இடுகைகள்

அவமானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டிச குறைபாடு கொண்ட மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணராகும் கதை! - எ மிராக்கிள் - துருக்கி டிவி தொடர்

படம்
மிராக்கிள் டாக்டர் - துருக்கி தொடர் குட் டாக்டர் - கொரிய மூல தொடர் எ மிராக்கிள்  துருக்கி டிவி தொடர் மூலம் குட் டாக்டர் - தென்கொரிய டிவி தொடர் எம்எக்ஸ் பிளேயர் தென்கொரிய தொடரை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் பார்க்க நன்றாக இருந்தாலும் எம்எக்ஸ் பிளேயரில் விளம்பரங்கள் இப்போது அதிகம் என்பதால் செலவிடும் நேரம் அதிகமாகலாம்.  அலி வெபா என்ற ஆட்டிச குறைபாடு கொண்டவர் எப்படி துருக்கியின் பெரும் மருத்துவமனையில் தனது கனவான அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற இடத்தை அடைந்தார் என்பதுதான் மையக்கதை.  இதைச்சுற்றி ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. அவையும் தொடரை 197 எபிசோடுகள் வரை பார்க்க நமக்கு உதவுகின்றன. ஆட்டிச பாதிப்பு கொண்ட மருத்துவர் என்பதால் அவரே முழுக்க புனிதமாகவும் பிறரை குற்றவாளிகளாகவும் காட்டும்  முறையை இயக்குநர் பின்பற்றவில்லை. ஆட்டிச மருத்துவர் என்றாலும் அவரும் உணர்ச்சி வசப்பட்டு சிலதவறுகள் செய்பவர்களாகவும், அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் குழுவினர் அவரை சிறந்தவர்களாக்க முயல்வதும் தொடரில் பார்க்க முடிகிறது.  யாரும் முழுக்க நல்லவர்களுமில்லை. முழுக்க கெட்டவர்களுமில்லை என்பதை அலி வெ

ஒலிம்பிக்கில் சாதித்த மாற்றுப்பாலினத்தவர்கள்!

படம்
  ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மொத்தம் 183 மாற்றுப்பாலினத்தவர்கள் போட்டியிட்டனர். இது உண்மையில் முக்கியமான சாதனை. முப்பது நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களில் இதில் பங்கேற்றனர்.  சூ பேர்ட் - டயானா டாரசி பேஸ்கட் பால் விளையாட்டு வீரர்கள். அமெரிக்க அணியைச் சேர்ந்த இருவரும் ஐந்தாவது தங்கத்தை ஒலிம்பிக் போட்டியில் வென்றனர். இவர்களின் வெற்றியோடு அணியின் வெற்றியும் 55ஆக கூடியது. இந்த அணி கடைசியாக தோற்றது 1992ஆம் ஆண்டு .  நெஸ்தி பெடாசியோ குத்துச்சண்டை வீரர். வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காக பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் தோற்றபிறகு பத்திரிகையாளர்களிடம் இது மாற்றுப்பாலினத்தவர்களுக்கான போட்டியும் கூடத்தான் என்று சொன்னார். லட்சியம் தப்பாது நெஸ்தி.  டாம் டாலே  இங்கிலாந்தைச் சேர்ந்த நீச்சல் வீரர். தன்னை வெளிப்படையாக தன்பாலினத்தவர் என்று அறிவித்துக்கொண்ட துணிச்சல்கார ர். பத்து மீட்டர் டைவிங் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். போட்டிகளுக்கு இடையிலேயே தனது பதக்கத்தை வைத்து நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான பவுச

ஸ்மார்ட்போன் ஆப் வழியாக மாட்டிக்கொள்ளும் மனிதர்கள்! - சீன ஆப்களின் இன்ஸ்டா லோன் பயங்கரம்!

படம்
                கடன் ஆப்கள் - கடன் பெற்றவர்களை அவமானப்படுத்திக்கொல்லும் கொடூரம் ! சீனாவைச் சேர்ந்த கடன் ஆப்கள் மூலம் கேரளம் , தமிழகம் , தமிழகம் மாநிலங்களைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்துள்ள நிலை வேதனைக்குரியது . எப்படி இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது ? மொபைல் ஆப்கள் மூலம் இன்ஸ்டன்டாக கடன்கள் கிடைப்பதுதான் இதனை பலரும் நாடிச்செல்லுவதற்கு முக்கியக் காரணம் , பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த பலரும் இந்த ஆப்களில் கடன் வாங்கியுள்ளனர் . கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் பலரும் வங்கியல்லாத பல்வேறு நிதிநிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு செயல்பட்டு வருகின்றன . இதில் கடன் வேண்டும் என்பவர்கள் தங்களை ஒரு செல்ஃபீ எடுத்து பதிவிடுவதோடு , ஆதார் கார்டு தகவல்களையும் தர வேண்டும் . கடன்களைப் பெற்றவர்கள் அதனை கட்டுவதற்கு 91 முதல் 360 நாட்கள் காலம் தருகிறார்கள் . கடன் பெற்றவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு கடனை கட்டுவதற்கான நிர்ப்பந்த அழைப்புகள் தொடர்புடைய கடன் நிறுவனங்களிலிருந்து வரத்தொடங்கும் . போனில் கடன் ஆப்களை தரவிறக்கும்போது ஒருவரின் போன்புக் தகவல்கள் அனைத்தும் சீன நிறுவனங்களுக்க

