மத்திய அரசுப்பள்ளியை முந்திய அரசுப்பள்ளி! - சாதித்தது எப்படி?

 




Pixel Cells, Idea, Visualization, Visualize, Teaching



தலைநகரில் அசத்தும் அரசுப்பள்ளி!

டில்லியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி, தேர்ச்சியிலும் பிற திறன்களிலும் அசத்தி வருகிறது. 

கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த பள்ளிகள் பட்டியலில் கேந்திரிய வித்யாலயாவுக்கு இரண்டாமிடம்தான் கிடைத்தது. முதலிடம், அரசுப்பள்ளியான ராஜ்கிய பிரதிபா வித்யாலயாவுக்கு கிடைத்தது. மத்திய அரசு பள்ளியை முந்தும் அளவுக்கு அப்படியென்ன சிறப்பு இப்பள்ளியில் உள்ளது? 

டில்லி அரசு நடத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 7,9,11 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெறும் மாணவர்களை இங்கு சேர்த்துகொள்கின்றனர். வகுப்பறைக்கு 35 பேர்தான். இதற்காக டில்லி அரசு தன் நிதியில் 28 சதவீதத்தை செலவு செய்துள்ளது. நாட்டில் பிற மாநிலங்கள் அதிகபட்சமாக 14.8 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்கியுள்ளன. இந்த பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு மாத வருமானமே ரூ.3000தான். ஆசிரியர்கள் அனைவருக்கும் டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளதால், காகிதப்பயன்பாடு குறைவு. “இங்கு மாணவர்கள் வருகைப்பதிவு குறைந்தால், அது பற்றி விசாரித்து ஆலோசனை அளிக்கும் வசதி உள்ளது’ என ஆச்சரியப்படுத்துகிறார் பள்ளி முதல்வரான தேஜ்பால் சிங். 

இங்குள்ள பாடங்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வலிந்து ஊட்டுவதில்லை. சுயமாக அவர்கள் உள்வாங்கிக்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை மட்டுமே செய்கிறார்கள். அதுவே அவர்களை தேர்வில் மட்டுமல்ல, வாழ்விலும் வெற்றியாளர்களாக மாற்றும் என்கிறார்கள். 

தகவல்:LiveMint 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்