மூடுபனிநிலம்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
9
மூடுபனிநிலம்
செர்ஜ் போபியானா மற்றும் ப்ரெட்ரிக்
ஸ்ட்ராஸ் – 1988
நிலம் குறித்து தங்களது
திரைப்படத்தலைப்பு குறிப்பிடத்தக்க ஒரு அடையாளத்தைத் தாங்கியுள்ளது. இரு
குழந்தைகளை மைய கதாபாத்திரங்களாக குறிப்பிட்ட நிலப்பரப்பில் வைத்து நீங்கள்
உள்வாங்கிய தன்மையான ஒரு நிலப்பரப்பை தொலைவில் இருந்து பார்த்தால் நமக்கு பழகியது
போல் தெரியாது என்று கூறிய நீங்கள் அதன் மூலம் தெரியாது என்று கூறிய நீங்கள் அதன்
மூலம் ஏதோவொரு செய்தியை கூற
விரும்புகிறீர்கள்.
ஆம்
மனிதர்களின் பரப்பு குறித்துதான் பேச விரும்பினேன். இந்தப்படத்தில் நீங்கள் காணும்
மனிதர்களைத் தவிர (உடல்ரீதியாக புலப்படுபவை) தாண்டி வேறெதையும் நீங்கள்
காணமுடியாது. மூடுபனிநிலம் என்பது குறிப்பிடத்தக்க கதையைப் போல, அதனை அதன் தனித்த
தன்மை கெடாமல் கண்டுபிடிப்பு போல பார்வையாளர்கள் காண வைத்திருக்கிறேன்.
கேமராவுக்கும் உங்களது
கதாபாத்திரங்களுக்குமான இடைவெளியை தொடர்ந்து வைத்திருப்பது பார்வையாளர்கள்
உடனடியாக கதைமாந்தர்களான குழந்தைகளுடன் அடையாளம் கண்டு கொள்வதை தடுக்கும் என
நம்புகிறீர்கள். வணிகரீதியாக சில முறைகளை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது உண்டு என்றாலும்,
நீங்கள் தேர்ந்தெடுத்த வகையில் அவர்கள் நடிப்பில் உருவாகும் சோகத்தை
வெளியேற்றிவிட்டீர்கள்.
இயல்பான
காணக்கூடிய தன்மைகள் (அ) தவிர்க்க முடியாது சிறுவர்கள் வெளிப்படுத்தும் சோகம்
குறித்தவற்றை நான் வெளியேற்ற நினைக்கவில்லை. வேறுபட்ட முறையில் இந்த விஷயங்கள்
காட்சிப்படுத்தப்பட்டால் மிகப்பெரும் வணிக வெற்றியை இப்படம் பெறும் என்பது
உண்மைதான். இந்த ஆபத்து குறித்து மிகவும் கவனமாக இருந்தேன். மேலும் அவர்களது
கதாபாத்திரம் எவ்வித உணர்ச்சிகளற்று இருக்கவும் நான் விரும்பவில்லை. இரண்டுமே
மிகச்சரியான சமநிலை பெறவேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. தேனீக்காவலர்
படத்தில் எந்த உணர்ச்சிகளையும் மிகையாக வெளிப்படுத்தாது நடிக்கும் தன்மையின் எல்லையை
உணர்த்தி மாஸ்ட்ரோயன்னி எனும் நடிகரிடமிருந்து இயல்பான நடிப்பை வெளிக்கொண்டு
வருவதில் வெற்றி பெற்றிருந்தேன். இது அவரிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை
வழியிலான நடிப்பை பெற நான் கண்டறிந்த வழிமுறை என்றே கூறலாம். அவருடைய
உணர்ச்சிகரமான காட்சிகளின் போது அண்மைக்காட்சிகளை நான் பயன்படுத்தவே இல்லை.
