தியோ ஏஞ்சலோ பவுலோஸ் சினிமா தத்துவம்

10

ஏஞ்சலோ பவுலோஸின் திரைப்படத் தத்துவம்
ஜெரால்ட் ஓ கிரேடி – 1990

ஆங்கில மூலம்: டான் பைனாரு

தமிழில் - லாய்ட்டர் லூன் 









செப். 2 ஞாயிறு தியோ ஏஞ்சலோ பவுலோஸின் ஏதேன்ஸ் அலுவலகத்திஃ அவரளித்த நேர்காணல் இது. கிரீக் திரைப்பட மையம் சார்ந்த ஜார்ஜ் காலோயேரோ பவுலோஸ் இருவருக்குமிடையே இடைமுகமாக செய்திகளை மொழிபெயர்த்தார்.  இப்பிரதியை மொழிபெயர்க்க உதவியவர்கள் ஸ்பீவ் தந்தோலாஸ் மற்றும் ஸ்பீஃபனோஸ் பாப்பஸாரியாஸ் ஆகியோராவர்.

20 ஆண்டுகளில் நீங்கள் முழு நீளத்திரைப்படங்களாக எட்டு படங்களை உருவாக்கியுள்ளீர்கள். தங்களது படங்கள் ஐரோப்பா, ஜப்பான் உள்பட பல நாடுகளிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. ஆனால் இங்கே அமெரிக்காவிலோ உங்களது படங்கள் அரிதாகவே திரையிடப்படுகின்றன.  பிப்ரவரி மாதம் நவீன கலை அருங்காட்சியகம் தங்களைக் குறித்து அறிமுகம் இயக்குநர்களான அண்ட்டோனியோனி, மிஸோகுயூசி, தர்க்கோவ்ஸ்கி என மதிப்பிடப்படும் தங்களின் திரைப்படங்கள் குறித்து அமெரிக்க மக்களுக்கோ, திரைப்பட விமர்சகர்களுக்கோ கல்வி நிறுவனங்களுக்கோ கூட தெரியவில்லை. முதல் பணியாக தங்களது திரைப்பட பாணி அமெரிக்க பாணியிலிருந்து எவ்வளவு வேறுபட்டது என்றும், 1940 லிருந்து வெவ்வேறு மையமான கருத்துகளில் இன்றுவரை படமெடுக்கும் இயக்குநர்களில் நீங்கள் முக்கியமானவர் என்று அறிவதும்தான். பொதுவான அமெரிக்க இயக்குநரோடு தங்களின் திரைப்பட முறைகள், உத்வேகம் ஆகியவற்றோடு ஒப்பிட ஆர்வம் கொண்டிருக்கிறேன். இது குறித்து நீங்கள் ஏன் என்று கேட்கலாம். ஆறு ஆண்டுகளில் மூன்று படங்கள் 36 நாட்களில், பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள் எடுத்திருக்கிறீர்கள். 20 ஆண்டு கிரீக் அரசியல் வரலாற்றை தங்களின் பிறப்பிலிருந்து பார்க்கிற தன்மையிலான படம் என்பது போல எந்ந அமெரிக்கனும் திரைப்படம் உருவாக்கவில்லை. உ.தா: மெக் நிகோல்ஸ் எடுத்துக்கொள்வோம். அவர் முதலில் எடுத்த படம் எட்வர்ட் அல்பீயினுடைய நாடகமான வர்ஜீனியா உல்ஃபினால் யாருக்கு பயம்? ஜோசப் ஹெல்லரின் நாவலான கேட்ச் -22 பிறகு டால்பினின் நாள் என படமாக்கினார். நீங்கள் உங்களது படம் குறித்து எங்கள் பார்வையாளர்களுக்கு விளக்க முடியுமா?

     முதலில் அமெரிக்க சினிமாவிற்கும் ஐரோப்பிய சினிமாவிற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் விடுதலை பெற்ற ‘44’ ஆம் ஆண்டில் கிரீசில் சினிமா என்று என் தலைமுறை பார்க்க கிடைத்தது அமெரிக்க சினிமாக்களைத்தான். ப்ரெஞ்ச் பட இயக்குநர்களான பழமையான அண்டோனியோனி, பெலினி, அல்லது விஸ்காண்டி ஆகியோர் ஆங்கிலத்தை விட ப்ரெஞ்சில் படமெடுத்தாலும் இரண்டிலுமே விஷயங்களை அறிந்துகொண்டவர்கள் என்று எண்ணுகிறேன்.

