தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்
பெர்க்மனின் படங்களோடு என் படங்களுக்கு எந்த
ஒற்றுமையும் இல்லை. என்னுடைய படம் உளவியல் சார்ந்தது அல்ல. ஏறத்தாழ காவியத்தன்மை
சார்ந்தது. இது உளவியல் தன்மைக்கு மாற்றாக உள்ளது என்று கூறலாம். என்னுடைய
கதாபாத்திரங்கள் காவியத்திற்கான தன்மை கொண்டுள்ளார்கள்.அதற்கான கவிதைகள் உட்பட
அனைத்தையும் தெளிவாக கொண்டுள்ளதான படம் எனலாம். ஹோமர், ஒடிஸியஸ் ஆகியோர்
புத்திசாலித்தனம் நிறைந்த செயல்பாடுடையவர்கள், அச்சில்லஸ் தைரியமான நண்பர்களுக்கு
நேர்மையாக நடந்துகொள்பவன் என்னும் கதாபாத்திர குணங்கள் எப்போதும் மாறாது. ப்ரெச்ட்
கதாபாத்திரங்கள் வாழ்க்கையை விட பெரிதான தன்மையைக் கொண்டு வரலாறை அல்லது
சிந்தனைகளை தன்னோடு சுமந்து வருகின்றன. எனது பட கதாபாத்திரங்கள் ஆய்வு செய்யப்படுகிறவர்களோ
பெர்க்மன் படத்தில் வரும் உடல் (அ) மன வேதனைகள் கொண்டவர்களோ அல்ல. இழந்த விஷயங்களை
அவர்கள் தேடுகிறார்கள். அவை ஆசைக்கும் உண்மைக்கும் இடையேயான பிளவில் தொலைந்து
போனவையாகும். அதுவரை அதிக காலமாக ஆசைதான் வரலாற்றின் மையமாக இருந்து
வருகிறது. ஆசை உலகை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றுகிறது.
நூற்றாண்டின் இறுதியில் ஆசைகள் எப்படிப்பட்டவையாக இருப்பினும், உண்மையில் அவை
நிகழவில்லை என்பதற்கான காரணத்தை என்னால் விளக்கிக் கூற முடியாது. ஒரு நேரத்தில்
குறிப்பிட்ட முறைகளிலான செயல்பாடுகள் எதனையும் மாற்றிவிடமுடியவில்லை. ஆனால்
நம்மிடம் தோல்வியின் அனுபவமும், நிறைவேறாத ஆசைகள் குறித்த ஏமாற்றத்தின் சாம்பலுமே
மிச்சமுள்ளது. எனது கடந்த மூன்று படங்களும் இதுபோன்ற சாம்பலின் ருசியைக் கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் ஆசைக குறித்த செய்து கொண்டிருந்த விஷயங்கள் இல்லாமல் விட்டுச்
செல்லும்போது அவை அடுத்த கருத்தாடல் விவாதமாக மாறுகிறது.
என்னுடைய எழுத்துமுறையும், பெர்க்மனுடையதும்
எங்கேயும் எப்போதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இல்லை. அவருடைய படங்களில் மிக
வலிமையான மெய்யியல் விஷயங்களை பேசுகிற தந்தை உருவத்தை தேடிக் கண்டடைகிற அதோடு
கடவுளைத் தேடுகிற (அ) மறுக்கிற விஷயங்கள் இருக்கும். அதுவே என்னுடைய
திரைப்படத்தில் தந்தை என்பவருக்கு எந்த இலக்கும் இருக்காது. வாழ்விற்கான
காரணங்களைக் கண்டறிய என்னுடைய படங்கள் முயற்சிக்கின்றன. என்னுடைய படங்கள் மெய்யியல்
துறையை மையமாக கொண்டவையல்ல. இவை வேறு வகையான தன்மையில் பெர்க்மனின் படங்களை விட
உயிர்ப்பானவை எனலாம். இந்த முறையில் சிதெராவிற்குப் பயணம், தேனீக்காவலர்,
மூடுபனிநிலம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.