என்னைப் பார் என்று இந்தக் காட்சிகள் அலறுவதாக எனக்கு ஒரு ஒவ்வாமையே இதுபோன்ற
காட்சியமைப்பதில் ஏற்பட்டுவிட்டது. இந்த காரணத்திற்காக அண்டோனியோனி மற்றும்
வெண்டர்ஸ் படங்களான நகரங்களில் அலைஸ், ஆசையின் சிறகுகள் என்ற படங்கள் எனக்கு
மிகவும் பிடித்தமானவையாகும்.
குழந்தைகளோடு பணிபுரிந்த அனுபவம்
எப்படியிருந்தது?
மிச்சலிஸ் ஸ்செக் என்ற சிறுவனுக்கு
படம் எடுக்கும் போது ஐந்தரை வயதுதான் இருக்கும். அவனை சமரசப்படுத்தி
தொடர்புகொள்வது என்பது விளையாட்டின் மூலம்தான் சாத்தியப்பட்டது. குதிரை
இறந்துபோவதும், அதனால் அச்சிறுவன் வெடித்து அழுது கண்ணீர் சிந்துவதையும் ஒத்திகை
பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது மிச்சசெலிஸ்
என்னிடம் வந்து ‘‘மிஸ்டர். ஏஞ்சலோபவுலோஸ், எனக்கு
பயங்கர வருத்தமாக உள்ளது என்றாலும் என்னால் அழ முடியவில்லை. எனக்கு பெரும் சோகமாக
இருக்கிறது ஆனால் என்னால் அழ முடியவில்லை’’ என்றான். ‘‘நீ இந்த காட்சியில் அவசியம் அழவேண்டும். உனக்குள்ளே சோகமாக இருப்பது
முக்கியமல்ல, அதனை நீ பார்வையாளர்களுக்கு வெளிக்காட்ட வேண்டும்’’ என்றேன் மிச்சலிஸிடம். அவன் இது குறித்து ஒரு நிமிடம்
யோசித்துவிட்டு, ‘‘நீங்கள் என்னை திட்டுங்கள், அது
என்னை அழவைக்கும், அதன் பிறகு அதனை படம்பிடித்துக்கொள்ளலாம்’’ என்று கூறினான். அதை நாங்கள் செயல்படுத்து முயன்றும்
அம்முயற்சி வெற்றியடையவில்லை.
எனவே
விடுதிக்கு திரும்பி அவனது காட்சி முன்புபோல இல்லாமல் சற்று கடுமையானதாக சூழலை
மாற்றி படம் பிடித்தோம். படப்பிடிப்பு குழு எங்களைச் சுற்றி நிற்க, அவனை நாங்கள்
கடுமையாக வசைபாடி அவன் மனதைக் காயப்படுத்த, அவன் எனக்கு முதுகு காட்டி
அழத்தொடங்கினான். அவனை அப்படியே
படப்பிடிப்பு அரங்கிற்கு தூக்கிச்சென்று காட்சியை ஒரு முறையிலேயே எடுத்து
முடித்தோம். மிச்செலிஸைப் பொறுத்தவரை எல்லாமே அவனுக்கு விளையாட்டுதான். ஆனால்
தானியா பலையோக்லோவ் சிறிது வயது முதிர்ந்தவள் என்பதால் அவளோடு வேறு முறையில்
நாங்கள் தொடர்புகொண்டு செயல்பட வேண்டியிருந்தது. தானியா சிறுமியிலிருந்து
இளம்பெண்ணாகும் முக்கியமான கட்டத்தில் படப்பிடிப்பு காலகட்டத்தில் இருந்தாள்.
