இடுகைகள்

கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதை கார்டெல் குழுவை அழிக்க கைகோர்க்கும் இரு நண்பர்களின் போராட்டக்கதை!

படம்
  சிட்டி ஆஃப் சாவோஸ்  சீன தொடர் 24 எபிசோடுகள் ஐக்யூஇ ஆப் கலின்சியா என்ற  நாடு உள்ளது. அதில் புகழ்பெற்ற நகரம் லாங்புக். இங்கு போதைப்பொருட்கள் கார்டெல்கள் வலுவாக உள்ளன. அதில் முக்கியமான கார்டெல், செவன்ஸ்டார் சொசைட்டி. இந்த அமைப்பு, ஆர்எக்ஸ் 45 என்ற போதைமருந்தை தயாரித்து மறைமுகமாக விற்று லாபம் பார்த்து வருகிறது. நேரடியாக செய்யும் வியாபாரங்கள் தனி. குளியலறை, கடை, மதுபானம் விற்பது, வணிக வளாகங்கள், கிளப்புகள், சூதாட்ட மையங்கள்  என ஏராளமானவை நடைபெறுகிறது.  சீனவீரர், இந்த போதைப்பொருள் மாஃபியாவை ஒழிக்க கலின்சியா வருகிறார். அதற்காக அவர் வேண்டுமென்றே குற்றம் ஒன்றில் சிக்கிக்கொண்டு லாங்புக் கடல் சிறைக்கு செல்கிறார். அங்கு, யு யோங்ஜி என்ற செவன்ஸ்டார் சொசைட்டியின் துணைத்தலைவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொல்பவர்களை இடைமறித்துக் கொன்று அந்த மனிதனுக்கு நெருக்கமாகி போதை மாஃபியாவில் சேருகிறார். கூடவே, தீவின் சிறையில் இருந்த வார்டன் லாவோ பாயும் சேருகிறார். இவர், யு யோங்ஜியின் பள்ளிக்கால நண்பர்.  சீன வீரர் லூஜா, தன்னைப் பற்றிய ரகசியங்களை லாவோ பாயிடம் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார். பாய்க்கு தனது தம

சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

படம்
  பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள்  தி லிஸ்டனர் சீன டிவி தொடர்  34 எபிசோடுகள்  சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது.  பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவருக்கு வளர்ப்பு தந்தை பே

கண்முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராக அமைதி காப்பதும் தவறுதான்! - கோகோ காஃப்

படம்
  கோகோ காஃப் coco gauff டென்னிஸ் வீரரான கோகோ காப், 2023ஆம் ஆண்டில்  22 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். இதில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் கிடைத்துள்ளது. இது அவருக்கு பெருமையான ஒன்று. கருப்பினப் பெண்ணாக நான் விளையாடும் விளையாட்டு அந்தளவு பன்மைத்தள்மை கொண்டதல்ல. எனக்கு இது அர்த்தம் கொண்ட ஒன்று என்றார்.  கடந்த ஆண்டு செப்டம்பரில், தனது பத்தொன்பதாவது வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை காஃப் வென்றார். போட்டியில், ஆரியானா சபாலென்கா என்ற வீரரை போட்டியிட்டு வென்றார். சாம்பியன் பட்டத்தை பெறும்போது பெயரும் புகழும் கூடவே வரும் என்று தெரியும். ஆனால், அதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. எனது வீட்டில் எத்தனை பட்டங்களை வாங்கி வைக்க முடியும் என்றுதான் யோசித்து வருகிறேன் என்றார்.  கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியின் அரையிறுதியில் தோற்றாலும் காஃபின் நம்பிக்கை தளரவில்லை. அவர் தான் நினைத்த பாதையில் தீர்க்கமாக சென்றுகொண்டே இருக்கிறார்.  2020ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்டபோது, அதை தீவிரமாக யோசித்துள்ளார். நடந்த அநீதி பற்றி யோசித்தேன். அதை நினைத்து அழுதுள்ளேன். அது

அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!

படம்
யூ ஆர் ஆல் சரவுண்டட் கொரிய டிராமா இருபது எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்  நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார்.  இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்த நகரில்

அப்பாவியான பங்குச்சந்தை தரகன் தன்னை சைக்கோபாத் கொலைகாரனாக நினைத்துக்கொண்டால்....

