பசுமை ஸ்டீல் உற்பத்தியை தொடங்கிய ஸ்வீடன்!

 









சோதனை முறையில் பசுமை ஸ்டீலை உருவாக்கும் ஸ்வீடன்!

ஸ்டீல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு சீனா. பெருமளவில் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்புத்தாதுவைப் பிரித்தெடுத்து ஸ்டீல் உற்பத்தி செய்துவருகிறது. இந்த முறையில் சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் வெளியாகிறது. இதைத் தடுக்க ஸ்வீடனில் ஹைபிரிட் (HYBRIT) எனும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில், கார்பன் வெளியீடே இன்றி ஸ்டீல் உற்பத்தி செய்ய முடியும்.  

எஸ்எஸ்ஏபி (SSAB) என்ற ஸ்வீடன் நாட்டு தனியார் நிறுவனம், அரசின்  சுரங்கநிறுவனம் (LKAB), அரசு மின்சார நிறுவனமான வான்டர்ஃபால் ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து, மாசில்லாத ஸ்டீல் தயாரிப்பை செயல்படுத்துகிறது. இப்படி ஸ்டீலை, உருவாக்குவது சோதனை முறை தான். இம்முறை வெற்றியடைந்தால் தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டு பெரிதாக அமையும். 

பொதுவாக, இரும்புத்தாதுவைப் பிரித்தெடுக்க கோக் (Coke) எனும் கரிம எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர். புதிய ஹைபிரிட் முறையில் நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்தெடுத்து கரிம எரிபொருளுக்கு பதிலாகப் பயன்படுத்துகின்றனர். ஹைட்ரஜனை 871 டிகிரி செல்சியசிற்கு, இரும்புத்தாதுவுடன் சேர்த்து மின்சாரத்தால் சூடுபடுத்துகின்றனர். தாதிலுள்ள  ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் இணைகிறது. இப்போது நீர் ஆவியாக, கிடைப்பதுதான் ஸ்பான்ஞ் அயர்ன் (Sponge Iron).இதை கழிவு உலோகங்களுடன் சேர்த்து உருக்கி, ஸ்டீல் தயாராகிறது.  

”நாங்கள் இப்படி ஸ்டீலை உருவாக்க 2016ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டோம். மாசுபாடு பிரச்னையைத் தீர்க்க தீர்வு இருக்கிறதெனில் அதைப் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார் எஸ்எஸ்ஏபி நிறுவன இயக்குநர் மார்ட்டின் லிண்ட்க்விஸ்ட். 




green steel from sweden 

alejandro de la gara

time usa 9-16,2022

https://www.bloomberg.com/profile/person/4024323

https://www.smithsonianmag.com/smart-news/green-steel-produced-first-time-180978550/

https://time.com/6171369/ssab-sweden-green-steel/

 

images 

pixabay 

Thanks Pattam daily

கருத்துகள்