     எப்படி இருப்பினும் போருக்கு பிறகான காலகட்ட ஐரோப்பாவில் அமெரிக்க சினிமா குறிப்பிடத்தக்க தன்மையை ஏற்படுத்தியுள்ளது. துப்பறியும் கதைகள், இசை, சமூகப்படங்கள், உணர்ச்சிகர குடும்பப் படங்கள் என எழுதப்பட்ட இக்கதைகள் பெரும்பான்மையான மக்களை திருப்தி செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டவையாகும். போருக்கு முந்தைய தலைமுறை, என் தலைமுறை, என் பிறகானவர்கள் என பல வகையிலும் செல்வாக்கு பெற்றது அமெரிக்கத் திரைப்படங்களே. 50 களின் இறுதியில் ப்ரான்சில் புதிய அலை ஒன்று உருவாகியது. அதில்தான் என்னைப் போன்றவர்கள் கண்டறியப்பட்டனர்.
     கோடார்ட் இயக்கிய ‘ப்ரீத்லெஸ்’ எனும் படம் துப்பறியும் படம் என்றபோதும், அதன் திரைக்கதை முற்றிலும் வேறுபட்டதாக எழுதப்பட்டிருந்தது. ஜான் ஹஸ்டனின் செவ்வியல் துப்பறியும் கதைகளைக் காட்டிலும் கோதார்டின் படங்கள் நிறைய வேறுபாட்டைக் கொண்டுள்ளது. நமக்கு கோதார்ட் வேறுவகையான தூண்டுகோலான உரை நிகழ்த்துவதாக உள்ளார். இதனை இவர்தான் செய்தார் என்றாலும் உண்மையில் இவர்தான் ஒரே ஒரு வாய்ப்பு என்று கூற இயலாது. அவரது படங்களுக்கு முன்னே இத்தாலிய நியோ – ரியலிச பாணி மற்றும் நேரத்தோடு தொடர்புடைய தன்மையும் படம் உருவாக்கும் தன்மையில் உருவாகி வந்திருந்தது. எ.கா. அண்டோனியோனி. கூடுதலாக இதனைப் பின்பற்றி வந்த ஜப்பானிய சினிமாவைக் குறிப்பிடலாம். இது போன்ற படங்கள் பல்வேறு வகையான கதை சொல்லும் முறைகள், படங்களை உருவாக்கும் தன்மை ஆகியவற்றை பொதுவானதாக முறையில் அறிந்துகொள்ள உதவின. இவற்றை அறிவதற்கு உணர்வதற்கு முன் என்னுடைய அறிவை நான் இலக்கியங்களிடமிருந்து திரட்டினேன். எழுத்துக்களை முக்கியமாக கருதி அதனை ஆழமாக கற்றேன். ஐரோப்பிய எழுத்தாளர்களின் எழுத்துகளை அதிகம் வாசித்தேன். ஆனாலும் கிரீசில் அறியப்பட்ட விட்மன், ஹெமிங்வே, ஸ்பீன்பெக், பால்க்னர் மற்றும் டாஸ் பாஸோஸ் ஆகியோரது எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். அமெரிக்க எழுத்தாளர்கள் வரலாற்றுரீதியாக தங்களை ஐரோப்பியர்களோடு இணைத்துக்கொள்ள எப்போதும் முயலுவது எனக்கு சுவாரசியமான முயற்சியாகவே படுகிறது. ஆனால் இது சினிமாவாக மாறவில்லை. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இலக்கியங்கள் ஐரோப்பியர்கள் அமெரிக்க சினிமாவோடு தொடர்புடையனவாக உள்ளன. கிரீக் இலக்கியம் மற்றும் குறிப்பாக கிரீக் நெருக்கடிநிலைகள் எனது முதல் படத்தை உருவாக்கும் சமயத்தில் பெரும் என்னுள் பெரும் செல்வாக்கை செலுத்தின.


     இரண்டாம் உலகப்போருக்கு சற்று முன்னதாக பிறந்தவனான நான் நாட்டின் வரலாறு குறித்த விஷயங்கள் என்மீது படிவதை தவிர்க்க முடியவில்லை. போருக்கு முன்பிருந்த சர்வாதிகார ஆட்சி, பிறகு நடந்த போர். அதன் பிறகு மற்ற மற்ற விஷயங்களும் சிவில் போர் நிகழ்ந்தபின் வந்த மற்றொரு சர்வாதிகார ஆட்சி என நாட்டின் சூழல் மாறியது. 

 என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தப்பிச்செல்வது இயலாததாகவே இருந்தது. எனது படங்கள் என்பவை வரலாற்றை அடிப்படையாக அல்லது அதன் பிரதிபலிப்பாக உள்ளவை என்று கூறலாம். வரலாற்றை அலசி ஆராய்ந்து அதில் என்னுடைய கதைக்கான இடத்தை அறிவதென்பது இயற்கையான விஷயமாகவே கருதுகிறேன். 67 – 74 காலகட்டங்களிலான சர்வாதிகார ஆட்சி எனக்கு இத்தகைய பெரும் அதிர்ச்சியை அளித்தது. எனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு குறித்து சிறுவனாக இருந்த போதே அறிவது என்பதிலிருந்து பல விஷயங்களை நான் கண்டுவந்துள்ளேன். என்னுடைய இந்த தனிப்பட்ட வாழ்க்கை என்பது நாட்டின் வரலாற்றில் உள்ளடக்கமாக உள்ளது.