கவனிக்கப்படாத ஆளுமைகள்

 


Image result for amalie emmy noether


கவனிக்கப்படாத ஆளுமைகள்

அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதித்த ஆளுமைகளை கணக்கில் எடுத்தால் நூறு ஆளுமைகள் என்ற தலைப்பில் பட்டம் பதிப்பகத்தில் நூலே கொண்டு வரலாம். ஆனால் இதில் இடம்பெறுபவர்கள் யார்? ஐன்ஸ்டீன், காஸ், ஆர்க்கிமிடிஸ், கலீலியோ ஆகியோர்தான் இப்பட்டியலில் இடம்பெறுவார்கள். ஆனால் இவர்களைக் கடந்து புகழ்பெற முடியாத புத்திசாலிகள் உண்டுதானே? அவர்களின் வரிசைதான் இது. 

அமேலியா எம்மி நோதர் (Amalie Emmy Noether 1882–1935)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்து ஆற்றல் சேமிப்பு குறித்த வரையறையைக் கூறிய அறிவியலாளர். சார்பியல் தியரி சார்ந்த கணிதத்திலும், இயற்கணிதத்திலும் பங்களித்துள்ளார். பல்லாண்டுகள் புறக்கணிப்புக்குப் பிறகு கோட்டிங்கன் அறிவியலாளர்கள் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பாலின பாகுபாட்டினால் அமேலியாவின் திறமை மறைக்கப்பட்டது வேதனை. 

எமிலி போரல் ((Emile Borel ( 1871–1956))

பிரான்சில் பிறந்த அறிவியலாளரான இவர், பதினொரு வயதிலேயே அறிவுதாகத்தில் பாரிஸ் சென்றார். நிகழ்தகவு தியரியில் பல்வேறு சாதனைகளை  நிகழ்த்தியவர் போரல். 1920 ஆம்ஆண்டு கேம் தியரியில் பல்வேறு அடிப்படை அம்சங்கள் உருவாக்கி நமக்கு வழங்கியவர் இவரே. 

வில்லியம் கிங்டன் கிளிஃப்போர்டு (William Kingdon Clifford 1845-1879)

இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர் வில்லியம், சிறந்த அறிவாளி. இறக்கும்வரையில் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு 33 ஆம் வயதில் மறைந்தார்.  கணிதத்தில் வடிவியல் சார்ந்த பல்வேறு பங்களிப்புகளுக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார் வில்லியம். 

அடால்பே க்யூடெலெட் (Adolphe Quetelet1796-1874) 

பெல்ஜியத்தைச் சேர்ந்த கணிதவியலாளர். தொடக்கத்தில் இசை நாடகங்கள், கவிதைகள் எழுதியவர் பின்னாளில் கணிதம் பயின்று, வானியல்துறையிலும் சாதித்தார். பாடிமாஸ் இன்டெக்ஸ் எனும் அளவுமுறையை மேம்படுத்தியவர் க்யூடெலெட்தான். 

-ச.அன்பரசு

https://medium.com/s/nautilus-genius/top-10-unsung-geniuses-eb6022efbb9d

கருத்துகள்