செய்தி இலவசமல்ல!

 





அண்மையில் ஆஸ்திரேலியா, உள்நாட்டிலுள்ள செய்தி நிறுவனங்களைக் காப்பாற்ற புதிய சட்டங்களை உருவாக்கியது. இது அங்கு செய்திகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து கோடிகளில் வியாபாரம் செய்த கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. உடனே அவர்கள் நாங்கள் எங்கள் சேவையை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொள்கிறோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. 

இதனால் கூகுளும், ஃபேஸ்புக்கும் ஆஸ்திரேலியாவில் தங்களது சேவைகளை முதன்முறையாக பணம் கொடுத்து பெறவிருக்கின்றனர். கூகுள், பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெற்று அதற்கேற்ப தகவல்களை அவருக்கு அனுப்பி வியாபாரம் செய்துவருகின்றனர். விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் இருந்தாலும் அதனை உருவாக்குபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் புகார் கொடுத்ததால் ஆஸ்திரேலிய அரசு சட்டங்களை மாற்றி அவர்களை காப்பாற்ற முனைந்துள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசின் முடிவை ஏற்றுள்ளது. இந்த நிறுவனம் பிங் எனும் சர்ச் எஞ்சினையும், லிங்க்டு இன் தளத்தையும் நடத்தி வருகிறது. பிற நிறுவனங்கள் இதனை வரவேற்கவில்லை. 

இத்தகவலை நாம் பேசுவதற்கு காரணம், ஆஸ்திரேலியாவில் அரசு செய்த கட்டுப்பாடுகள், சட்டங்கள் இந்தியாவிலும் தேவை. செய்தியை உருவாக்குபவர்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் அதனை தேடித்தருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைப்பது என்பது நேர்மையான தொழில் அல்ல. இந்திய அரசு இந்த விவகாரத்தில் சரியான முடிவெடுத்தால் செய்தி நிறுவனங்களுக்கு கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் காசு கொடுக்கும்படி நிலைமை மாறும். 

விளம்பரச்சந்தையில் கூகுள், பேஸ்புக் முன்னிலையில் இருக்க அமேஸான் குறைந்த பங்களிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்போதே இதற்கான சரியான சட்டங்களை உருவாக்கினால் மட்டுமே உள்நாட்டு செய்தி நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் காக்க முடியும். 


நன்றி

எகனாமிக் டைம்ஸ்

டிகே அருண்



கருத்துகள்