இடுகைகள்

நிலப்பரப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகள் பற்றி சிறு பார்வை - இயற்கை 360 டிகிரி

படம்
  ஆண்டு முழுவதும் வெப்பம் இருக்கும் புல்வெளிப்பகுதி. ஆப்பிரிக்காவின் சாவன்னா பலருக்கும் நினைவுக்கு வரலாம். அதேதான் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இங்கு, வெப்பம் இருந்தாலும் மழையும் பெய்வதுண்டு. இதில் முளைக்கும் புற்களை தின்ன வரிக்குதிரை உள்ளிட்ட உயிரினங்கள் வருகின்றன. அப்போது அதை வேட்டையாடி உணவாக உண்ணும் உயிரினங்களும்தானே வரும்? ஆம் சிங்கம் உள்ளிட்ட இரையுண்ணிகள் இதை தமது ஆகாரமாக்கிக்கொள்கின்றன.  சாவன்னா துருவப்பகுதி நாம் வாழும் உலகம் பூமியில் நமது வாழ்க்கை முதன்முதலில் கடலில்தான் தொடங்கியது. 3.5 பில்லியன் ஆண்டுகள் முன்பு, (ஒரு பில்லியன் - நூறு கோடி). உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி நிலம், நீர் என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கியது. அப்போது பூமியில் பல்வேறு இயல்புகள் கொண்ட நிலப்பரப்புகள், நீர்ப்பரப்புகள் இருந்தன. அவற்றைப் பார்ப்போம்.  ரோனி வடதுருவப்பகுதியில் ஆர்க்டிக் கடல் சூழ்ந்துள்ளது. தென்பகுதியில் அன்டார்டிகா அமைந்துள்ளது. எனவே இருதுருவப் பகுதிகளிலும் உறையும் பனி உள்ளது. இங்கும் உயிரினங்கள் உள்ளன. இவை குளிரைத் தாங்கும் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. உடலில் அடர்த்தியான ரோமம், சேம

நிலப்பரப்பு சார்ந்த இயல்புகளைக் கண்டறிந்த ஆய்வாளர்! - ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன்

படம்
ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன் (Frank Marian Anderson 1863-1945) ஃபிராங்க், அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஏழாவது பிள்ளை. பெற்றோர், சிறுவயதில் காலமாகிவிட மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார். தான் வாழ்ந்த ரோக் ரிவர் வேலி பகுதியில் உள்ள கனிமங்கள், படிமங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1889ஆம் ஆண்டு ஒரேகானின் சேலத்தில் இருந்த வில்லமெட்டெ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பள்ளியில் ஆசிரியராகி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருந்தபோதுதான் பேராசிரியர் தாமஸ் காண்டன் அறிமுகம் கிடைத்தது. போர்ட்லேண்டில் நடைபெற்ற டேவிட் ஸ்டார் ஜோர்டான் என்பவரின் உரையைக் கேட்டபிறகு, புவியியல் துறையை தொழிலாக ஏற்றார் ஃபிராங்க்.  அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஜே.எஸ். டில்லரின் உதவியாளராக பணியாற்றினார். 1897இல் எம்.எஸ். பட்டத்தைப் பெற்றவர்,  கலிஃபோர்னியா மாகாண சுரங்க அமைப்பில் களப்பணி உதவியாளராக பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு, கிரிடாசியஸ் டெபாசிட்ஸ் ஆஃப் நார்த்தர்ன் ஆண்டிஸ் (Cretaceous deposits of northern andes) என்ற ஆய்வை செய்து முனைவர் பட்டம் பெற்றார். துலேர் (Tulare),

வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து

படம்
  நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.  1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.  ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு  சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.  2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனதை விண்வெளி அறிவி

நிலப்பரப்பு ரீதியான அரசியலைப் பேசும் நூல்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  போஸ்ட் கொரானா ஸ்காட் காலோவே பெங்குவின்  599 பெருந்தொற்று காரணமாக நாம் என்ன விஷயங்களை இழந்தோம், என்ன விஷயங்களை கற்றோம், தொழில்நுட்பம் முழுக்க நம்மை ஆட்சி செய்த காலம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஆசிரியர் ஸ்காட் விவரித்துள்ளார்.  தி வேர்ல்ட் ஆப் இந்தியாஸ் ஃபர்ஸ்ட் ஆர்க்கியாலஜிஸ்ட் உபிந்தர்சிங் ஆக்ஸ்போர்ட் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் என்பவர்தான் இந்தியாவின் முதல் தொல்பொருள் ஆய்வாளர். இவர் 1871ஆம் ஆண்டு இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.  இந்த நூலில் 1871 முதல் 1888 வரையிலான காலகட்டத்தில் அலெக்ஸ் எழுதிய 193 கடிதங்களைக் கொண்டுள்ளது.  இந்த கடிதங்கள் முதல்முறையாக நூலாக்கப்படுகின்றன. இவை அலெக்ஸின் வாழ்க்கையை வேறுவிதமாக பார்க்க உதவுகின்றன.  தி அன்ஃபார்கிவ்விங் சிட்டி அண்ட் அதர் ஸ்டோரிஸ் வாசுதேந்திரா பெங்குவின் 599 கர்நாடகாவைச் சேர்ந்த வாசுதேந்திரா, கர்நாடக சாகித்திய அகாதெமி பரிசு வென்றவர். நவீன வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நட்பு, துரோகம், நேர்மை, விசுவாசம், அதிர்ச்சி என பல்வேறு விஷயங்களை கதைகளின் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  ட்ரில்லியன் ரா

பெருந்தொற்று காலத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பாப்புலிச தலைவர்கள்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
                          புத்தகம் புதுசு ! லாங்குவேஜஸ் ஆப் ட்ரூத் சல்மான் ருஷ்டி பெங்குவின் 2003 இல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட பல்வேறு விஷயங்களை நூல் கொண்டுள்ளது . இந்த காலகட்டங்களி்ல் நடைபெற்ற கலாசார மாற்றங்களை பேசுகிறது . கதை சொல்லுவதை இயல்பாக தனது எழுத்தில் இயல்பாக கொண்டிருப்பதால் இந்நூலை படிக்கும் அனுபவம் சிறப்பாக உள்ளது . டூம் நியால் ஃபெர்குஷன் பெங்குவின் உலகம் முழுக்க செயல்படும் பாப்புலிச தலைவர்கள் , பெருந்தொற்று காலத்தில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி மக்களை காக்கமுடியாமல் தடுமாறி வருகின்றனர் . இந்த நிலை ஏற்பட்டது எப்படி ? சில நாடுகள் மட்டும் சார்ஸ் , மெர்ஸ் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது எப்படி என இந்த நூல் பேசுகிறது . டெவலப்மென்ட் , டிஸ்ட்ரியூபூஷன் அண்ட் மார்க்கெட்ஸ் கௌசிக் பாசு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூல் எப்படி மேம்பாட்டு பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது . இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நேரடியாக பணத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் எப