மகாத்மாவின் ஹரிஜனுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறை அர்த்தம் - வேசி மகன்!
மகாத்மாவின் ஹரிஜனுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறை அர்த்தம் - வேசி மகன்! உலகளவில் உள்ள ஊடகங்கள், இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்களின் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை. அவற்றில் கவனம் செலுத்தி செய்தியும் வெளியிடுவதில்லை. இந்தியாவிற்கு வெளியே உள்ள ஊடகங்கள் அன்பு நிறைந்த இந்திய நாட்டில் தீண்டத்தகாதவர்களின் நிலையைப் பற்றி பெரிதாக அறியாமலயே இருக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் எதற்காக இதைப்பற்றி பேச வேண்டும், உள்ளே இருப்பவர்கள் கூட தீண்டத்தகாத மக்களைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல்தான் இருக்கிறார்கள் நகரத்தில் உள்ளவர்கள், தீண்டாமை எங்கே இருக்கிறது. அதெல்லாம் ஒழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். வெளிநாட்டினர், ஆங்கிலம் பேசும் இந்தியர்களைப் பார்த்து தீண்டாமை பற்றிய கேள்வியை எழுப்பினால், அவர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதில் மேற்சொன்னதுதான். அரசியலமைப்பு சட்டம் தீண்டாமையை ஒழித்துவிட்டது. அதெல்லாம் கடந்து வந்துவிட்டோம் என்பார்கள். ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகையாளர், சென்னைக்கு வந்து பத்து நாட்களாக தங்கியிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட தீண்டத்தகாதவர் ...