காதல் அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் என்னென்ன?

 

 

 

 Art, Fingers, Heart, Love, Pair

 

 


இன்று உலகில் புழங்கும் காதல் வார்த்தைகளை அறிவோமா?


143 முதல் பிளேம்ஸ் வரை பல்வேறு காதல் வார்த்தைகளை காதல் உலகம் பார்த்து வந்துதது. இப்போது என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்போமா?


ஃபிளியாபேக்கிங்

டிவி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் ஃபிளியாபேக் சீரிஸின் பெயர். மோசமான காதல் வாழ்க்கையைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.


கோட்


கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்


சிறந்த காதல் பார்ட்னரை குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.


அபோகலிப்சிங்


நமது வழியில் வரும் எந்த உறவையும் கைவிடாமல் அதனை கடைசி உறவாக நினைத்து நடந்துகொள்வது. கோவிட் காலத்தில் பலரும் கற்றுக்கொண்ட விஷயம் இது.


பியூ/ பூ/பே

ஆண்டுதோறும் சிறியதாகிக்கொண்டு செல்லும் பார்ட்னரின் செல்லப்பெயர். காதலிலிருந்து திருமண வாழ்க்கைக்கு சென்றாலும் அப்படியே பின்பற்றலாம் தப்பில்லை.


எமோ

சின்ன பிரச்னை என்றாலும் கரைந்தழுது மதிமுக வைகோ போல நடந்துகொள்பவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம். எல்லாவற்றிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருக்கும் நபர்களை ஹேண்டில் வித் கேராக கவனித்துக்கொள்ளவேண்டும்.


டிடிஆர்

டிபைன் தட் ரிலேசன்ஷிப்


இது என்ன மாதிரியான உறவு, கமிடெட் , கேசுவலா, நூடூல்ஸ் போல குழப்பமானதா என ஒருவருக்கு வரும் குழப்பம். சரியாக யோசித்து லேபிளில் பெயர் எழுதி பச்செக்கென சுவற்றில் எழுதி வைத்துவிடவேண்டிய நேரத்தை அவசியத்தை சொல்கிறது.


லவ் இஸ் லவ்


இந்த வார்த்தை பிரைட் லவ் எனும் வலைத்தளம் பயன்படுத்தும் வகையிலானது. காதலுக்கு பாலினம் எல்லாம் கிடையாது என்று சொல்கிறது. பெரும்பாலும் இதனை எல்ஜிபிடியினர் பயன்படுத்துகிறார்கள்.


தேங்க்யூ நெக்ஸ்ட்


மென்பொருட்களுக்கே அப்டேட் அடிக்கடி கொடுக்கும்போது எத்தனை நாட்கள் தேங்க்ஸ் சொல்லி நழுவுவது? தேங்க்ஸ் நெக்ஸ்ட் என்ற யாராவது கேட்கும்போது படீரென மனதிலுள்ள விஷயத்தை சொல்லிவிடலாம். இந்த வார்தையை ஆங்கில பாடகர் அரியானா கிராண்டே உருவாக்கினார். அதாவது அவரது பாட்டிலிருந்து சுட்டது.


நான் டேட், டேட்


உங்களுக்கு பிடித்தவரை கூட்டிக்கொண்டு ரெஸ்டாரெண்டுக்கு வந்துவிட்டீர்கள். பிரேக்பாஸ்ட் காம்போ கூட சொல்லி விட்டீர்கள். ஆனாலும் கூட மெனுவில் என்ன இருக்கும் என்பதை விட, நாம் செய்வது டேட்டா இல்லையா என மனசுக்குள் எறும்புகள் ஊருவது போல கேள்வி எழுவதுவதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்.


கீப்ஸ்


நீங்கள் சொல்லும் புறணிகளை, பொல்லாக்கதைகளை கண்சிமிட்டாமல் கேட்டு அப்படியா செல்லம் என்று சொல்லுகிற ஜீவராசிக்கானது இந்த வார்த்தை. சத்தியமாக உங்கள் காதல் இணையைத்தான் சொல்கிறோம். இவர்தான் நீங்கள் சந்தோஷத்தில் குதிக்கும்போதும் துக்கத்தில் ராஜா மெலடி கேட்கும்போதும் துணையாக இருப்பவர். அவரை காப்பாற்றித்தானே ஆகவேண்டும்.


வைப்பிங் டுகெதர்!


உங்களின் நகல். உங்களைப் போலவே பாட்டு, காமெடி, சோறு என அனைத்தும் அப்படியே 99.9 சதவீதம் பொருந்தும் துணையைக் குறிக்கிற வார்த்தை.


ஜியா ஜலே ஜான் ஜலே


நீங்கள் இருக்கும்போது உங்கள் காதலரோ, காதலியோ இன்னொரு டாப் டக்கர் அழகன், அழகிக்கு ரூட்டு விடுவதைதான் சொல்லுகிறார்கள்.


பியார் கியா டோ டர்னா கியா


சமூகம், பெற்றோர், ராக்கி கயிறு என எதைக்கண்டும் கலங்காத இரும்பு நெஞ்சம் கொண்ட படேல் வம்ச பையன்கள், பெண்களை இப்படி சொல்லலாம்.


ரோகஃபைடு

இந்த கொரோனா காலத்திலும் கூட காதலர்களாக இருந்து திடீரென கல்யாணம் செய்து பந்தியில் பாயாசம் ஊற்றாமல் செய்தி சொல்லும் ஆட்களைத்தான் இப்படி சொல்கிறார்கள். நல்லா இருங்க பட்ஜெட் பத்மநாபர்களே.


ஸம்ப்டு

ஜூம் காலில் காதல் வளர்த்து காதல் முறிந்து போனவர்களை இப்படி சொல்லலாம்.


ஓடிபி


ஊபர் காரிலிருந்து போனுக்கு வரும் ஓடிபி எண் அல்ல. உண்மையான ஜோடி என்கிறார்கள். அதாவது ஒன் ட்ரூ பேர் அர்த்தமாயிந்தா?


சிச்சுவேஷன்ஷிப்


இவரோடு எதற்கு பழகுகிறோம். டைம்பாஸா, பிரெண்ட் வித் பெனிபிட்ஸா என எப்போதும் ஹல்லுசினேஷன் ஸ்டேஜ் 2வில் அலையும் மனிதர்களுக்கான வார்த்தை


வோக்ஃபிஷ்ஷிங்


ஜனதா காரேஜ் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு இருக்கும் இயற்கை நேசமும், பெண்களுக்கான மதிப்பும், கூடுதலாக எல்ஜிபிடியினருக்கான பாசநேசமும் பொங்கி வழிந்தால் அவரைக்குறிப்பதுதான் இந்த வார்த்தை


டைம்ஸ் ஆப் இந்தியா


சப்தபர்னா பிஸ்வாஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்