படம்
சைக்கோபாத் டைரி  கே டிராமா பதினாறு எபிசோடுகள்  ராக்குட்டன் விக்கி ஆப்  பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன். இளகிய இதயம் கொண்ட அப்பாவி. எனவே, அவனை பலியாடாக்கி ஒரு நிறுவனத்தைப் பற்றிய அறிக்கையை தயார் செய்யச் சொல்கிறார்கள். அந்த வேலை கூட அவனது நண்பன் செய்யவேண்டியதுதான். ஆனால் அவன் நாயகனின் தலையில் கட்டிவிடுகிறான். அதை அவன் தயாரித்துக் கொடுத்த அந்த நேரத்தில் அதிலுள்ள தகவல்களால் அந்த நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது. இதை வைத்து அவனை வேலையை விட்டு நீக்க முயல்கிறார்கள். தனது நெருங்கிய நண்பனே இப்படி துரோகம் செய்கிறானே என நொந்துபோன நாயகன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். அப்படி தற்கொலை செய்ய முயலும்போது, யாரோ ஒருவர் வலியில் முனகுவது போல சத்தம் கேட்க, கீழே வந்து எட்டிப்பார்த்தால் ஒருவன் வயதான ஒருவரைக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறான். அதை நாயகன் மறைந்திருந்து பார்க்கிறான். அவன் கோழை, அப்பாவி. எனவே, அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது முதியவர் கொலைகாரனது டைரியை தட்டிவிடுகிறார். அதை நாயகன் எடுத்துக்கொண்டு ஓடும்போது போலீஸ்காரில் அடிபட்டு ரெட்ரோகிராட் அம்னீசியாவில

குடும்பத்தை அழித்தவர்களை நிதானமாக துப்பறிந்து கொல்ல முயலும் நாயகன்!

படம்
  Decline c drama  7 episodes சீன தொடர் சர்வ சாதாரணமாக 24, 35 என எபிசோடுகளை இழுத்துவிட்டு பார்வையாளர்களை கஷ்டப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்போது சில தொடர்கள் அதன் மையப்பொருட்களை பொறுத்து எபிசோடுகளை சுருக்கி வருகிறார்கள். கிடைக்கும் பயனாக, நமக்கு டேட்டா சற்று மிச்சமாகிறது.  கதையை, துண்டு துண்டாக கூறி முக்கியமான முழுக்கதையை ஒருவழியாக இறுதியாக சொல்லி முடிக்கிறார்கள். நாயகன் ஒரு துப்பறிவாளன். நன்றாக வாழ்ந்து அழிந்துபோன குடும்பத்தின் வாரிசு. சீன நகரங்களில் நடக்கும் அமானுஷ்ய கொலைகளை ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதே அவனது வேலை. எதற்காக இதை செய்கிறான் என்பது அவனது குடும்பம் படுகொலையான விவகாரம் சம்பந்தப்பட்டது. கதையின் இடையே நாயகன் தனது கடந்தகாலம் பற்றி அவனது தற்காப்புக்கலை தெரிந்த நண்பனிடம் கூறுகிறான். அவன் அந்தளவு நெருக்கமான நண்பனா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம்.  ஒரு நாடக குழு நகரத்திற்கு வருகிறது. அதில் உள்ள பதினொரு பேர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டுபேர் மட்டும் காணவில்லை. இதன் பின்னாலுள்ள மர்மத்தை நாயகன் சூ சென்க்ஸி கண்டுபிடிக்கிறான். இதற்கு அவனது தற

கும்பலின் அதிகார ஆதிக்கத்திற்கு தனிமனிதர்கள் கட்டுப்பட்டு கீழ்படிவது ஏன்?

