கருந்துளையின் உருவாக்கம், செயல்பாடு!

 





Confused Pop Tv GIF by One Day At A Time



கருந்துளை எப்படி உருவாகிறது?

அண்மையில் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தொலைநோக்கிகளை ஒருங்கிணைத்து கருந்துளையைக் கண்டுபிடித்து புகைப்படமும் எடுத்தனர்.

 இரண்டு கருந்துளைகளில் ஒன்று, 26 ஆயிரம் ஒளி ஆண்டுகளும், மற்றொன்று 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ளன.

 ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு முதல்  ஹவாய், மெக்சிகோ, ஸ்பெயின்  ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்ட தொலைநோக்கிகளை இணைத்து கருந்துளையை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். 

இறந்த நட்சத்திரம்!

நட்சத்திரங்கள் ஒளிருவதற்கான எரிபொருட்கள் தீர்ந்துவிட்டால், அவை மெல்ல இறக்கத் தொடங்கும். சூரியன் அளவிலுள்ள நட்சத்திரங்கள் மெல்ல சிறுசிறு வெடிப்புகள் தோன்ற உடையும். இதற்கடுத்த நிலையாக சூப்பர் நோவா நிலை தோன்றும்.  

வெடிப்பு

எரிபொருட்கள் தீர்ந்துபோன நிலையில் நட்சத்திரத்தின் சுய ஈர்ப்புவிசை செயலிழந்து போகும். காரணம், வெளிப்புறம் நடந்த அணுக்கதிர் செயல்பாடு நின்றுபோவதே. மெல்ல நட்சத்திரம் உடைந்து விண்வெளியில் பரவும். 

நொறுங்கியது நட்சத்திரம்!

ஈர்ப்புவிசை  தானாகவே நட்சத்திரத்தை உட்புறமாக நொறுக்குகிறது. இதன்விளைவாக நட்சத்திரம் முழுமையாக உடைந்து தன் வடிவத்தை இழக்கிறது. இதிலும் ஈர்ப்புவிசை இவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இதன் அடுத்தநிலை கருந்துளை. 

கருந்துளை

நட்சத்திரத்தின் முழுமையான எடை ஓரே இடத்தில் குவிகிறது. இதன் விளைவாக, அதிக வலிமை கொண்ட ஈர்ப்புவிசை மையமாக கருந்துளை உருவாகிறது. இப்பாதையில் வரும் ஒளியைக் கூட கருந்துளை தப்பவிடுவதில்லை. 

ச.அன்பரசு




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்