மகத்தான இயற்பியல் ஆளுமைகள்! - அல்ஹசன், ஆர்க்கிமிடிஸ், லூயிஸ் ஆல்வரெஸ்
அல்ஹசன் (Alhazen 965 -1040)
அல்ஹசம் பல்துறை வல்லுநர். வடிவியல், இயற்பியல், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் வித்தகர். பியூட் எமிரேட்டிலுள்ள பஸ்ரா எனும் நகரத்தில் (இராக்) அல்ஹசன் பிறந்தார். இவரது உருவம் கூட தோராயமாக வரையப்பட்டதுதான்.
அரசு அமைச்சராக பணியாற்றிய அல்ஹசன், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கணிதம், வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கண்டுபிடிப்புகளைச் செய்தார். கண்ணாடிகள் பற்றி அல்ஹசன் எழுதிய புக் ஆஃப் ஆப்டிக்ஸ் நூல் (Book of Optics) முக்கியமானது. வாழும் காலத்தில் 90 கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர், கணிதம் மற்றும் ஆடியியல் துறைகளில் முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.
2
ஆர்க்கிமிடிஸ் (கி.மு.287 - கி.மு.212)
முந்தைய காலத்தைச் சேர்ந்த செவ்வியல் கண்டுபிடிப்பாளர். கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், ஆயுத வடிவமைப்பாளர் என பல்வேறு பணிகளில் வல்லுநர்.
தோராயமாக கி.மு.287 ஆம் ஆண்டு பிறந்த ஆர்க்கிமிடிசின் தந்தை, வானியலாளர். இவர், சிசிலி எனும் தீவிலுள்ள சைரகஸ் எனும் நகரில் பிறந்து வளர்ந்தார்.
சிறிய அளவில் விசையைப் பயன்படுத்தி பெரிய பொருட்களை நகர்த்தும் விதத்தைக் கண்டறிந்து கூறினார். இயந்திரங்களின் அறிவியல் மற்றும் நீர்ம நிலையியல் பற்றியும் ஆராய்ந்து கூறினார்.
இயற்பியலின் அடிப்படை கருத்தான ஈர்ப்புமையம் பற்றி கூறியவர் ஆர்க்கிமிடிஸ்தான். நுட்பமான மேம்பட்ட கணித முறைகளை இயற்பியல் உலகிற்கு அறிமுகம் செய்தவர் இவரே. ஆறுகள், குளங்களிலிருந்து நீர் இறைக்கும் ஆர்க்கிமிடியன் திருகு இவரது முக்கியக் கண்டுபிடிப்பு.
3
லூயிஸ் ஆல்வரெஸ் (Luis Walter Alvarez 1911-1988 )
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோவில் 1911 ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று, பிறந்தவர் இயற்பியலாளரான லூயிஸ் வால்டர் ஆல்வரெஸ்.
இவரின் தந்தை வால்டர் கிளமண்ட், மருத்துவர். இயற்பியலில் பல்வேறு பரிசோதனைகளை செய்து அதனைப் புரிந்துகொள்வது ஆல்வரெஸது பாணி. நோபல் பரிசு வென்ற இயற்பியலாளரான இவர், இரிடியம் அடுக்கைக் கண்டுபிடித்தவர்.
காஸ்மிக் கதிர்களைப் பயன்படுத்தி எகிப்தின் பிரமிட் அடுக்குகளைக் கண்டுபிடிக்கலாம் என்று கூறி பிரமிக்க வைத்த அறிவியலாளர் இவர். கதிர்வீச்சுக்குட்பட்ட அணு, நியூக்ளியசிலுள்ள எலக்ட்ரானைக் கவரும் என்ற இவரது கே -எலக்ட்ரான் கவர்தல் கண்டுபிடிப்பு முக்கியமானது.
கருத்துகள்
கருத்துரையிடுக