இடுகைகள்

தில் ராஜூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலிக்காக போராடும் காதலன்! - லவ்வர் -2018

படம்
லவ்வர் - 2018  தெலுங்கு இயக்கம் - அன்னிஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி இசை - சாய் கார்த்திக், தனிஷ்க் பக்சி, அங்கித் திவாரி, ஆர்கோ, அஜய் வாஸ் மருத்துவத்துறை சார்ந்த திரில்லர் படம். அரசு மருத்துவமனையில் பல்வேறு உறுப்புகளை தானமாக கொடுக்கிறார்கள். அதனை பணக்காரர்களுக்காக ஒதுக்கி லாபம் பார்க்கிறார் மருத்துவமனைத் தலைவர். இதைத் தட்டிக் கேட்கிறார் நர்ஸ் ஒருவர். மேலும், பணக்காரர் ஒருவரின் ரத்தவகையைச் சேர்ந்த சிறுமியைக் கொன்று அவரின் கல்லீரலை அபகரிக்கும் திட்டத்தை நர்ஸ் தடுக்கிறார். இதன்விளைவாக ஏற்படும் பிரச்னைகளே கதை. ராஜ் தருணுக்கு இதில் பெரிய வேலை இல்லை. அனைத்து வேலைகளையும் ரித்தி குமாரே செய்கிறார். ராஜூக்கு சாய் கார்த்திக்கின் பாடல்களுக்கு நடனமாடவும், நர்ஸ் ரித்தியை எப்பாடு பட்டாலும் காதலித்து கேரள - ஆந்திர கலப்பில் குழந்தை ஒன்றை உருவாக்கவுமே மெனக்கெடுகிறார். ஆஹா! பாடல்கள் அனைத்துமே திரும்பத் திரும்ப கேட்கலாம். ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. ரித்தி குமார் அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயற்சிக்கிறார். இது ஒன்று போதாதா அவரைப் பாராட்ட?  ராஜீவ் கனக்கலாவுக்கு