உலகின் முக்கியமான நெற்பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள்!






Straw, Rice, Grain, Field, Farm, Rural, Sheaths





நெற்பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள்


ஆசிய நாடுகளில் பெருமளவு நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரிசி வகை உணவுகள் இங்கு அதிகம்.  ஆனால் காலப்போக்கில் பல்வேறு மரபு அரிசி வகைகளில் மகசூல் குறைவு , சத்துக்கள் பற்றாக்குறைவு, பருவநிலை வேறுபாடுகள் ஆகிய பிரச்னைகள் எழுந்தன. இதனால், பல்வேறு நாடுகளின் அரசும் இதற்கான ஆராய்ச்சிக்கு உதவின.  அரிசியில் பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளை மரபணு மாற்ற முறையில் சேர்க்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். இப்படி கிடைத்த அரிசி ரகங்களால் உணவு உற்பத்தி அதிகரித்தது. இன்றும் அரிசியில் பல்வேறு விட்டமின்களைச் சேர்க்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி ஆராய்ச்சி செய்து வரும் முக்கிய நிறுவனங்களைப் பார்ப்போம். 



சுவிட்சர்லாந்து ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Swiss Federal Institute of Technology (Zurich)) 


1855ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம்.  உணவுப்பயிர்களில் இரும்புச் சத்தைச் சேர்த்து அதனை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மாற்ற முயன்று வருகிறது. இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து மற்றும்  பீட்டா கரோட்டின் கொண்ட  அரிசி ரகத்தை இம்மையத்தினர் உருவாக்கி மேம்படுத்தி உள்ளனர். விட்டமின் ஏ சத்து குறையும்போது குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி பலவீனமாகிறது.இதன் விளைவாக, அம்மை, வயிற்றுப்போக்கு, மலேரியா பாதிப்புகள் அதிகரிக்கின்றன.  பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட அரிசியை, இம்மையத்தின் நவ்ரீத் குல்லர் (Navreet Bhullar) தலைமையிலான ஆராய்ச்சிக்குழு கண்டறிந்துள்ளது. இப்பயிர் விளைவதில் பசுமை இல்ல  வெளியீடும் குறைவாக உள்ளது. சோதனைக் கட்டத்தில் இப்பயிர் ரகம் உள்ளது. 


ஜப்பான் டோபகோ


அரசு நிறுவனமான ஜப்பான் டோபகோ என்ற நிறுவனம், 1985ஆம் ஆண்டு உருவானது.இந்நிறுவனம்,  அரிசியில் உள்ள குளூட்டன் புரதத்தைக் குறைத்து அதனை விளைவிக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளது.  இதற்காக ஆப்பிரிக்க விவசாய தொழில்நுட்ப பௌண்டேஷனுடன் (AATF) ஒப்பந்தமிட்டு, புதிய நோய்எதிர்ப்பு சக்தி கொண்ட அரிசி ரகங்களை உருவாக்கி வருகின்றனர். இவையும் பல்வேறு கட்ட சோதனைகளில்  உள்ளன.  ஜப்பானில் பொதுவான பயன்பாட்டில் உள்ள அரசி வகை ஜபோனிகா. 1988க்குப் பிறகு 150 ரகங்களை சூப்பர் அரிசி ரகங்களாக ஆராய்ச்சி செய்து உருவாக்கியது ஜப்பானிய அரசு. தற்போது அங்கு, கிடாகாவோரி (Kitakaori), ஹபாடகி (Habataki) ஆகியவை அதிக விளைச்சல் தரும் ரகங்களாக அங்கு உள்ளன.  ஜப்பான் விவசாய கூட்டுறவு நிறுவனம் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு பொருளான லாக்டோஃபெரினைக் கொண்டுள்ள அரிசி ரகத்தை தயாரித்தது. 


உலக அரிசி ஆராய்ச்சிக் கழகம்- IRRI 


1960ஆம் ஆண்டு உருவான பயிர் ஆராய்ச்சி நிறுவனம் இது. அரசு உதவியுடன் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இந்த ஆராயச்சி நிலையம் அமைகபிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள இம்மையத்தில் 2011 தொடங்கி பல்வேறு கூடுதல் மகசூல், வறட்சியைத் தாங்கும் நெல் ரகங்கள் விளைவித்து, உருவாக்கி, அதனை உலக நாடுகளுக்கு வழங்கி வருகின்றனர்.  2012 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு CR Dhan405 எனும் உப்புநீரை ஏற்று வளரும் நெற்பயிரை வழங்கியது. 2013 ஆம் ஆண்டு சம்பா மக்சூரி, ஐஆர் 64 எனும் ரகங்களைப் பெற்றது.  உலக அரிசி ஆராய்ச்சிக்கழகம் பல்வேறு நாடுகளுக்கு அவற்றின் நிலப்பரப்பு தன்மையைப் பொறுத்து மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. 


மான்சான்டோ


1901ஆம் ஆண்டு உருவான அமெரிக்க நிறுவனமான மான்சான்டோ மரபணு மாற்ற பயிர்களை உலக நாடுகளில் ஆராய்ச்சி செய்து வருகிறது.  அவற்றை சந்தையில் விற்றும் வருகிறது. இந்தியாவில் மான்சான்டோ, மரபணு மாற்றிய சோளம், பருத்தி, காய்கறி விதைகளை விற்று வருகிறது. உலக நாடுகளில் எண்ணெய் வித்துகளில் பீட்டா கரோட்டின் சத்துகளை சேர்த்து விளைவிக்கும் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அரிசி உட்பட பல்வேறு உணவுப்பயிர்களில் மரபணு மாற்றங்களை செய்வதற்காக நிதியளித்து உதவும்  செயல்களையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள், மக்கள் உணவு, உடை, எரிபொருள் ஆகியவற்றில் தன்னிறைவு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்து வருகிறது மான்சான்டோ. பருத்தியை பொல்கார்டு 2, டெல்டாபைன், பராஸ் பிரம்மா ஆகிய பெயர்களில் விற்கிறது. தக்காளியை  செமினிஸ், மக்காச்சோளத்தை டாகெல்ப் என்ற பெயர்களிலும் விற்று வருகின்றனர்.  



 



 

கருத்துகள்