இடுகைகள்

புலியூர் முருகேசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அநீதிக்கு எதிராக விளிம்பு நிலை மக்களின் வயிற்றில் எரியும் நெருப்பு - படுகைத் தழல் - புலியூர் முருகேசன்

படம்
  படுகைத் தழல் புலியூர் முருகேசன் நாவல் படுகைத் தழல் நாவல் பரிசோதனை முயற்சியான பல்வேறு விஷயங்களை தீர்க்கமான தன்மையில் பேசுகிறது.  சமகாலத்தில் இருந்து சோழகாலம் வரை பயணிக்கும் நூல் அந்தந்த காலகட்டத்தில் எளிய மனிதர்கள் மீது அதிகாரம் எப்படி பாய்ந்து அவர்களது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது என விளக்கமாக பேசுகிறது.  கதையின் தொடக்கத்தில் கலியமூர்த்தி என்பவர் பற்றிய விவரங்கள் கூறப்படுகின்றன.அவருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு சில நாட்களாக அடிவயிற்றில் வலி உள்ளது. அதை சரிசெய்ய அவரது பெரியப்பா மகன் அவரை இரண்டு ரூபாய் மருத்துவரிடம் கூட்டிச்செல்கிறான். அவர் ஹோமியோபதி மருத்துவர். பல்வேறு சோதனைகளை செய்தவர், அடிவயிற்று வலிக்கு காரணம் வேறு எங்கோ உள்ளது என கலியமூர்த்தியை அவரது நினைவுகளின் வழியாக பேச வைக்கிறார்.  கதை தொடங்குகிறது. ராசன் எனும் புலையக்குடி ஆள் எப்படி வேளாளர், பிராமணர் உள்ளிட்ட மேல் சாதிகளால் வதைபட்டு தனது நிலத்தை இழந்து பசியால் அவர் மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த குடும்பமே வதை பட்டு அழிகிறது. ஏறத்தாழ நாவல் முழுக்க வரும் எளிய விளிம்புநிலை மனிதர்கள் அனைவருமே இதேபோல மரணத்தை அல்லது மரணத்தையொத்

சாகித்தியக்காரனின் திறமையை இருட்டடிப்பு செய்துவிட முடியுமா? - கடிதங்கள்

படம்
     pixabay இனிய நண்பர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் வீட்டில் ஆத்தாவின் இறப்புக்குச் சென்றேன் . இரண்டு நாட்கள் இருந்துவிட்டு பிறகு சென்னைக்கு திரும்ப வந்துவிட்டேன் . சகோதரர் இன்னும் சில நாட்கள் இருந்து வேலைகளைப் பார்த்துவிட்டு கோவைக்கு செல்வார் . நான் வேலை செய்யும் வார இதழ் நிறுவனத்தில் வேலை செய்யும் உதவி ஆசிரியர்கள் , நிருபர்கள் பெயர் திடீரென இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது . அண்மையில் பெண்கள் இதழ் , மருத்துவ இதழ் ஆசிரியர்கள் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டனர் . இதன் காரணமாக எங்கள் நிறுவனத்தின் நிர்வாகம் கடுமையாக கோபம் கொண்டுவிட்டது போல . சாகித்தியக்காரனின் திறமையை இப்படி மறைத்துவைத்துவிட முடியுமா ? பணமும் , தன்னகங்காரமும் கண்ணை மறைக்கிறது என்றுதான் கூறவேண்டும் . குங்குமத்தில் தொடராக வரும் முகங்களின் தேசம் - ஜெயமோகன் எழுதுவதை வாசிப்பீர்கள் என நினைக்கிறேன் . நான் என் கைக்கு வரும் இதழில் முதலில் படிப்பது இதைத்தான் . ஈரோடு கதிரின் எழுத்து அப்படியே எஸ் . ரா போலவே இருக்கிறது . காலையில்தான் காலச்சுவடு இதழைப் பட