தியோ ஏஞ்சலோ பவுலோஸ் சினிமா தத்துவம் நிறைவுப்பகுதி
தேனீக்காவலர் படம் காட்டெருமை தோன்றிய
காட்சியின் பிறகு நிகழ்வுகள் பின்னோக்கிச் செல்கிறது என்னும் விதத்தில் அடையாளம்
காட்டப்படுகிறது என்னும் விதத்தில் அவை குறித்து இரு கேள்விகள் உள்ளன. உலகளாவிய
முக்கியமான நட்சத்திர நடிகர் ஒருவரைப் பயன்படுத்தியுள்ளீர்கள். மார்செலோ மாஸ்ட்ரோயன்னி
ஒரு தனித்துவ அடையாளம் கொண்டவராக, தான் நடித்த படங்களை அனைத்தையும் மேம்பட்டதாக
அமைத்துக்கொண்டவர். எப்படி அவரைப் புரிந்துகொண்டு பயன்படுத்தினீர்கள்? அதேநேரம்
எப்படி அவரை படத்திற்காக மாறுதல்களைச் செய்யவைத்தீர்கள்? இரண்டாவது கேள்வி:
எழுதப்பட்ட கதைக்கும் படப்பிடிப்பு தளத்தின் நடைமுறை விஷயங்கள் குறித்ததுமாகும்.
ஸ்பைரோஸின் வீடு, அவர் தங்கியுள்ள வீடு, அவரது சிறுவயது வீடு இதில் தேன்கூட்டையும்
சேர்க்கலாம். பாடல் கேட்கும் பெட்டி, சோடா நிறுத்தி இவைகளை நான் குறிப்பிடவில்லை.
இதனை முன் கூட்டியே திட்டமிடுவது மிகவும் சிக்கலான ஒன்று அல்லதுத இவை
மேம்படுத்தப்படுவது படப்பிடிப்புத் தளத்தில்தானா எப்படி இந்த செயல்களை
நிறைவேற்றுகிறீர்கள்?
மாஸ்ட்ரோய்யன்னி வெளிக்காட்டிய அடையாளத்தை
அதற்கு நேரெதிராக திருப்பவே எனது ஆற்றலை செலவழித்தேன். படத்தின் சுமையை தன் தோளில்
தாங்கிச் சுமக்கும் ஆற்றல் கொண்ட ஒரு நடிகர்தான் எனக்குத் தேவைப்பட்டார். அக்கதாபாத்திரம்
நல்லொழுக்கம் கொண்ட நாகரிக அடிப்படை கொண்ட அமைதியான தன்மையையும் கொண்டு மாஸ்ட்ரோய்யன்னியின்
அடையாளத்திற்கு எதிரானதாக அமைந்துவிட்டது. கிரீசில் நானறிந்த எந்த ஒரு நடிகருமே இந்த
கதாபாத்திரத்தின் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியுமா என்று எனக்கு பயமிருந்தது. மாஸ்ட்ரோய்யன்னி
தன் கதாபாத்திரத்தின் எடையைத் தாங்கி தன்னை நிரூபித்ததோடு, படத்தினையும் காப்பாற்றினார்.
சில சமயங்களில் மற்ற சமயங்களில் கதையமைப்பு குறிப்புகளாகவும் படம் உருவாக்குவது எனபது
அதனை மேம்படுத்தவேண்டிய தேவையிருப்பதாகவும் இருக்கும். இன்னும் சில நேரங்களில் எழுதப்பட்ட
கதையினையே மிகச்சரியாக அடியொற்றி எடுக்கப்பட்ட என்றாலும் அதில் மேம்படுத்தல்கள் தேவைப்படும்படி சூழல்கள் இருக்கும். இவை எது குறித்து நாம் வேலை செய்கிறோமோ அதைச் சார்ந்ததே
ஒழிய, படத்தினை உருவாக்கும்போது சுற்றியுள்ள சூழல் குறித்ததல்ல. மிகச்சிறந்த என்பதிலிருந்து
மிக மோசமான சூழல் வரை உள்ள சூழல்களை நான் சந்தித்துள்ள போதும், எனக்குள் இருந்த ஒரு
செயலை செய்யும் ஊக்கத்தை இவை ஒருபோதும் குறைக்கவோ, தடுக்கவோ முடியவில்லை. மூடுபனிநிலம்
படமானது மிகச்சரியாக திரைக்கதையினை அடியொற்றி எடுக்கப்பட்டது. பயணிக்கும் வீரர்கள்
படம் குறிப்புகளை பின்பற்றி எடுக்கப்பட்டது. பயணிக்கும் வீரர்கள் படம் குறிப்புகளைப்
பின்பற்றி எடுத்தது. சிதெராவிற்குப் பயணம் அதன் மூல கதையமைப்பிலிருந்து வேறுபட்டு உருவான
படமாகும். தேனீக்காவலர் படத்தின் கதை அதனை எடுக்கப்பட்டதிலிருந்து நெருக்கம் கொண்டது.
நான் எழுதுகின்ற
கதைகளை பல்வேறு மனிதர்களிடம் பேசி விவாதிப்பேன். பிங் – பாங் விளையாட்டு போல யாராவது
ஒருவர் அதன் மாற்றத்திற்கு காரணமாக அமைவார்கள். படத்திற்கான கதையை நெருக்கமான பலரிடம்
விவாதிக்கும்போது அதன் குறைகள், நிறைகளை நான் எளிதில் அடையாளம் கண்டு அதனை மாற்றியமைக்கும்
வாய்ப்பு உருவாகிறது. இது கதை ஒரு குறிப்பிட்ட சார்புநிலை அடையாமல் இருக்க உதவும் வகையில்
முக்கியமானதும் கூட.
சிதெராவிற்குப்
பயணம் படத்தில் முதிய தம்பதியினர் கட்டுமரத்தில் நடுக்கடலில் பயணிப்பது, மூடுபனி நிலம்
படத்தில் நகரம் முழுக்க பனியால் சூழப்பட்டிருக்க ஒரு கை அதனை விலக்கி வெளிவருவது என
இவை அப்படி உருவானவைதான்.