பணத்திற்காக, வைரத்திற்காக, செல்வத்திற்காக விநாயகர் சிலையை துரத்தும் கூட்டம்!

 



கம் கம் கணேசா
ஆனந்த் தேவர்கொண்டா, நயன் சரிகா
தெலுங்கு

மளிகை கடையை கொள்ளையடிக்கும் இரு திருடர்கள், நகைக்கடையை கொள்ளையடித்து வைரம் ஒன்றை லவட்டிக்கொண்டு தப்பிக்கிறார்கள். நகைக்கடை முதலாளியை வேறு சுட்டுவிடுகிறார்கள். அக்கடையின் பையன்தான், வைரத்தை திருடச்சொல்லி ஐடியா கொடுக்கிறான். வைரத்தை திருடியபிறகு, இரு திருடர்களை சுட்டுக்கொன்றுவிடுவது மறைமுக திட்டம். ஆனால், வைரத்தை திருடிய நாயகன், அவனது நண்பன் ஆகிய இருவருக்கும் எதற்கு கையிலுள்ள வைரத்தை கொடுத்துவிட்டு பணத்தை வாங்குவது? நேரடியாக வைரத்தை நாமே விற்றுக்கொள்ளலாமே என நினைக்கிறார்கள். வைரத்தோடு தப்பி ஓடுகிறார்கள். இது ஒரு கதை.

இன்னொரு கதை. தேர்தல் நேரம், அதில் போட்டியிடுபவர், நூறு கோடி பணத்தை விநாயகர் சிலையில் வைத்து கடத்துகிறார். எல்லாம் மக்களுக்கு விநியோகம் செய்யத்தான். அந்த சிலை மாறிவிடுகிறது. யார் அதை மாற்றியது என ஆட்களை விட்டு தேடுகிறார். அதில் இரு திருடர்களும் சிக்கிக்கொள்கிறார்கள்.

படத்தில் இயக்குநர் ஒரு லாஜிக்கை மறந்துவிட்டார். அதாவது, ஹைதராபாத் திருடர்களில் ஒருவனான நாயகன், வைரத்தை அரசியல்வாதி தரப்பு கொண்டு வரும் முதல் விநாயகர் சிலையில் தும்பிக்கையில் போட்டுவிடுவான். அவர்கள் அதை கொண்டு போய் நீர்விட்டு கரைத்து தேடும்போது பணம் ஏதும் இருக்காது. திருடனின் வைரம் அங்கே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநர், அதை வசதியாக மறந்துவிட்டார். வைரம் கிடைத்தால் அங்கேயே கதை முடிந்துவிடுமே கதை நகராது அல்லவா?

அரசியல்வாதி தரப்பு கொண்டு வந்த விநாயகர் சிலையில் நாயகன் வைரத்தை போட்டுவிட்டு, ராஜா என்ற இன்னொரு கிராமத்து ஆள், மும்பையில் இருந்து கொண்டு வந்து பூஜை செய்யும் விநாயகர் சிலையில் வைரம் இருப்பதாக கதை நகர்கிறது. அங்குதான் அரசியல்வாதி தரப்பு, திருடர்கள் தரப்பு, காவல்துறை என பலரும் மோதிக்கொள்கிறார்கள். அனைவருமே காலிப்பயல்கள். அவர்கள் கண்களுக்கு விநாயகர் வெடிவிபத்தில் காட்சியளிக்கிறார். நாயகன் திருடன். உடனே திருந்தி, நகைக்கடையில் ஆட்டையைப் போட்ட வைரத்தை உடனே விற்று கிராமத்தில் பால் பண்ணை வைத்து, அங்கு அவன் காதல் கொண்ட இளம்பெண்ணையும் திருமணம் செய்துகொள்கிறான். கூடவே அவனது நண்பனும் அங்கேயே நாயகனின் தோழியை மணந்துகொண்டு செட்டிலாகிறான். இப்படியாக கதை முடிகிறது.

தவறு செய்தால் மாட்டிக்கொள்ளாமல் செய்யவேண்டும். கடவுளே குறுக்கில் வந்தாலும் கன்னத்தில் போட்டுக்கொண்டு செய்யும் குற்றங்களை நிதானம் தவறாமல் செய்யவேண்டும் என போதனை செய்கிற படம்.

