அல்ட்ரா சோனிக் அலைகள் ஆயுதமா?



Audio, Music, Sfa Jazz, Sound, Wave


அல்ட்ரா சோனிக் அலைகள் ஆயுதமா?

திருவிழாக்கள், மணவிழா ஆகியவற்றில் உங்களை டக்கென ஈர்ப்பது,  அந்த விழாவை ஊருக்குச் சொல்லும் பாடல்கள்தானே!  தூரத்தில் இருக்கும்போது ரசிக்க வைக்கும் பாடல்களின் இசையை, ஸ்பீக்கர்களின் அருகில் இருக்கும் போது எழும் அதிர்வுகளால் அதை ரசிக்க முடியாது. அதே காரணம்தான் இங்கு செய்தியாகி இருக்கிறது. 

சீனா மற்றும் கியூபாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வினோதமான குற்றச்சாட்டை அந்நாட்டு அரசுகள் மீது வைத்தனர். சோனிக் அலை ஆயுதங்களால், எங்களைத் தாக்குகிறார்கள் என்பதுதான் அது. தற்போது ஜமா (Jama) என்ற ஆய்விதழ், பாதிக்கப்பட்டோரின் மூளைகளை ஆய்வு செய்து ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு இல்லையென கியூபா அரசு, அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஒலி அலைகள்  ஒருவரைத் தாக்குமா? குறிப்பிட்ட அலைவரிசை வேகத்தில் செலுத்தினால் முடியும்தான். ஆனால் அவை மூளையிலுள்ள நியூரான்களை பாதித்து ஒருவரின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் கிடையாது. 

ஒலி அலைகளில் ஒன்றான அல்ட்ரா சோனிக் அலைகளை மனிதர்கள் 20 முதல் 20 ஆயிரம் கிலோஹெர்ட்ஸ் வரை கேட்க முடியும். இதே அலைநீளத்தில் பிற விலங்குகளும் இந்த அலைகளை உணர, கேட்க முடியும். நடைமுறையில் தொழிற்சாலைகளில் உலர்த்துதல், தூய்மைப்படுத்துதல் (நகை, சிகிச்சைக் கருவிகள்), எரிபொருட்களை எரிவாய்க்கு செலுத்தவும், சோனார் போன்ற வழிகாட்டும் கருவிகளிலும் இந்த அலைகள் பயன்படுகின்றன.  

கேட்க முடியும் அல்ட்ராசோனிக் அலைநீளம்!

விலங்குகள்    குறைவு  அதிகம்

பூனை 100 32000

நாய் 40 46000

யானை 16 12000

டால்பின்கள் 70 15000

(ஹெர்ட்ஸ் அளவுகளில்)

இஸ்ரேல் நாடு, 3500 ஆண்டுகளுக்கு முன்னதாக டிரம்பெட் ஒலி எழுப்பும் படையினரைக் கொண்டிருந்தது. இன்று அமெரிக்க கடற்படை அகௌஸ்டிக் முறையிலான ஒலி ஆயுதங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள்,  மக்கள் கூட்டங்களைக் கலைக்க எல்ஆர்ஏடி (Long  Range Acoustic Device) கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றன. 2011 ஆம் ஆண்டு முதலே ஒலியை ஆயுதமாகப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன. 

ஒளி மற்றும் ஒலி வேறுபாடுகளைப் பற்றிய கருத்தைக் கூறிய அறிவியலாளர் கிறிஸ்டியன் டாப்ளர், இத்துறையில் முக்கியமானவர். ஒளி, ஒலி உருவாகும்  இடம், செல்லும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து மாறும் அதன் அலைநீளம் பற்றிய 'டாப்ளர் விளைவு' இயற்பியல் துறையை பெரிதும் மேம்படுத்த உதவியது. 

கிறிஸ்டியன் டாப்ளர் (1803-1853)

ஆஸ்திரியாவின் சால்ஸ்பெர்க் நகரில் 1803 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று பிறந்த கணிதவியலாளர் மற்றும் வானியலாளர். 1825 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர், இயற்பியல், வானியல், கணிதம் ஆகிய  துறைகளில் 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதியுள்ளார். 1842 ஆம் ஆண்டு கிறிஸ்டியன் எழுதிய "Concerning the Coloured Light of Stars" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து டாப்ளர் விளைவு பிறந்தது. 


 

கருத்துகள்