இடுகைகள்

பசுமை ஸ்டீல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை ஸ்டீல் உற்பத்தியை தொடங்கிய ஸ்வீடன்!

படம்
  சோதனை முறையில் பசுமை ஸ்டீலை உருவாக்கும் ஸ்வீடன்! ஸ்டீல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு சீனா. பெருமளவில் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்புத்தாதுவைப் பிரித்தெடுத்து ஸ்டீல் உற்பத்தி செய்துவருகிறது. இந்த முறையில் சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் வெளியாகிறது. இதைத் தடுக்க ஸ்வீடனில் ஹைபிரிட் (HYBRIT) எனும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில், கார்பன் வெளியீடே இன்றி ஸ்டீல் உற்பத்தி செய்ய முடியும்.   எஸ்எஸ்ஏபி (SSAB) என்ற ஸ்வீடன் நாட்டு தனியார் நிறுவனம், அரசின்  சுரங்கநிறுவனம் (LKAB), அரசு மின்சார நிறுவனமான வான்டர்ஃபால் ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து, மாசில்லாத ஸ்டீல் தயாரிப்பை செயல்படுத்துகிறது. இப்படி ஸ்டீலை, உருவாக்குவது சோதனை முறை தான். இம்முறை வெற்றியடைந்தால் தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டு பெரிதாக அமையும்.  பொதுவாக, இரும்புத்தாதுவைப் பிரித்தெடுக்க கோக் (Coke) எனும் கரிம எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர். புதிய ஹைபிரிட் முறையில் நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்தெடுத்து கரிம எரிபொருளுக்கு பதிலாகப் பயன்படுத்துகின்றனர். ஹைட்ரஜனை 871 டிகிரி செல்சியசிற்கு, இரும்புத்த