மகாத்மாவின் ஹரிஜனுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறை அர்த்தம் - வேசி மகன்!

 





மகாத்மாவின் ஹரிஜனுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறை அர்த்தம் - வேசி மகன்!
உலகளவில் உள்ள ஊடகங்கள், இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்களின் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை. அவற்றில் கவனம் செலுத்தி செய்தியும் வெளியிடுவதில்லை. இந்தியாவிற்கு வெளியே உள்ள ஊடகங்கள் அன்பு நிறைந்த இந்திய நாட்டில் தீண்டத்தகாதவர்களின் நிலையைப் பற்றி பெரிதாக அறியாமலயே இருக்கிறார்கள்.

வெளியே இருப்பவர்கள் எதற்காக இதைப்பற்றி பேச வேண்டும், உள்ளே இருப்பவர்கள் கூட தீண்டத்தகாத மக்களைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல்தான் இருக்கிறார்கள் நகரத்தில் உள்ளவர்கள், தீண்டாமை எங்கே இருக்கிறது. அதெல்லாம் ஒழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். வெளிநாட்டினர், ஆங்கிலம் பேசும் இந்தியர்களைப் பார்த்து தீண்டாமை பற்றிய கேள்வியை எழுப்பினால், அவர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதில் மேற்சொன்னதுதான். அரசியலமைப்பு சட்டம் தீண்டாமையை ஒழித்துவிட்டது. அதெல்லாம் கடந்து வந்துவிட்டோம் என்பார்கள்.

ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகையாளர், சென்னைக்கு வந்து பத்து நாட்களாக தங்கியிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட தீண்டத்தகாதவர் இல்லை. அந்த பிரச்னை பற்றி அவர்கள் பேசவும் இல்லை. தீண்டாமை பற்றி அவர் தெரிந்துகொண்டது பெங்களூருவுக்கு வந்து எங்களைச் சந்தித்தபோதுதான். எனவே, தலித் என்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் மட்டுமல்ல, அவர்களை எங்குமே குறிப்பிடத் தேவையில்லை.

வெளிநாட்டினர், இந்தியாவில் சுற்றுலாவுக்கு வரும்போது அவர்கள் ஆளும் வர்க்கத்தினரான மேல்சாதி இந்துக்களை சந்திப்பார்கள். பத்திரிகையாளர், ஆசிரியர், மாணவர், தொழில்துறை வல்லுநர் என யாராக இருந்தாலும் அவர்கள் மேல்சாதியினராகவே இருப்பார்கள். எனவே, இவர்கள் தீண்டாமை பிரச்னையை மேல்நாட்டினர் கண்களில் இருந்து மறைக்கவே முயல்கிறார்கள். வறுமை ஏழை மக்கள் வாழும் சேரிகளுக்கு அவர்களை அழைத்து செல்வதில்லை. அதற்குப் பதிலாக கிராமங்களுக்கு கூட்டிச்செல்கிறார்கள். அங்கும் தீண்டத்தகாத மக்கள் கிராமத்தை விட்டு தள்ளி வைக்கப்பட்டிருப்பதை கூறுவதில்லை. அமெரிக்காவில் நிறவெறி இருப்பதைப் போல தீண்டாமையை எளிதாக விளக்கி கூறமுடிவதில்லை.

