மெக்அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்













இதன் அர்த்தம் பயணிக்கும் வீரர்கள் படத்தினைக் காட்டிலும் இது யதார்த்தமான படம் என்று கொள்ளலாமா?

       இப்படம் பயணிக்கும் வீரர்களுக்கு மிகவும் எதிரிடையான தன்மை கொண்ட சர்ரியலிசம் கொண்டது. இப்படம் உண்மைச் சம்பவங்களை குறிப்பிடுவதில்லை என்றாலும் அரசியல், பாலியல் சார்ந்த விஷயங்களின் அடர்த்தியான தன்மை கொண்டுள்ளது. பயணிக்கும் வீரர்கள் படத்தின் வலுவான தன்மையோடு இப்படத்தை ஒப்பிட்டால் இது பெரிதும் கவித்துவமான படம் என்று கூறலாம்.

ஈவா கோடமனிடோ இன் கதாபாத்திரம் மிகவும் சிக்கலானதாக உருவாக்கப்பட்டுள்ளது. அவள் அலெக்ஸாண்டரின் சகோதரி, மகள், மற்றும் மனைவி....

       மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அவளின் கதாபாத்திரமாகும். இதில் இடையூறாக பல புராண கற்பனைகள்ஃ உள்ளன. உ.தா: ஒடிபஸ் போல ஆனால் இவை தவிர்த்தும் வேறு பெயர்களும் உள்ளன. படம் பின் தொடரும் புகழ்பெற்ற மனிதனான அலெக்ஸாண்டரின் பிறப்பு ஒரு மர்மமாக உள்ளது. அவன் அதிர்ஷ்டத்தின் குழந்தை என்று அழைக்கப்படுகிறான். எனவே அவன் நகரத்தில் உள்ள ஒரு பெண்ணை தன் தாயாக தத்தெடுக்கிறான். எனவே அவளின் மகள் அவனுக்கு மகளாகிறாள். பின்னர் அவன் தனது தத்தெடுத்த தாயை மணம் புரிகிறான் எனும்போது , ஈவா அவனுடைய மகள் முறையாகிறாள். படத்தில் திருமணம் பற்றிய கதை அதை எழுதுகிறவரினால் கூறப்படுகிறது. திருமண நாளின் போது, நிலவுடைமையாளர்கள் அலெக்ஸாண்டரை படுகொலை செய்யத் திட்டமிட்டு அதனை முயற்சிக்கிறபோது, அவனுடைய மனைவி/தாய் இதில் தவறுதலாக கொல்லப்பட்டுவிடுகிறாள். கொல்லப்பட்ட இடத்தில் அவளுடைய திருமண உடையில் முழுக்க ரத்தக்கறை படிந்து கிடக்கிறது. மகள் தன் அம்மாவோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் தன்மையில் தனக்கு விதிக்கப்படும் தண்டனையின் போது, அலெக்ஸாண்டர் உள்ள தருணத்தில் அவ்வுடையை அவள் அணிகிறாள்.

ஒமெரா அண்டோனட்டி அலெக்ஸாண்டராக நடிக்க வைத்தது உலகளவிலான கவனத்தை கவருவதற்கான தங்களின் திட்டமா?

       இல்லை. பத்ரே பத்ரோன் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவரது உடலமைப்பின் தன்மை இப்படத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். மேலும் நடிகர் என்பவர் ஒரு படத்திற்கான வாகனம் என்று கூறலாம். வெற்றி  அல்லது தோல்வி என்பது அதன் வெளிப்பாட்டுத்தன்மையில்தான் இருக்கிறது.

நீங்கள் படத்தினை தயாரிக்க ஒரு நிறுவனத்தை சொந்தமாக கொண்டிருக்கிறீர்களா? விநியோகம் தொடர்பான பிரச்சனைகளுக்காக இது போன்று முடிவு எடுத்தீர்களா? வேட்டைக்காரர்கள் படம் ஐரோப்பாவில் மிகக்குறைந்த அளவிலான திரையரங்குகளில் திரையிடப்பட்டது அதுவும் பயணிக்கும் வீரர்கள் படம் பெற்ற பெரும் வெற்றிக்குப் பிறகு...

       சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான காரணம் எந்த கிரேக்க தயாரிப்பாளரும் எனது படங்களைத் தயாரிக்க முன்வராததே காரணம். இவற்றுக்கு அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. முதலில் ஓ மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தினை நான் தயாரிக்க விரும்பவில்லை. ஆனால் அதற்கான தேவைதான் என்னை அதில் ஈடுபடுத்தியது. வேட்டைக்காரர்கள் படம் குறைந்த திரையரங்குகளில் வெளிவந்தது என்பது எனக்கு புரியாததாகவே இருக்கிறது. இதற்கு காரணமாக விமர்சகர்கள் அப்படத்தை ஸ்டானிலிஸ்ட் ரகமாக கூறி பேசி எழுதியதுதான் காரணம் என்று அனுமானிக்கிறேன். ஆனால் இது சிறிதும் உண்மையில்லாததும், மிக மேலோட்டமான கருத்துமே ஆகும்.