நயன் சரிகா, pragathi ஶ்ரீவஸ்தவா என இரு பெண்கள் படத்தில் வருகிறார்கள். வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே. இருவருமே லூசுப் பெண்கள். இதில் நயன் சரிகாவுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவரின் பாத்திரம் வலுவாக எழுதப்படவில்லை என்பதால், பயனே இல்லாமல் வந்து போகிறார்.

படத்தின் மூன்று தரப்பு வருகிறது. ஒன்று அரசியல்வாதி. இவருக்கு பணம் என்பது அதிகாரத்தை விலைபேசி வாங்குவதற்கு தேவை. அவரே வசதியானவர்தான். இவருக்கான அறிமுக காட்சி கண்றாவியாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இறுதியில் அவரை கோமாளியாக்கிவிடுகிறார்கள். அடுத்து, திருடர்கள். இதில் நாயகன், அவனது நண்பன் என இருவர் இருக்கிறார்கள். இவர்கள் இருவர் பின்னணி. ஏன் திருடுகிறார்கள் என்பதெல்லாம் எதையும் காட்டவில்லை. உணர்வு பொருந்திப்போகும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. படத்தில் ஒரே ஆறுதல், ஆர்கன் டேவிட்டாக வரும் வெண்ணிலா கிஷோர் மட்டுமே. அவரின் முன்கதை, செய்யும் காமெடி மட்டுமே பரவாயில்லை ரகம்.

மூன்றாவது, சத்யம் ராஜேஷ். அதாவது அவரின் பாத்திரப் பெயர் ராஜாவாரு. கிராமத்தில் செல்வாக்கான குடும்பமாக இருந்தவர்கள். இப்போது வசதியிழந்து தேய்ந்துவிட்டவர்கள். விநாயகர் சிலையைக் கொண்டு பூஜை செய்தால் வசதி வாய்ப்பு வரும் என சாமியார் ஒருவர் கூறுகிறார். அதற்காக சிலையை ஒன்றரை லட்சம் கொடுத்து செய்து வாங்கி வருகிறார்.

இதில் மூன்று தரப்புக்கும் பணம் தேவை. யாருக்குமே செய்யும் செயலில் குற்ற உணர்வு துளிகூட கிடையாது. எப்படியாவது பணம் கிடைத்தால் போதும் என யோசிக்கிறார்கள். வினோதமான பாத்திரங்கள் இருந்தால் மட்டுமே போதும் படம் ஓடிவிடும் என இயக்குநர் நினைத்திருக்கிறார். படத்தில் இயல்பான பாத்திரம் என ஏதுமே இல்லை.

நயன் சரிகா, சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து அந்த கடையின் உரிமையாளரை மணந்துகொள்கிறாள். கண்டிப்பாக இயல்பான நடவடிக்கைதான். பின்னே இரவில் மளிகைகடையில் திருடி பிழைக்கும் நாயகனை மணக்க முடியுமா என்ன? ஆனால், அதை அவள் கூறுவது போல ஒரு காட்சி கூட இல்லை. நாயகன் அவள் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறுகிறான். யார் யாரை ஏமாற்றியது? இதேபோல இன்னொரு காட்சி. நீலவேணி என்ற நாயகியை சிலர் கேலி கிண்டல் செய்யும்போது பில்டப் கொடுத்து நாயகன் அடிவாங்குவான். நாயகிக்கு உடனே காதல் வந்துவிடுகிறது. அப்புறம் மாட்டு கொட்டிலில் தீபிடித்து கன்றுக்குட்டியை நாயகன் தூக்கி வருவது... இதெல்லாம் என்ன காட்சி.. ஏதோ இந்துத்துவா அஜெண்டாவுக்கு படம் எடுப்பது போல இருக்கிறது..

முழுப்படமே வேறு ஒரு உலகில் நடக்கிறது. எனவே, இந்த காட்சி என எதையும் நாம் கூறிவிட முடியாது. அந்தளவு மோசம் அனைத்துமே.... நகைச்சுவையா, தீவிரமான காட்சிகளா என்று சொல்ல முடியாதபடி நிறைய காட்சிகள் உள்ளன. ஆனந்த் தேவர்கொண்டா படங்கள் கொஞ்சம் பரவாயில்லை ரகத்தில் இருக்கும். ஆனால், இந்த படம் மீட்டருக்கு மேலே போய்விட்டது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

கோமாளிமேடை குழு 

Release date: 31 May 2024 (India)
Director: Uday Shetty
Music director: Chaitan Bharadwaj
Running time: 2h 12m
Language: Telugu


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!