ஆப்பிரிக்க கருப்பினத்தவர்கள், தங்களுடைய போராட்டங்களை கருப்பின இலக்கியமாக வெளியிடுகிறார்கள். அமெரிக்க கருப்பினத்தவர்கள், பாலஸ்தீனர்கள் தங்களுடைய பிரச்னைகளை வெளியிட அமைப்புகளை வைத்திருக்கிறார்கள். அவை ஆற்றல் வாய்ந்தவை. பாலஸ்தீனர்கள் தங்களுக்கென சுதந்திரத்தை நோக்கி செல்ல ராணுவத்தை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிரச்னைகளை வெளியே சொந்த எழுத்தாளர்களும் உண்டு. தலித்துகளுக்கு தங்கள் பிரச்னைகளைப் பேச ஊடகம் இல்லை. அமைப்புகளும் இல்லை. தலித்துகளின் பிரச்னைகளைப் பேச தேசிய அளவில் தலித் வாய்ஸ் எனும் ஆங்கில இதழ் மாதமிருமுறை என தொடங்கப்பட்டது. அந்த இதழையும் பட்டினி போட்டு கொல்ல, வருமானமின்றி அழிக்க அரசும் தனியார் துறையும் விளம்பரங்களை வழங்கவில்லை. மறைந்த டாக்டர் அம்பேத்கர் தவிர தலித்துகளுக்கு முறையான நேர்மையான தலைவர் இதுவரை கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இந்துகள் பெரும்பான்மை கொண்ட கட்சிகளில் தீண்டத்தகாத இனத்தின் மேல்தட்டு வர்க்க மக்கள் சிலர் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்களும் பிரிந்து தனியாக இருக்கிறார்கள். தீண்டத்தகாத சிந்தனையாளர்களில் எவரும் அம்பேத்கரின் பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. தீண்டத்தகாத மேல்தட்டு வர்க்கத்தினர், அரசியலில் உயர்பதவிக்கு ஆசைப்படுகிறார்களே ஒழிய மக்களுக்கான தலைவராக மாற விரும்பவில்லை.

பல நூற்றாண்டுகளாக தீண்டத்தகாதவர்கள் சுரண்டப்பட்டு புரதசத்து இன்றி உடல்ரீதியாக பலவீனமானவர்களாக, மன ரீதியாக தளர்ச்சியுற்று, பொருளாதார ரீதியாக தள்ளாடும் நிலையில், சமூக ரீதியாக அழுத்தப்பட்டு கிடக்கிறார்கள். இந்த இனத்திலுள்ள இளம்பெண்கள் விலைமாதுக்களாக(தேவதாசி) மாற்றப்பட இந்து மதம், அதன் கடவுள்கள் ஆசிர்வாதம் செய்கின்றன. தீண்டத்தகாத மக்களின் நிலைமை விலங்குகளை விட மோசமாக உள்ளது. நாய்களை கூட வீடுகளுக்குள் அனுமதிக்கிற மக்கள், தீண்டத்தகாத மக்களை அனுமதிப்பதில்லை.

கருப்பினத்தவர்கள் உடல் ரீதியாக வலிமையானவர்கள் என்பதால் அவர்கள் விளையாட்டு வீர ர்களாக , பாடகர்களாக, நடனம் ஆடுபவர்களாக மாற முடிந்தது. அந்த இனத்தில் நடிகர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உண்டு. கருப்பு நிறம் அழகானது. அதைப்போலவே பிற சிறுபான்மையினரின் இனக்குழுக்களையும் கூறலாம்.

தனிமைப்படுத்தப்பட்டு சுரண்டப்பட்டு வரும் தீண்டத்தகாதவர்களை இதுபோல கூறமுடியாது. அவர்களில் எழுத்தாளர், சிந்தனையாளர், நடிகர், விளையாட்டுவீர ர் உருவாகி வரமுடியுமா? செடியில் மொட்டு வரும்போதே அதை அழித்துவிடுகையில் பூ மலருவது சாத்தியமா? அவர்கள் வளருவதற்கு எங்கே வாய்ப்புள்ளது. அம்பேத்கர் வளருவதற்கு  பிரிட்டிஷார் ஆட்சி உதவியாக இருந்தது. அதாவது கிறித்தவர்கள். 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டிஷாரின் ஆட்சி மாற்றப்பட்டு பார்ப்பனர்கள் கையில் அதிகாரம் வந்தது. உடனே அவர்கள் தீண்டத்தகாத மக்களுக்காக பாடுபடும் நேர்மையான தலைவர்களை அமைப்பு ரீதியாக ஒடுக்க தொடங்கினர்.

