மூடுபனிநிலம்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்










இவற்றைப்படத்தில் கூறுவதோடு அல்லாமல் இயக்குநர் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோருக்கிடையேயான உறவுவின் வழி குறித்தும் கூறலாமல்லவா?

      ஆம். அது சரியானதுதான். மாஸ்ட்ரோயன்னி, நடிகர் தாம் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை படத்தில் ஏற்று நடிக்கும் முன்னமே அந்த கதாபாத்திரத்திற்கான கருத்துகள், நியாயங்கள் குறித்து அவர்கள் முன்னமே பேசுவது என்பதை அவர் சரியானதாக எண்ணவில்லை. கதையினை மெல்ல தன் மனதில் நிறைத்து கதையோட்டத்தில் நகர்ந்து செல்லும் கதை மாந்தர்களையே அவர் விரும்புகிறார்.

      படத்திற்கான எழுத்துப்பணி என்பது மிகவும் நீண்டதா? அது முழுமையடைவதற்கான காலம் எவ்வளவு? படப்பிடிப்பிற்கான திரைக்கதையை கையில் கொண்டிருக்கிறீர்களா?

      இல்லை. எனது படத்திற்கான காட்சிகள் என்பவை உண்மையான திரைக்கதையைச் சார்ந்ததல்ல. ஒரு நாவல் போல தோற்றமளித்தாலும், பொதுவான இலக்கிய நாவல் போல அதன் கருவை ஒரே தன்மையில் புரிந்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு, ஒரு கவர்ச்சியும் வசீகரமும் கொண்ட இளைஞன் ஒருவன் கதையில் வருகிறான் என்றால், நான் அந்த கதாபாத்திரம் பெற்றிருக்கும் வசீகரம் அல்லது  அழகு என்பதை அழித்து அக்கதாபாத்திரம் குறித்து எந்த முடிவிற்கும் பார்வையாளர்கள் வருவதை தடுப்பேன். பறவைகள் பாடுவது போன்று இசைத்துணுக்கை அக்காட்சியோடு கூடுதலாக இணைத்துவிடுவேன். மூடுபனிநிலம் படத்திற்கான திரைக்கதை உருவாக்கும்போது இதுபோன்றே நிகழ்ந்தது. படத்தில் தொடக்கத்திலேயே இசை குறித்த விஷயங்களை மெல்ல திரைக்கதையில் அவ்வப்போது சிந்தித்து சேர்க்கத் தொடங்கிவிடுவேன். பாதுகாப்பு தேடி செல்லும் இரு சிறுவர்களின் உணர்ச்சிகரமான பயணங்களை படம் திரும்ப கூறுகிறது எனும்போது, இசை சீசர் ஃப்ரான்ம் மற்றும் மென்டெல்ஸன் இசைப்பாணி போல இருக்க வேண்டும் என்று விரும்பினேன். 

