உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

 



அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

பூனையின் கண்கள் இரவில் மின்னுவது எப்படி?

பூனையின் ரெட்டினாவுக்கு பின்புறம் டாபெடும் லுசிடும் என்ற பொருள் உள்ளது. பதினைந்து அடுக்குகள் கொண்ட  இதுவே ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் பிரதிபலிக்கிறது. கண்ணாடி போல இயங்குகிறது. எனவே, பூனையின் கண்கள் இருட்டில் மின்னுகிறது. பொதுவாக கண்களின் நிறம் பச்சை, பொன் நிறமாக தெரியும். சியாமிஸ் பூனைக்கு மட்டும் சிவப்பு நிறத்தில் தெரியும்.

பர்ரென்ற  ஒலி எங்கிருந்து வருகிறது?

இதுவரை இதற்கு முடிவான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. பூனையின் குரல்வளையில் இருந்து வருகிறது என ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு தரப்பு, நெஞ்சுக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும்போது ஏற்படும் ஒலி என்கிறார்கள். பூனை வலியில், வேதனையில் இருக்கும்போது குட்டிகளைப் போடும்போது, இறக்கும்போது பர் என்ற ஒலியை வெளிப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். இவை எவையும் நிரூபணம் செய்யப்படவில்லை.

மனித உடம்பு செல்களின் ஆயுள் எவ்வளவு?

200 பில்லியன் செல்கள் ஒரு மணிநேரத்திற்குள் இறந்துபோகின்றன். அவை மீண்டும் உற்பத்தியும் ஆகின்றன. தோல் செல்கள் 19-34 நாட்கள், கல்லீரல் செல்கள் 500 நாட்கள், சிவப்பு ரத்த செல்கள் 120 நாட்கள் என கூறலாம்.

மனித உடலில் எத்தனை வகைகள் உள்ளன?

மூன்று வகைகள் உள்ளன. இவற்றை கண்டுபிடித்தவர் பெயர் வில்லியம் ஹெர்பர்ட் ஷெல்டன். இவர் அமெரிக்காவில் உளவியல் மருத்துவராக செயல்பட்டார். எண்டோமார்ப், மெசோமார்ப், எக்டோமார்ப் ஆகியவை மூன்று வகைகள்.

உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது எது?

மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

வயது வந்தவரின் உடலில் இரண்டு மில்லியன் வியர்வை சுரப்பிகள் உண்டு.  



















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!