கௌரவமற்ற படுகொலைகள்
கௌரவமற்ற படுகொலைகள் - கர்நாடகத்தில் அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் கர்நாடகம் இந்திய மாநிலங்களில் முதலாக வெறுப்பு பேச்சுக்களை தடுக்கும் விதமாக சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதை வலதுசாரி பார்ப்பன பாசிச கட்சிக்ககு எதிரான நகர்வு என்று கூறலாம். எளிதாக மனித கீழ்மைகளை தட்டி எழுப்பி வாக்குகளாக மாற்றும் மதவாத கட்சிக்கு இப்படியான சட்டங்கள் பெரிய தடையல்ல. ஏனெனில் அவர்கள் எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை. அவர்களுடைய ஒரே சட்டம் முஸ்லீம், கிறித்தவர்கள், பட்டியல் இனத்தவர்கள் ஆகியோரை அடித்து உதைத்து உரிமைகளைப் பறித்து சொத்துகளை அபகரிப்பதுதான். அப்படித்தான் ஆரிய சம்பத்து இதுவரை செயல்பட்டிருக்கிறது. 2022-2023 ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தில் 13 ஆணவக்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பனிரெண்டு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். இறந்தவர்கள் அனைவருமே மேல்சாதியைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பெண்கள். கொலை செய்தவர்கள் அந்நியர்களல்ல. அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அடிப்படையில் மக்கள் பெண்களை சொத்தாக கருதுகிறார்கள். அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்தால், தங்களுக்கு ...