கரையான்புற்று எப்படி உருவாகிறது?

 



Termitiera, Safari, Tanzania, Karater Ngorongoro



கரையான்கள் மரம், செடிகளில் வெளிப்புற ஓட்டிலுள்ள செல்லுலோஸை (cellulose) உண்ணும் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. எறும்பு, குளவிகள் ஏன் கரப்பான்பூச்சிகளுக்கும் நெருங்கிய உறவுகொண்டவை. உலகம் முழுவதும் 2,750 கரையான் பூச்சி இனங்கள் உள்ளன.  காடுகளில் இறந்துபோன மரங்களை அரித்து தின்று மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. அதேவேளையில் கட்டுமானங்களிலுள்ள  மரப்பொருட்களையும் விட்டுவைப்பதில்லை. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவீனமடைகின்றன. 

கரையான்கள் ஆப்பிரிக்காவின் சாவன்னா, பசிபிக் கடல் பகுதிகள், பருவமழைக்காடுகளில் புற்றைக் கட்டி வாழ்கின்றன. மரங்களை அரித்து நார்ச்சத்து பொருளான செல்லுலோஸை அதிகளவு உண்டாலும் அதனை எளிதில் செரிக்க ஒருவித பாக்டீரியாவை உடலில் கொண்டுள்ளன. கரையான் புற்றுகள் (termitarium) உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதில் 2 லட்சம் கரையான்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   

கட்டுமானப் பொருட்கள்

கரையான்கள், தூய்மையான மண் மற்றும் தம் கழிவுகளைக் கொண்டு புற்றுகளை எழுப்புகின்றன. இவை விரைவில் காய்ந்துவிடுவதால் உறுதியாக இருக்கும். 

இடம் 

உயர்ந்த மலைப்பகுதி, மரங்களின் அடிப்பகுதி, நிலத்தின் கீழ்ப்பகுதி என கரையான்கள் புற்றுகளை கட்டுகின்றன. இதனை டெர்மிடேரியா (Termitaria) என்று அழைக்கின்றனர்.

அமைப்பு

 புற்றிலுள்ள சிறிய கரையான்கள் வெப்பம், காற்றுக்கான அறைகளை கட்டுகின்றன.  இதன்மூலம்  மேல், கீழ் அறைகளுக்குத் தேவையான காற்று, வெப்பம்  கிடைக்கிறது. 

தோட்டம் 

புற்றின் அடிப்பகுதிக்கு  பூஞ்சைத் தோட்டம் என்று பெயர். இங்கு  கரையான்கள்  மரப்பொருட்களை உண்ணும்படியான  பூஞ்சைகளாக மாற்றுகின்றன.  

அரண்மனை

பூஞ்சைத் தோட்டத்தின் நடுப்பகுதியில் உள்ள அறையில் ராஜா, ராணி கரையான்கள் வாழும்.


நன்றி

ஹவ் இட் வொர்க்ஸ் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்