ஓகே பூமர் சொல்லலாமா? - பெருசுக்கும் சிறுசுக்கும் லடாய் மூளுகிறது!

படம்
தொண்ணூறுகளுக்குப்பிறகு பிறந்தவர்களுக்கும், அறுபதுகளில், எண்பதுகளில் பிறந்தவர்களுக்கும் சண்டை தொடங்கிவிட்டது. இப்பிரச்னை தலைமுறை சிக்கலாக குடும்பங்களில் முன்னர் இருந்து வந்தது. இன்று தெருவுக்கும் வந்துவிட்டது. சிறிய வார்த்தைதான். ஓகே பூமர் என்ற வார்த்தை நேரடியாக அனைத்து வயதானவர்களுக்கும் எதிராக சொல்லப்பட்டு வருகிறது. பேபி பூமர்கள் இப்படி வார்த்தை ஆயுதம் எடுத்ததால், வயதான ஆட்கள் என்ன சொல்வதென்று பதறி நழுவி வருகிறார்கள். உங்களுக்கு வயசாச்சு என்று கூறுவதை இப்படி சொல்லுகிறார்கள் என மூத்த தலைமுறைக்கும் , நவீன தலைமுறைக்கும் லடாய் நீடிக்கிறது. பொதுஇடங்களில் டிவிகளில் சொல்வது வேறு. அதுவும் ஆபீஸ்களில் சொல்லிவிட்டால் என்னாவது? அண்மையில் நியூசிலாந்து சட்ட வல்லுநர் சூழல் வெப்பமயமாதல் பற்றி மசோதா பற்றி பேசத் தொடங்கினார். ஆனால் அவரது வாதத்தை மூத்த அதிகாரி இடைமறித்து பேசினார். உடனே ஆவேசமான இளையவர் ஓகே பூமர் சொல்லிப்பேச சங்கடம் உருவானது. ஓகே பூமர் என்ற சொல்லைப் பேசினால் சட்டப்படி குற்றம் என்று இன்னும் அரசு கூறவில்லை. வயது ரீதியான தீண்டாமை என்பதைத் தடுக்க வெளிநாடுகளில் சட்டம் உள்ளது. இ

அரசின் அநீதியால் உயிர்துறந்த கணினி மேதை - ஆலன் டூரிங்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர் ஆலன் டூரிங் கணினி சாதனையாளர். இன்று அமேசான், கூகுள் எல்லாம் கோயில் கட்டி வழிப்படும் அளவுக்கு ஏ.ஐ விஷயங்களைச் செய்தவர். என்க்ரிப்ஷன் முறைகளைக் கண்டுபிடித்தவர். ஜெர்மனியைத் தோற்கடிக்க பிரிட்டிஷாருடன் இணைந்து உழைத்தார். ஆனால் அதற்கு பரிசாக பிரிட்டிஷ் அரசு, எதிரிக்கு உதவினார் என்ற பெயரில் ஆலனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டும் இதேபோல் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார். அரசு அவரின் திறமையை விட தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டியெடுக்க முயன்று வெற்றியும் பெற்றது. இதன்விளைவாக ஆலன், இன்னொருவருடன் வைத்திருந்த ஓரினச்சேர்கை உறவு வெளிவர, மக்களால் இகழப்பட்டார். இதனால் இரண்டே ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து இறந்தார். சயனைடு அவரின் படுக்கையறையில் இருந்து பெறப்பட்டது. அன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கருத்து நிலவி வந்தது. இதனை நியாயப்படுத்த பிரிட்டிஷ் அரசு, அவரின் மனநிலை சரியில்லை என்று கூறியது. அவர் தற்கொலை செய்துகொண்டது உண்மை. அதற்கான காரணம் என்ன என்று உறுதியாக தெரியவில்லை என்று அரசு கூறிவிட்டது. ஆனால் அரசி