மாணவர்களை மேம்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள்!

 




Books, Shelves, Book Store, Library, Education, Shelf



மாணவர்களை மேம்படுத்தும்  கல்வி சீர்திருத்தங்கள்!


 ஆந்திரப் பிரதேச அரசு கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை, மேம்பாடுகளை் செய்து வருகிறது.  


ஆந்திர அரசு, மாநிலத்திலுள்ள 62 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 80 லட்சம் மாணவர்களுக்கான (தனியார் பள்ளி உட்பட) கல்வியில் கவனம் செலுத்தி பிரமிக்க வைக்கிறது. பள்ளிக்கான பாடத்திட்டங்களை உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களோடு ஆலோசித்து உருவாக்குவது, பயிற்றுமொழியை ஆங்கிலமாக்குவது, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்துவது என பரபரப்பாக ஆந்திர அரசு செயற்பட்டு வருகிறது. 


பயிற்றுமொழியாக தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவது அங்கு, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இம்முயற்சி மாணவர்கள் உலகளவில் தம் அறிவை விரிவுப்படுத்திக்கொள்ள உதவும் என்கிறது ஆந்திர அரசு. ”அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உருவாக்குவதே அரசின் லட்சியம். புதிய சீர்திருத்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கும்” என்கிறார் ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சரான அடிமுலப்பு சுரேஷ். 


ஆந்திர அரசு, மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கில வழி கல்விப் பயிற்சியை செயற்படுத்தி வருகிறது. இதுவரை நகரம் மற்றும் கிராமம் சார்ந்த 2700 ஆசிரியர்களுக்கு ஆங்கிலவழி கல்விப் பயிற்சியை ் வழங்கியுள்ளது. பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதிகளுக்காக முதல் கட்டமாக 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தேவைப்படும் வசதிகளுக்கு 12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிகாகோ, ஆக்ஸ்ஃபோர்டு, கேம்ப்ரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்களும் ஆந்திர அரசு பள்ளித்திட்டத்தை வடிவமைப்பதில் உதவி வருகின்றன. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் கல்வி நிறுவனங்களிலும் கல்வி சார்ந்த உதவிகள் கோரப்பட்டுள்ளன. ஆந்திர அரசின் கல்விச் செயற்பாடுகள் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

தகவல்: BS





கருத்துகள்