இந்தியாவில் வரவேற்பு பெற்று வரும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள்!

 




Image result for eating strawberry



ஸ்ட்ராபெர்ரி ஆங்கில நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் பழம். ஆனால் இன்று ஆங்கில காலனி நாடுகளிலும் எப்படியோ சமாளித்து இப்பழங்களை உற்பத்தி  செய்து வருகிறார்கள். அப்படித்தான் இந்தியாவில் ஜான்சி பகுதியிலும், குஜராத்திலும் கூட ஸ்ட்ராபெர்ரிக்கான சந்தை உருவாகியுள்ளது. 

இதனைப்பற்றி பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இன்று இதைப்பற்றி நாம் பேசினாலும் ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் என்பது ஆங்கிலேயர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. 1884ஆம் ஆண்டு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள கொங்கணி மலைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனை அங்குள்ள சிறைவாசிகள் மூலம் தொடங்கிய ஆங்கிலேயரின் பெயர் எஸ்.எஸ். ஸ்மித். 

மனிதர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் ஒன்றுபோலத்தான். அவர்களுக்கான கலாசார விஷயங்களை உருவாக்கிக்கொண்டேதான் இருப்பார்கள். இதன் அடிப்படையில் கோவில் கட்டுவது, கலாசார மையங்களை அமைப்பது, அவர்களுக்கான தனி குடியிருப்புகளை அமைப்பது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆங்கிலேயர்களின் அனைத்து காலனி நாடுகளிலும் அவர்களின் நாட்டைப் போலவே சிறுபகுதி ஒன்று செயல்பட்டு வரும். அவர்கள் பல்வேறு பயிர்களை, பழங்களை வளர்த்து வந்திருக்கலாம். அது அவர்களின் வெளியேற்றத்திற்கு பிறகும் கூட அப்படியே தொடர்ந்திருக்கலாம். 

இந்தப்பதிவு எதற்கு என்றால், நேற்று மயிலாப்பூரில் சாப்பிடச்செல்லும்போது தள்ளுவண்டிக்காரர் கீரைகளை விற்றுக்கொண்டு வந்தார். அவரது வண்டியின் பின்புறம் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் இருந்தன. அதனையும் பாலக்கீரை, முளைக்கீரை என்ற வகைகளை சொல்லி முடித்தபிறகு அப்பழத்தையும் பெயர் சொல்லி விற்று வந்தார். அதனை எதார்த்தமாக பார்த்து அந்த நேரம் ஆச்சரியமானது. உள்நாட்டு பழங்களை விட ஸ்ட்ராபெர்ரிக்கான மார்க்கெட் தள்ளுவண்டி அளவிலும் கூட உருவாகியிருக்கிறது. இப்போது வட இந்தியாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கான விழாக்களையும் நடத்துகிறார்கள். இதன் அர்த்தம், அதனை எளிதாக சந்தைப்படுத்துவதுதான். எனக்கு தெரிந்த ஸ்ட்ராபெர்ரி என்பது ஒரு ரூபாய் பூமர் சூயிங்கத்தில் உள்ள ஸ்ட்ராபெர்ரிதான். அந்த நிறுவனத்தில் அதற்குப்பிறகு எந்த பிளேவருமே உருப்படியாகவில்லை. மசாலா, ஆரஞ்சு என என்னவோ முயன்று கடையில் ஜெல்லியை சூயிங்கத்தில் இணைத்து ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். 

ஸ்ட்ராபெர்ரியின் மார்க்கெட்டிங்கை பார்த்தால் வாழைப்பழத்தின் இடத்தை விரைவில் பிடித்துவிடுமோ என்று தோன்றுகிறது. 


ரோனி 

 






கருத்துகள்