தேனீக்காவலர் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்


ஒளிப்பதிவாளர் அர்வானிட் உடன் பவுலோஸ்


‘பேரிக்காய் மரத்தில் ஏறப்போகிறேன் என்ற பாடல் குறித்து...

என் குழந்தைப் பருவத்தில் கேட்ட இசைப்பாடல்களில் அதுவும் ஒன்று. என்னுடைய மகள்களுக்காக இதனைத் திரும்ப கூறுகிறேன். இது சர்ரியலிச பாடல் என்று கூறலாம். பேரிக்காய் மரம் ஏறமுடியாத அளவு சிறியதேயாகும். ‘பிறகு என் கையை வெட்டிக்கொள்வேன் என்று வரும் வரிகளுக்கு உண்மையிலேயே என்ன அர்த்தம் என்று நான் அறியவில்லை.

இப்போதும் படத்தின் இறுதியில் இப்பாடலை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்களே?

ஆமாம். ஆனால் என்னுடைய தனித்தன்மை என எதையும் குறிப்பிட அதைப் பயன்படுத்தவில்லை. மாஸ்ட்ரோய்யன்னி தன் மகளுக்கான செய்யுளாக பாடுகிறார். அவள் சிறு குழந்தையாக இருக்கும் போது இதே போன்ற பாடலைப் பாடி இருக்கிறார்.

செர்ஜ் ரெஜியனி காட்சி கடந்த காலத்தை நினைவூட்டும் ஒரே ஒரு காட்சியாக உள்ளது.

ஸ்பைரோஸ் பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து விலகுகிறான் என்பது படத்தின் தொடக்கத்திலேயே காட்டப்பட்டு விடுகிறது. அவன் அனைவரிடமிருந்தும் அனைத்திடமிருந்தும் விடைபெறுகிறான் என்பதே இக்காட்சி கூறுவது. தன் பழைய நண்பர்களிடம் விடைபெற்றுக்கொள்வது இயல்பானதாகவே நடைபெறுகிற நிகழ்வாகும். இந்த தொடர்ச்சியான காட்சிகள் நாட்டின் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை அவன் வகிக்கப்போகிறான் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். சிதெராவிற்குப் பயணம் படத்தில் நாடு கடத்தப்பட்டு பின், வீடு திரும்புவதும் யுலிசஸ் வீடு திரும்புவதையும் கூட இதற்கு ஆதாரங்களாக கொள்ள முடியும். தேனீக்காவலர் படத்தில் நாயகன் தன் தன் வாழுமிடத்தை விட்டு வேறெங்கும் செல்வதில்லை. இது முதல்படத்தின் தர்க்கரீதியான இரண்டாம்பகுதி மற்றும் சுழற்சியினை நிறைவடையச் செய்கிறது. முதல் முறையாக இப்படத்தினை நிறைவாக செய்து முடிக்கும்போது அடுத்த படத்திற்கான எந்த திட்டமும் என்னிடமில்லை. சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு சிந்திக்க நேரம் ஒதுக்கவும் வேண்டியதிருந்தது. நான் புதிய படம் ஒன்றினைத் தொடங்கும் விளிம்பில் இருந்தாலும் அதனை என் நினைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்க நான் விரும்பவில்லை. என் தலைமுறை வரலாற்றின் மீது கடும் விரக்தியடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இளைய தலைமுறையினரிடம் தேனீக்காவலர் படத்தில் வரும் இளம் பெண்  குறித்தும், நிகழ்காலம், எதிர்காலம் அவர்களுக்கு சேர்த்து வைத்துள்ள விஷயங்கள் குறித்தும் பேச விரும்புகிறேன். இறப்பதற்கு பல காரணங்கள் இருப்பது போல, வாழ்வதற்கும் இன்று நிறைய காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

உங்களது தலைமுறையில் உருவாகி வந்த அரசியல் சித்திரங்களின் செயல்பாட்டில் உங்கள் பங்கும் உள்ளது. ரோஸி, தவியனி, சகோதரர்கள், டெனிஸ் அர்கண்ட் என வரும் மனிதர்கள் அனைவரும் வரலாற்று சித்திரங்களை விட தனிப்பட்ட விஷயங்களின் ஊடேதான் ஆழமாக கவனம் செலுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.

அப்படி நிகழ்வதற்கு காரணம் வரலாறு இப்போது அமைதியாக இருக்கிறது. ஆனால் இந்த கொடூரமான அமைதியில் வாழ முடியாத நாம் இதற்கான விடைகளை நம்மிடம் இடையறாது தேடிக்கொண்டிருக்கிறோம். வரலாற்றுரீதியான எந்த வித மேம்பாடும் இல்லாத போது, ஒருவர் தன்னை நோக்கிய கீழ்மையான நடவடிக்கைகளில் மெல்ல கவனம் குவிக்கத் தொடங்குகிறார். வரலாற்றுரீதியிலான தொடர்ச்சி என்பதை இந்த சிதைவு இடையூறு செய்கிறது. நமது தலைமுறை இந்த தொடர்ச்சியினை உயிர்ப்போடு வைத்திருக்க பங்காற்றுவது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்று. இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

தலைப்புகளை பொறுத்தும் கூட பயணிக்கும் வீரர்கள் மற்றும் சிதெராவிற்குப் பயணம் என்னும் இரு படங்களும் ஒருவகையில் தொடர்புடையதாக உள்ளன என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இதில் சிறிது வேறுபட்டு அமைந்துள்ளது தேனீக்காவலர் படம்தான்...

ஆமாம், இது ஏனெனில் இது தேனீக்காவலரின் தனிப்பட்ட பயணம். ஒன்றிணைந்த பயணம் என்று சொல்லும் பயணிக்கும் வீரர்கள் போல இல்லாமல் இது தனிப்பட்ட ஒரு மனிதரின் பயணம் என்றுதான் தேனீக்காவலர் படத்தைக் கூறவேண்டும்.
நன்றி:
புகைப்படங்கள் உதவி
 www.theoangelopoulos.gr
www.fotor.com