நிலப்பரப்பு ரீதியான அரசியலைப் பேசும் நூல்! - புதிய நூல்கள் அறிமுகம்
போஸ்ட் கொரானா
ஸ்காட் காலோவே
பெங்குவின்
599
பெருந்தொற்று காரணமாக நாம் என்ன விஷயங்களை இழந்தோம், என்ன விஷயங்களை கற்றோம், தொழில்நுட்பம் முழுக்க நம்மை ஆட்சி செய்த காலம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஆசிரியர் ஸ்காட் விவரித்துள்ளார்.
தி வேர்ல்ட் ஆப் இந்தியாஸ் ஃபர்ஸ்ட் ஆர்க்கியாலஜிஸ்ட்
உபிந்தர்சிங்
ஆக்ஸ்போர்ட்
அலெக்ஸாண்டர் கன்னிங்காம் என்பவர்தான் இந்தியாவின் முதல் தொல்பொருள் ஆய்வாளர். இவர் 1871ஆம் ஆண்டு இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்த நூலில் 1871 முதல் 1888 வரையிலான காலகட்டத்தில் அலெக்ஸ் எழுதிய 193 கடிதங்களைக் கொண்டுள்ளது. இந்த கடிதங்கள் முதல்முறையாக நூலாக்கப்படுகின்றன. இவை அலெக்ஸின் வாழ்க்கையை வேறுவிதமாக பார்க்க உதவுகின்றன.
தி அன்ஃபார்கிவ்விங் சிட்டி அண்ட் அதர் ஸ்டோரிஸ்
வாசுதேந்திரா
பெங்குவின்
599
கர்நாடகாவைச் சேர்ந்த வாசுதேந்திரா, கர்நாடக சாகித்திய அகாதெமி பரிசு வென்றவர். நவீன வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நட்பு, துரோகம், நேர்மை, விசுவாசம், அதிர்ச்சி என பல்வேறு விஷயங்களை கதைகளின் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ட்ரில்லியன்
ராபின் விக்கில்ஸ்வொர்த்
பெங்குவின்
899
நம் காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு பொருளாதார பிரச்னைகள் அதற்கான தீர்வுகளை ஆசிரியர் ராபின் முன்வைத்து பேசியிருக்கிறார்.
பாலிடிக்ஸ் அண்ட் ஜியோபாலிடிக்ஸ்
ஹர்ஷ் வி பான்ட்
ரூபா
436
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் செயல்பாடுகள், நிலப்பரப்பு ரீதீயாக யாரிடம் அதிக ஆதிக்கம் உள்ளது என்பதை ஆசிரியர் பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டி பேசியுள்ளார்.
தி ஸ்டோரி டெல்லர்
டேவ் குரோல்
சைமன் ஸ்சஸ்டர்
799
ஆசிரியர் தனது வாழ்க்கை வழியாக கடந்து வந்த விஷயங்களை சிறுகதைகளாக்கி வாசகர்களுக்கு தந்திருக்கிறார். படிப்பவர்கள் வாசிப்பு வழியாக ஆசிரியரின் அனுபவங்களை எளிதாக உணரும்படியான படைப்பு இது.
ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்
தொகுப்பு வின்சென்ட் காபோ
கருத்துகள்
கருத்துரையிடுக