குற்றவாளிகளை அடித்து துவைக்கும் கிறுக்குப்பிடித்த போலீஸ்காரனின் கதை - கிராக் - ரவிதேஜா
கிராக்
சாலையில் ஐம்பது ரூபாய் நோட்டு, மாங்காய் அதன் மேல் ஆணி ஒன்று என அனைத்தும் ஒன்றாக கிடக்கிறது. இவை மூன்றும் யாரைக் குறிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. மூன்று பேரும் மூன்று குற்றவாளிகள், அவர்களின் வாய் வழியே எப்படி ஒரு போலீஸ் அதிகாரி அவர்களை கைது செய்தார். என்பதுதான் கதையாக விரிகிறது.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு பார்முக்கு திரும்பியுள்ளார் மாஸ் மகாராஜா ரவிதேஜா. இதில் காதல் கிடையாது. கல்யாணம் ஆவதற்கான பாடல் ஒன்றூ. அதற்கு பிறகு வரும் பிரியாணி, கொரமீசம் பாடல் என காதலும், அன்பும் பெருகியோடும்படி நடித்திருக்கிறார். இவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் சுருதிஹாசன்.
படம் முழுக்க குற்றவாளிகளை சற்றே கிராக்குத்தனமான போலீஸ்காரர் எப்படி அடித்து பிடித்து பிளக்கிறார் என்பதுதான் கதை. எனவே காதல் காட்சிகள் சற்றே ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கானவைதான். அதிலும் பெண் பாத்திரங்களை சும்மா உலவ விடாமல் அவர்களுக்கான பங்களிப்பை செய்திருக்கிறார் இயக்குநர். சுருதிஹாசன் யார் என்று பின்பகுதியில் அவர் சொல்லும் ட்விஸ்ட் சிறப்பாக உள்ளது.
படத்தில் இசைக்கு தமன் என்றால் சண்டை பயிற்சிகளை உயிரைக்கொடுத்து சிறப்பாக அமைத்திருக்கிறார் ராம் லக்ஷமண் மாஸடர்கள். விலங்கு போல வேட்டையாட வருகிறவர்களின் காட்சி மிரட்டுகிறது. செமையான செட்டப். பஸ் ஸ்டாண்ட் சண்டை, இறுதியாக வரும் கடற்கரை சண்டை இரண்டிலும் விலங்குகளின் வேட்டை வெறி தெறிக்கிறது. இறுதியாக வில்லன்களை முழுக்க போட்டுத்தள்ளிவிட்டார்கள் என பலரும் நினைக்க, திருந்துவதற்கான வாய்ப்பு என்றவகையில் முக்கியமான விஷயத்தை பேசியிருக்கிறார்கள்.
தீப்பொறி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக