்க பொருள் ஒன்றை ஆழமானதாக, அடர்த்தியானதாக காட்ட உதவுகிறது. இப்படத்தில் ஆண்,பெண் என இருவருக்கிடையே உள்ள குறிப்பிடத்தக்க இடைவெளியை கவனமாக கையாள முயன்றேன். அவர்கள் நெருங்கியிருந்தாலும் விலகியிருந்தாலும் அவர்களுடைய தனித்தன்மையை வேறுபட்ட உலகத்தை காட்சிபடுத்த முயன்றேன். எ.கா. – விடுதி அறையில் அவர்களை ஒரே காட்சியில் காட்டாமல் ஒன்றின் மீது மற்றொன்று இருப்பது போல கேமராவினை நகர்த்தி எடுத்த காட்சியினைக் கூறலாம்.

ஸ்பைரோஸ் பூமிக்கு திரும்பி வருவது குறித்து பறவை மற்றும் தேனீக்கள் முதல் காட்சியில் பறக்க முயல்வது போல காட்டப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் பறவையை வேறுவிதமான அடையாளமாக எடுத்துக்கொண்டு நான் நினைத்தது திரையில் கவனிக்கப்படாது போய்விடுமோ என்று கூட பயந்தேன். திருமணமான தம்பதிகளிடையே உள்ள சிக்கலான உறவு சிடுக்கல்கள் குறித்த தன்மையை வெளிப்படுத்த நினைத்தேன். அதற்கு குறியீடாக ஒரு பறவை வெற்றுச்சுவரில் மோதி விழுகிற காட்சியை குறிப்பிடலாம்.


பிரபலமான இடுகைகள்