      ஒருமுறை குறிப்பிட்ட முறையிலான எனக்குத் தேவையான இசையை மிகச்சிறந்த கருவிகளைக்கொண்டு அமையும்படி இசையினை  பொருத்தமாக உருவாக்கத் தொடங்குவேன். அதன்படி இசையானது இனிமையான உணர்ச்சிகரமான உணர்ச்சிகரமான  அனுபவங்களும், வலியின் அழுகையும் இரண்டறக் கலந்த இரண்டிற்கும் இடையிலான அனுபவமாக இருக்க வேண்டும் என்று கருதினேன். திரைக்கதையின் குறிப்பிட்ட அளவுகோல்கள் என்பதைத் தாண்டி, காட்சிகளோடு இணைந்த வண்ணச் சேர்க்கைகள் குறித்து சிந்தித்தேன். அனைவரும் மூடுபனி விழுவதை பார்க்காது நகர்ந்துகொண்டிருக்கும் பொழுது நாங்கள் நகரத்தொழிலாளிகளிடம் மஞ்சள் நிற தோல்சட்டையை அணிந்து வருமாறு கூறினோம். இந்த வண்ணச்சேர்க்கை எனக்கு பிடித்துப் போனதால் ரயில்நிலையக் காட்சியிலும் பணியாளர் மஞ்சள் நிற உடையில் வரும் காட்சியை உருவாக்கினேன். இவற்றை முன்கூட்டியே திட்டமிடவில்லை. படப்பிடிப்பு தளத்தில்  உருவாக்கியதுதான் இக்காட்சி. ஐடிஹெச்இசி க்கு என்று அதன் வழியாக திரைக்கதையின் ஒவ்வொரு இடத்திலும் துல்லியமான திரைக்கதையின் ஒவ்வொரு இடத்திலும் துல்லியமான தரவுகளோடு ஹிட்ச்சாக்கின் தலைமுறை வழி வந்தது போல் உருவாக்க விரும்புகிறேன்.  ஹிட்ச்சாக் மற்றும் கோதர்டியன் மரபுவழி திரைக்கதையின் நுணுக்கங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் இருவருக்குமிடையே பெருமளவு புதுமைத்திறன் அளவுகோல் உள்ளது என்பதை உண்மையில் கண்டறிந்தேன். சரியான இடத்தைக் கண்டறிவது எனக்கு மிக முக்கியமான ஒன்று. நான் ஒரு இடத்தினைப் பிடிப்புக்கு தேர்ந்தெடுத்து என்னுடைய தேவை பொறுத்து மாற்றிக்கொள்வேன். காட்சியின் உணர்வுகளை வேறுவிதமான முறைகளை மாற்றிக் காண முயல்கிறேன்.

படங்களில் வரும் குறியீடுகள் என்பதை முன்னமே திரைக்கதையில் இருக்கின்றவைதானா?

      ஆமாம். ஒரெஸ்டஸ் வரும் பகுதி திரைக்கதையில் உள்ளதுதான் என்றாலும், தொழில்நுட்பம் சார்ந்து அவற்றை நாங்கள் அப்படியே பின்பற்றுவதில்லை. கேமரா தனி ஒரு படமாக எடுப்பதையே விரும்புகிறேன். இரண்டு உள்எதிர் படங்கள் இடம் பெறுமாறு எடுத்தால் அவற்றின் தன்மை இழந்துபோக வாய்ப்புள்ளது. படத்தில் மிச்சம் வெளிப்படுத்தப்பட்டு இருப்பது எனது சிந்தனையின் பாதியே.  குறியீடாக உள்ள விஷயங்கள் எளிமையான பரப்பிலிருந்து விலகி, மாய எதார்த்தமான உலகிற்கு நுழைகிற தன்மையைக் கொண்டுள்ளது.


      கதையின் நூலிழை போல அது அமைந்திருப்பதால் அது வெளிப்படுத்தும் அர்த்தம் என்ன என்பதை உறுதியாக கூற முடியாது. தெஸ்ஸல்லோனிக்கி துறைமுகத்தில் கல்லிலால் ஆன கை என்ன குறிக்கிறது என்பதை என்னால் நிச்சயம் கூற முடியவில்லை. படத்தின் அடிப்படைக் கட்டமைப்பு நான் முன்பு கூறியது போல எளிய கதையாய் பல்வேறு விஷயங்களை சுதந்திரமாக விளக்குவதாய் தர்க்கத்தின் அப்பால் விலகி நிற்பதாக உள்ளது. ஆனால் ஒருவர் அமைப்புரீதியிலான அர்த்தம் குறித்த சிக்கலிலிருந்து விடுபடவில்லையென்றால், எழுத்தின் சரளமான தன்மை இழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ஆரெஸ்டஸ் தன் மோட்டார் சைக்கிளை ஒரு இளைஞரிடம் விற்பது என்பது அவர்களிடையே உள்ள ஒருபால் ஈர்ப்பு தன்மையைக் குறிக்கிறது. என்னோடு திரைக்கதை அமைப்பதில் உதவி புரிந்த டோனினோ குயுரா அந்த குறிப்பு எடுத்து விளக்கம் கேட்டார் – ஆனால் அந்த குறிப்பு சரியானது என்று எனக்குத் தெரியும். எனவே அந்த கேள்விக்கு நான் விளக்கம் எதனையும் கூறவில்லை. 

பிரபலமான இடுகைகள்