தேனீக்காவலர்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்(ஆ- டான் ஃபைனாரு)










வடக்கு கிரீசில் தொடர்ந்து படமெடுப்பதை குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள்?

எனக்கு தெரியவில்லை. ஏன் இந்த நிலப்பரப்பு மழையும் மூடுபனியும் கொண்டு ஒரு சோகத்தை மனதில் இது பரப்புகிறது என்று நினைப்பேன். எனவேதான் இது தனித்துவமானதாக எனக்குப் படுகிறது. பாரீஸில்  வெயில் இருக்கும் காலங்களைவிட மழைபெய்யும் போதுதான் எனக்கு அந்த இடம் மிகப்பிடித்தமானதாக இருக்கிறது.

தங்களின் சூழ்நிலைத் தேர்வு அன்டோனியோனி உருவாக்கிய ‘போ வேலி படத்தின் தன்மையை ஒத்தது போல இருக்கிறதே?

அப்படியும் இருக்கலாம். படங்களை உருவாக்கத் தொடங்கிய காலம் முதல் இயற்கையான இந்த நிலக்காட்சி விஷயங்கள் என்னுள் தங்கிவிட்டது என்று கூறுவேன்.

தேனீக்காவலர் படத்தில் நீங்கள் பயன்படுத்திய இடங்கள் உங்களது முந்தைய படங்களிலும் வந்துள்ளது. உதாரணமாக – லேனினா.

ஆம், அது உண்மைதான். மறுகட்டமைப்பு படத்தில் இரு காதலர்கள் லேனினாவில்வில் உள்ள விடுதி ஒன்றில் சந்திப்பார்கள். பயணிக்கும் வீரர்கள் படத்திற்காக அங்கு மீண்டும் சென்றேன். வேட்டைக்காரர்கள் படத்திற்காக லேனினாவை அடுத்துள்ள ஏரிக்குச் சென்றேன். உண்மையில் இதில் ஆச்சர்யகரமானது என்னவென்றால், நான் நாட்டின் தெற்குப்பகுதியைச் சேர்ந்தவன் என்பதுதான். நான் பிறந்தது ஏதேன்ஸில், எனது குடும்பத்தின் பூர்விகம் கிரீட் மறமறும் பெலோபோஎனஸ்சஸ் எனும் தெற்கின் உட்பகுதியாகும். ஆனால் இதுவரை நான் படமெடுத்த பெரும்பாலான படங்கள் வடக்குப்பகுதி சார்ந்தவை. குறிப்பாக, வடமேற்கு கிரீஸ் பகுதியைச் சேர்ந்த எபிரஸில்தான் அதிகம் படமாக்கியுள்ளேன். மழை மற்றும் இயற்கையமைப்பு கொண்ட இந்தப் பின்னணியில் கற்கள் கல்வீடுகள் ஆகியவற்றின் மீது பெரும் விருப்பம் கொண்ட வனாகிவிட்டேன். என் நனவிலி மனதிலில் உள்ள உருவத்தை வெளியே கொண்டு வர முயற்சிக்கிறேன். ஆனால் அது என்ன என்பது எனக்குத் தெரியாது.

நீங்கள் படத்தில் குறிப்பிட்ட நகரத்தின் பெயர் ஈஜியோ என்று குறிப்பிடப்படுகிறதே?

அப்படிப் பயன்படுத்துவது சினிமாவின் தொடர்ச்சிக்கானது. கிரீசின் தெற்குப்பகுதியில் உள்ள பெலோபோனேஸ்ஸில் உள்ளது. படமானது நாட்டிலுள்ள நகரங்களை மாசிடோனியாவைச் சேர்ந்த ப்ளோரினா கடந்து அல்பேனியன், யூகோஸ்லேவியா எல்லைகள் உள்ள வடக்கு ஆகியவற்றைக் கடந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. வடக்குப் பகுதியில் கேலக்ஸி ஆமினிஸா பகுதிகள் மற்றும் நப்பிலியன், ஏதேன்ஸ் ஆகிய பகுதிகள் பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டன.

பட நிறுவனத்தின் அரங்குகளில் வேலை செய்வது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா?

எப்போதும் சிந்தித்ததேயில்லை. இயற்கையான காட்சியமைப்பு ஒன்றினை ஆழமான உள்ளார்ந்த தன்மை கொண்டதாக என் கற்பனை புதுமைத்திறன் மூலம் மாற்றம் பெற விரும்புகிறேன். வீடுகளை வண்ணம் பூசி தயார் செய்வேன் அல்லது அதனை வேறு ஒரு இடத்தில் மாற்றுவேன். பாலங்களை ஓரிடத்தில் உருவாக்குவோம். நெடுஞ்சாலையில் சிறுபெண் நடனமாடும் இடத்தைக் கூட உருவாக்கினோம். என்னுடைய படங்கள் அனைத்தும் உண்மையின் எதார்த்தத்த்தின் நீட்சியே ஆகும். எது உண்மையான இயற்கையான காட்சியமைப்பு இல்லையென்றாலும் என் கனவில் நான் கண்டதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்ட முயற்சிக்கிறேன்.
நன்றி:
புகைப்படங்கள் உதவி - http://www.theoangelopoulos.gr/