மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்



தியோ ஏஞ்சலோ பவுலோஸ்











தொடர்ச்சியான காட்சிகள் என்பவை படத்தினை வேறு ஒரு தன்மையில் மாற்றுகின்றதா?

       அதனை செயற்கையாக உருவாக்கும் தன்மையில் அது போன்று நிகழ்வதில்லை. மான்டேஜ் முறையிலான காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு அதன்வழியே சினிமாவின் மதிப்பு ஓர் ஆணை போல வெளிப்படுத்தப்படுவது என்னை எரிச்சல்படுத்துகிறது. உதாரணத்திற்கு – ஒருவன் அறைக்குள் நுழைந்து காத்திருக்கிருக்கிறான். இதனை சினிமாவில் மான்டேஜ் காட்சியாக காட்டப்படலாம். என்னுடைய படத்தில் இது மான்டேஜாக இல்லாமல் சினிமா குறித்தபடி அதன் மதிப்பினை வீணாக்காமல் குறிப்பிட்ட நேர அளவுகோல்படி அதனை வேறு ஒரு தன்மையாக்க முயலுவேன். இங்கு கருவியாக வலுவான தன்மையில் பயன்படுவது நேரமே ஆகும். உண்மையான காலம் வெளிப்படுத்தப்படும் காலம் அல்ல. என்னுடைய படங்களில் ‘இறந்துபோன காலம்உருவாக்கப்பட்டு உள்ளார்ந்த தன்மையோடு படத்தின் சூழலோடு இணைந்திருக்கும்.  இசை என்பது ஒலி மற்றும் மௌனத்திற்கும் இடையில் இணைப்பாக இருப்பது போல, ‘இறந்துபோன காலம்என்னுடைய படங்களில் ஒரு லயம் கொண்டதாக, இசை சார்ந்த அமெரிக்க படங்களின் சினிமா தன்மையிலான நேரம் போலில்லாது, வேறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கும்.

       என்னுடைய படங்களில் காலம் உள்ளேயும், வெளியேயும் ஒரே நேரத்தைக் கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் செயற்கையான தன்மையை உணராது, அது குறித்த முடிவுகளை எளிதில் கடந்துவிடும் விதமாக இருக்கும். இந்த இடை நிறுத்தங்கள், ‘இறந்துபோன காலம் போன்றவை அவர்களுக்கு நியாயமான பகுத்தறிவோடு படத்தினை அணுகுவதற்கான தொடர்ச்சியினையும் அதன் முறையையும் அர்த்தத்தையும் கூட கற்பிக்கிறது எனலாம். இதற்கான தூண்டுதல் பெற்றது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் நான் பார்க்கும் அனைத்து விஷயங்களிலிருந்தும் தூண்டுதல் பெறுகிறேன் என்பது சரியாக இருக்கும். ஆனால் உண்மையாகவே ஆர்சென் வெல்ஸ் தன் படங்களை உருவாக்கும் ஆழமான குவியத்தன்மை, மிஷோகுயுசி கேமராவினை இடங்களில் நகர்த்தும் தன்மை மற்றும் காலத்தை பயன்படுத்துவது குறித்து உண்மையிலே கவரப்பட்டேன் என்று கூறலாம்.

புதிய படத்திற்கான திட்டம் ஏதேனும் கொண்டு இருக்கிறீர்களா?


       ஓ மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தின் தொகுப்பு பணியே சிக்கலானதாகவும், கடினமான உழைப்பை அளிக்கவேண்டியதாகவும் உள்ள நிலையில் எதிர்கால திட்டங்கள் குறித்து சிந்திக்கவெல்லாம் உண்மையிலேயே எனக்கு நேரமில்லை. இத்தாலி தொலைக்காட்சி நிறுவனமான ராய் மேக்னா கிரேசியா குறித்து படம் இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் ஜெர்மனியிலிருந்து நாடகம் மற்றும் வேறு இயக்கம் தொடர்பான வாய்ப்புகளும் ஆலோசனைகளும் வந்துள்ளன. இதில் சிக்கல் என்னவென்றால் நாடகம் குறித்து இதுவரை முன்பு இயங்கிய அனுபவம் எனக்கு இல்லை என்பதுதான். 

பிரபலமான இடுகைகள்