இடுகைகள்

கன்னட நாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யசவந்தன் என்ற மனிதரைப் பற்றிய எழுத்தாளர் அறியும் பிம்பங்கள்! - அழிந்தபிறகு - சிவராம காரந்த், கன்னட நாவல்

படம்
        சிவராம காரந்த் அழிந்த பிறகு சிவராம காரந்த் சாகித்ய அகாதெமி பம்பாயில் வாழும் யசவந்தர் என்பவரின் தந்தி எழுத்தாளரின் வீட்டுக்கு வருகிறது. அவருக்கு உடல்நலம் குன்றி இருப்பதாகவும், அவரை  வந்து பார்க்கும்படியும் அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் எழுத்தாளரால் சரியான நேரத்திற்கு யசவந்தரை சென்று பார்க்கமுடியவில்லை. இதன் காரணமாக தாமதமாக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால், அவர் மருத்துவமனையில் இறந்து சடலமாக கிடைக்கிறார். அவருக்கு இறுதிச்சடங்குசெய்து முடித்தபிறகு பார்த்தால், அவரது அறையில் உள்ள கடிதங்கள், வீட்டுக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றை படிக்கிறார். அதன் வழியே யசவந்தர் யார் என்பதை எழுத்தாளர் அறிந்துகொள்வதுதான் கதை. நாவல் முழுவதும் யசவந்தர் என்ற மனிதர் யார் எப்படிப்பட்டவர் என்பதை பல்வேறு மனிதர்களின் கருத்துகள், விவரிப்பு மூலமே சொல்லியிருக்கிறார். ஆசிரியர். யாருக்கேனும் துயரம் என்றால் தன்னையுமறியாமல் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும் மனிதர்தான் யசவந்தர். அவர் ஒருகாலத்தில் தனது தந்தை, தாத்தா வழி சொத்துக்களை பிறருக்கு கொடுத்தே அழிக்கிறார். பின்னாளில் திருமணமாகும்போது சொத்துக்களை பாடுபட்டு சேர்