படம்
  ஒரு தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுகிறார்கள். ஆனால் எதற்காக? தலைவனது வலிமை தொண்டர்களை விட அதிகம். அவனால் செய்யவேண்டிய முக்கிய வேலைகளை பிறருக்கு சொல்லவும் முடியும். அதை திறம்பட செய்துகாட்டவும் முடியும். தொலைநோக்கும், புத்திசாலித்தனமும், வலிமையும் கொண்டவர்களுக்கு எப்போதுமே பின்தொடரும் கூட்டம் உண்டு. இணையத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்தான். மனிதர்கள் எப்படி பிறருக்கு அடிபணிகிறார்கள் என்பதை உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் ஆராய்ந்தார். இதுபற்றி, பிஹேவியரல் ஸ்டடி ஆஃப் ஒபீடியன்ஸ் என்ற ஆய்வறிக்கையை எழுதி பிரசுரித்த ஆண்டு 1963. பெரும்பான்மையான மக்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கையில் கொடுக்கும்போது, அவர்கள் அதை வைத்து மக்களுக்கு கெடுதல்களையே செய்வார்கள் என்பதும் கூட ஸ்டான்லியின் அறிக்கையில் தெரிய வந்த உண்மைகளில் ஒன்று. ஒருவகையில் ஒருவரின் அறமதிப்புகளின் எல்லையை சோதிக்கும் விதமாக நடைபெற்ற உளவியல் சோதனை என இதைக் கூறலாம்.  அன்றைய காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜிப்படையைச் சேர்ந்த அடால்ஃப் ஐக்மன் என்பவரின் விசாரணை பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தது. ஸ்டான்லி இந்த விசாரணையை ஆர்வமாக கவனித்து வ

யூதர் என்ற காரணத்திற்காக வேட்டையாடப்பட்ட உளவியலாளர் செர்ஜ் மாஸ்கோவிசி

  செர்ஜ் மாஸ்கோவிசி ரோமானியாவின் பிரெய்லாவில் யூதக்குடும்பத்தில் பிறந்தார். பிறகு பள்ளியில் சேர்ந்தார். யூதர் என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1941ஆம் ஆண்டு, யூதர்கள் அவர்களின் மதம் காரணமாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். செர்ஜூவும் அவரது தந்தையும் உயிர் பிழைக்க பல்வேறு நகரங்களுக்கு நகர்ந்து சென்றுகொண்டே இருந்தனர்.  இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்றார். அப்போது 'டா 'எனும் கலை பத்திரிகையை துணை நிறுவனராக இருந்து தொடங்கி நடத்தினார். பின்னாளில் இந்த பத்திரிக்கை தணிக்கை சட்டம் காரணமாக தடை செய்யப்பட்டது.  ரோமானியாவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு முகாம்கள் வழியாக நகர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு பிரான்சிற்கு சென்றார்.  1949ஆம் ஆண்டு, உளவியலில் பட்டம் வென்றார். முனைவர் படிப்பை, டேனியல் லாகாசே என்பவரின் வழிகாட்டலில் செய்தார். இதற்கான கல்வித்தொகையை அகதி என்ற அடையாளத்தின் கீழ் பெற்றார். 1965ஆம் ஆண்டு, சமூக உளவியலுக்கான ஐரோப்பிய ஆய்வகத்தை உருவாக்கினார். அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் உளவியல் பேராசிரியர

வெறுப்பும் கொலைவெறியும் மனதில் ஊற உருவாகிறான் ஊனக்கால் கொலைகாரன்!

படம்
  ஃபிஸ்ட் டிமோன் ஆஃப் மவுண்ட்குவா  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம். மனம் நிறைய வலியும் வேதனையும் மட்டுமே நிறைந்த நாயகனின் கதை.  கொள்ளையர்கள் ஒரு ஊரை வந்து தாக்குகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவைக் கொல்கிறார்கள். மகனையும் அடித்து உதைத்து குற்றுயிராக்கிவிட்டு அவன் தங்கையைக் கடத்திச்செல்கிறார்கள். அந்த சிறுவனை மவுன்ட் குவாவைச் சேர்ந்த கல்வியாளர் ஹியூன் சோ காப்பாற்றி எடுத்து வளர்க்கிறார். கொள்ளையர்களின் தாக்குதல் காரணமாக அவனுக்கு இடதுகால் ஊனமாக மாறுகிறது. இடதுகால் தொய்ய, வலது காலால் அடியெடுத்து வைத்து நகர்வதுதான் அவனது பாணி. அவனுக்கு சியோயங் என பெயர் வைக்கிறார்.  தற்காப்புக்கலைக்கு கால்கள் முக்கியம். அதுவே பழுதானதால், ஹியூன் சோவின் மாணவனாக இருந்தாலும் நொண்டி, அவமானச்சின்னம், நாய் என மவுன்ட் குவா இனக்குழுவில் அனைவருமே அவனை கேலி செய்கிறார்கள். உனக்கெல்லாம் தற்காப்புக்கலை எதற்கு என இழிவுபடுத்துகிறார்கள். ஆனால், சியோயங்கிற்கு ஒரு கிராமத்தை, அதிலும் தன் குடும்பத்தை அழித்த கொள்ளைக்காரர்களை யாரும் தண்டிக்கவில்லை என்ற ஆத்திரம், ஆதங்கம் உள்ளது. ஒரு கிரா

