கிழக்காசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குக்கர் பெண்களின் வாழ்க்கையை மாற்றியதா?
1962ஆம் ஆண்டு, கணவர் தனது மனைவிக்காக பிரஷர் குக்கர் ஒன்றை வாங்குகிறார். இதைப் பார்த்து அருகிலுள்ள வீட்டுக்காரரும் குக்கர் ஒன்றை வாங்கி மனைவிக்கு கொடுக்கிறார். குக்கரை வாங்கிக் கொடுப்பது, மனைவில் அதை வைத்து வேகமாக சமையல் செய்துவிட்டால் வெளியில் வேலைக்கு செல்லலாம் என கணவர் எதிர்பார்க்கிறார். சமையல் வேலையை செய்துவிட்டு வெளியில் செல்லும் இருவரின் மனைவிகளும் தாங்கள் சந்திக்கும் ஆண்களிடம் காதலில் வீழ்கிறார்கள். இன் தி மூட் ஃபார் லவ் என்ற புகழ்பெற்ற படத்தின் காட்சிகள் மேலேயுள்ளவை. திரைப்படத்தின் கதை ஹாங்காங்கில் நடந்தது. ஆசியாவில் நடந்த முக்கிய கண்டுபிடிப்புகளி்ல ஒன்று, பிரஷ்ர் குக்கர் கண்டுபிடிப்பு. இதன்மூலம் பெண்கள் சமையல் வேலையிலிருந்து சற்றே விடுபட்டு வேலைக்கு செல்ல முடிந்தது. ஒவ்வொரு வேளைக்கும் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள், குக்கர் வழியாக ஒரே நேரத்தில் சமைத்து இறக்கிவைத்துவிட முடிந்தது. இன் தி மூட் ஃபார் லவ் படத்தின் இயக்குநர், வாங் கர் வாய் மேற்சொன்ன கருத்தை கூறியிருந்தார். ஆல் வி இமேஜின் ஏஸ் லைட் என்ற திரைப்படத்தை இயக்குநர் பாயல் கபாடியா என்பவர் இயக்கியிருந்த...