தீண்டத்தகாதவர்களுக்கு வெளியே உள்ளவர்கள் அனைவரும் வெறுப்போடு புறக்கணிக்கும்போது, எந்த ஆதரவும் இல்லாதபோது அவர்களின் குரல் எப்படி உரக்க ஒலிக்க முடியும்? அவர்களில் அவலக்குரல் வெளியே கேட்பதை விட உள்ளுக்குள் கேட்பதே அரிதாகிவிட்டது. இதை வெளிநாட்டினர் எப்படி அறிய முடியும்? ஹரப்பா மொகஞ்சதாரோ குடியேற்றங்களை உருவாக்கிய பூர்விக குடிகளான தீண்டத்தகாதவர்களின் நிலைமை இப்படித்தான் உள்ளது.

இந்தியாவில் உள்ள தீண்டத்தகாவர்களின் நிலைமை அமெரிக்க கருப்பினத்தவர், தென் ஆப்பிரிக்க கருப்பினத்தவர் ஆகியோரை விட மோசமாக உள்ளது. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கருப்பினத்தவர் வீட்டு வேலைகளை செய்யமுடியும். அவர்கள் சமைப்பதை வெள்ளையர்கள் உண்பார்கள். செவிலியர்கள் உண்டு. குழந்தைகளை பராமரிப்பவர் உண்டு. ஆனால், இதெல்லாம் இந்தியாவில் சாத்தியம் இல்லை. தீண்டத்தகாதவர்கள் இந்துக்களின் வீடுகளுக்கு உள்ளே போக கூட அனுமதி கிடையாது. அவர்களின் நிழல், அவர்களை நேரில் பார்ப்பதைக் கூட இந்துமதம் அனுமதிப்பதில்லை. எனவேதான் தீண்டத்தகாதவர் பார்க்கப்பட முடியாதவர், அணுக முடியாதவர், நிழலே இல்லாதவராக இருக்கிறார். தீண்டத்தகாதவரை இந்து பார்த்தாலே மாசுபாடு தொடங்கிவிடுகிறது என்பதால் இதற்குமேல் அதைப்பற்றி பேசுவதே அர்த்தமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு கடற்கரையோரம் புயல் வந்து, பல நூறு மக்கள் இறந்துபோனார்கள். அப்போது, இந்துகள் இறந்துபோனவர்களின் பிணங்களை அகற்றக்கூட முன்வரவில்லை. ஏனெனில் இறந்துபோனவர்களில் யாரேனும் தீண்டத்தகாதவர்கள் இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். இறுதியாக அன்னை தெரசா அமைப்பைச் சேர்ந்த கிறித்தவர்கள் பிணங்களை அகற்றும் பணியை செய்தனர். இந்துகள் தீண்டத்தகாதவர்களை மாசுபாடாக கருதுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள அடிமை முறை சட்டம் மூலம் அகற்றப்பட்டது என்றால், தீண்டாமை மதம் மூலமாக செயல்பாட்டில் உள்ளது. தீண்டாமை அனுமதிக்கப்பட்ட இனவெறி என்று கூட கூறலாம். அடிமை முறையை ஒழிக்க வெள்ளையர்களே கூட சக வெள்ளை இனத்தவரை எதிர்த்து போராடியுள்ளனர். இந்தியாவில் இந்துகள், சக இந்துகளை எதிர்த்து போரிட்டு தீண்டாமையை ஒழிக்க முன்வருவார்களா?  உள்நாட்டுப் போரை அறிவிப்பார்களா? இல்லை. அது எப்போதும் நடக்காது. கிராமங்களின் நாடான இந்தியாவில் இரண்டு உலகம் உள்ளது. ஒன்று, இந்துக்களுக்கானது. மற்றொன்று தீண்டத்தகாதவர்களுக்கானது. எந்த இந்துவும், தீண்டத்தகாதவர்களின் நிலத்திற்கு வரமாட்டார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை அதுதான் நிலைமை. அனைத்து நகரங்களிலும் உள்ள சேரிகளில் 90 சதவீதம் இருப்பது தீண்டத்தகாதவர்களே!

தலித் தி பிளாக் அன்டச்சபிள் ஆப் இந்தியா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!