அங்குதான் அவள் வளர்ந்தே வந்தாள் என்றே கூறலாம். ஒரெஸ்டாஸ் கதாபாத்திரத்தில்
நடித்த ஸ்ட்ராடொஸ் ஸோர்ட்ஸோல்க்லோவ் எனும் நடிகரோடு காதல் வயப்பட்டாள். ஆனால் அது
படத்தின் உந்துசக்திபோல அமைந்ததால் அதில் நான் தலையிடவில்லை. அவளை வன்புணர்வு
செய்யும் காட்சி ஒன்றினைக் குறித்து படத்திற்கு மிக முக்கியம் என்று கூறி அவளிடம்
நான் எவ்வளவோ கெஞ்சியும் முதலில் அக்காட்சியினை எடுக்க அவள் திட்டவட்டமாக
மறுத்துவிட்டாள். இறுதியில் அக்காட்சி குறித்து எதுவும் விவாதிக்க முடியாதபடி
தன்னை தனி அறைக்குள் அடைத்துக்கொண்டுவிட்டாள். இறுதியாக தானியா அக்காட்சியில்
நடிக்க ஒப்புக்கொண்டபோதும், வண்டி ஓட்டுநர் அவளைத் தன்னோடு வன்புணர்ச்சிக்கு இழுக்கும்போது
அலற மாட்டேன் என்று கதையில் கூறப்பட்டிருக்கும் முறையிலான தன்மைக்கு
மறுத்துவிட்டாள். இந்த அவளுடைய மாறுதல் படத்திற்கு சரியாக பொருந்தி வந்தது என்றே
நினைக்கிறேன். அவளைப் பொறுத்தவரை உணர்வுப்பூர்வமாக, உணர்ச்சியை முன்வைத்தே
அணுகினேன். தானியா மௌன விளையாட்டை எங்களோடு விளையாடினாள். படப்பிடிப்பு இடத்தில் ஒளியமைப்பு அமைத்து
முடிக்கும்வரை இரு சிறுவர்கள், நான்,
ஒரெஸ்டாஸ் உட்பட அரைமணி நேரத்திற்கு யார் அதிக நேரம் பேசாமல் இருப்பது என்று
முயற்சி செய்து கொண்டிருந்தோம். சில சமயங்களில் அமைதியை எளிமையாக்க அப்படத்தின்
இசையை ஒலிக்க விடுவேன். இந்த இரண்டு சிறுவர்களும் எப்படி வாயையே திறக்காமல் இவ்வளவு
நேரம் இருக்கிறார்கள் என்பது குறித்து நான் ஆச்சர்யப்பட்டேன். என்னுடைய சொந்த
அனுபவமாக, என்னுடைய மகள்கள் இவர்களை விட சில வயது குறைவாக அல்லது கூடுதலாக
இருக்கலாம். சிறிது நேரம் அவர்கள் பேசாமல் இருக்க வைப்பது எவ்வளவு கடினம் என்பதை
நான் உணர்ந்திருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அமைதி படத்தின் தன்மை கெடாமல்
இருக்க பெரும் உதவி செய்தது.
இயக்குநரும் ஒரு நடிகராக
இருக்கவேண்டும் என்று கூறுகிறீர்களா?
நிச்சயமாக.
ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் நடித்துக்காட்டி நடிகர் அதனை அப்படியே பின்பற்ற
வேண்டுமென நான் விரும்பவில்லை. குறிப்பிட்ட சூழலுக்கான நடிப்பை நடிகரிடம் கோரி பெற
முடியும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். படங்களை முதன்முதலில்
இயக்கத்தொடங்கும்போது தொழில்முறை நடிகர்களை அவ்வளவு விரும்பியவனல்ல. அவர்களது
நடிக்கும் முறை எனக்கு உவப்பானதாக தெரியவில்லை. நான் தொழில்முறை
நடிகர்களல்லாதவர்களிடம் வேலை செய்ய விரும்பினாலும், காட்சியின் ஆழத்தில் எப்போதும்
உணர்ச்சிகரமான பிணைப்பு இல்லாமல் சில சமயங்களில் மிகை நடிப்பை அவர்கள் வழங்கிவிடுகிறார்கள்
என்பதை பின்னர் கண்டறிந்தேன். மாஸ்ட்ரோயன்னி ஒருமுறை கூறிய நான் ஒரு குழந்தை
நீங்கள் பெற்றோர் போல எனக்காக கதை கூறுகிறீர்கள். ‘எப்படி சிறந்த முறையில் கதை
கூறவேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால் நான் உங்கள் விளையாட்டை சரியாக
விளையாடுவேன்’ என்று கூறியது எனக்கு
மிகப்பிடித்தமானது.