அதிர்ச்சிகரமான சம்பவமும், அதைப் பற்றிய நினைவுகளும்!

படம்
  அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியும், அதன் நினைவுகளும்  ஒரு அரசியல் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார். இதை அறிந்தவர்கள் முதலில் அதிர்ச்சியடைவார்கள். அதேசமயம், அது சம்பந்தமாக செய்திகளை நாளிதழ்களில் தேடிப்படிப்பார்கள். அந்த சமயம் தான் செய்துகொண்டிருந்தோம். யாருடன் இருந்தோம். பேசினோம் என்பது கூட நினைவில் இருக்கும். அதாவது, பல்லாண்டுகள் கடந்தாலும் கூட அவர்களால் அந்த அதிர்ச்சியான சம்பவங்களை துல்லியமாக நினைவுகூரமுடியும். எப்படி, அந்த அதிர்ச்சியான சம்பவத்தை நினைவை திரும்பத் திரும்ப அவர்கள் நினைவுகூர்ந்துகொண்டே இருப்பதால்தான். இதை உளவியல் ஆய்வாளர் ரோஜர் ப்ரௌன், 'ஃபிளாஸ்பல்ப் மெமரிஸ்' என்று குறிப்பிட்டார்.  1963ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகமே மறக்காது. இதை தொடர்புபடுத்தி திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நூல்கள், தொலைக்காட்சி தொடர்கள் கூட தயாரிக்கப்பட்டன. கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய இருவரையும் கூட எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்கள்தான்.  சாதி, மத, மொழி வேறுபாடின்றி இருவரைய

தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்க சிறு குறுங்கத்தியோடு கிளம்பும் விஷ ராஜா!

படம்
  பாய்சன் கிங், வெனோம்கிங் மாங்கா காமிக்ஸ்  எப்படி சிலந்தி கடித்து மாணவன் ஒருவன் சிலந்தி மனிதன் ஆகிறானோ அதேபோல சென்டிபீட் எனும் விஷப்பூச்சியை ஜின் ஜகான் கடித்துக்கொல்கிறான். அதன் விஷம் உடலுக்குள் இறங்க சுயநினைவை இழக்கிறான். அவனது தாத்தா, பேரனின் உயிரைக் காப்பாற்ற மாத்திரை ஒன்றை அவனுக்கு கொடுக்கிறார். அந்த மாத்திரை ஜின்னின் உடலில் உள்ள ரத்தத்தை ஜெல் போல மாற்றி விஷம் அவனை பாதிக்காதவாறு மாற்றுகிறது.  மருத்துவ இனக்குழு, விஷ இனக்குழுக்களால் முழுமையாக தோற்கடிக்கப்படுகிறது. நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு பழிவாங்க சிறுவன் ஜின் எழுகிறான். அவனது பலமே சென்டிபீட் மூலம் உடலுக்குள் சேகரமான விஷம்தான். அதை வைத்து அவனை விட பலமடங்கு வலுவான எதிரிகளிடம் போரிடுகிறான். சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் அடிபட்டு உதைபட்டு நினைவிழந்து வீழ்ந்தாலும் தைரியத்தை இழப்பதில்லை. தான் தோற்றுவிட்டேன். தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எ்ன்பதை அவன் கூறுவதில்லை. அவனது மன உறுதியும் போர் திட்டங்களும் அவனோடு இருப்பவர்களுக்கும், சமயங்களில் அவனது எதிரிகளுக்கும் கூட திகைப்பை ஏற்படுத்துகிறது.  மருத்துவ இனக்குழு அழிக்கப்பட்டு