பேராளுமைகளை சந்தித்த அனுபவத்தை சொல்ல நினைத்தேன்! - கவிஞர் குல்ஸார்

 




கவிஞர் குல்ஸார்



குல்ஸார்

கவிஞர், பாடலாசிரியர்

ஆக்சுவலி ஐ மெட் தம் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார் குல்ஸார். நூல், சினிமா, இசை, இலக்கியம் பற்றி அவரிடம் பேசினோம். 

நூலுக்கான தலைப்பை எப்படி பிடித்தீர்கள்?

என்னுடைய பயணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக இருந்தது. பிமல்ராய், பண்டிட் ரவிசங்கர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை சந்தித்து பேசி பழகி இருக்கிறேன். இதுபோன்ற பெரிய ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அதை வெளிக்காட்டும்படியாக நூல் தலைப்பை வைத்தேன். 

நூலில் சத்யஜித்ரே, கிஷோர்குமார், சுசித்ரா சென் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். 

நூலில் உள்ள பதினெட்டு ஆளுமைகளை சந்தித்து பேசி அவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது. இவர்களில் சிலரைப் பற்றி நூலாக எழுத நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சில மனிதர்களைப் பற்றி கவிதைகளை எழுதி வைத்துள்ளேன். அவற்றை பின்னாளில் பிரசுரிப்பேன் என நினைக்கிறேன். 

யாருடனாவது பணியாற்றவேண்டும் என நினைத்துள்ளீர்களா?

அந்தப் பட்டியல் பெரிது. குருதத்துடன் பணிபுரிய நினைத்தேன். அவர் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது நான் பிமல் ராயுடன் வேலைசெய்து கொண்டிருந்தேன். அவருக்கு உதவியாளராக இருக்கவேண்டுமென நினைத்தேன். என்னுடைய தலைமுறையில் ஷியாம் பெனகலுடன் பணியாற்ற ஆசைப்பட்டேன். 

கோவிட் -19 தொடர்பாக நீங்கள் பணியாற்றியதாக கேள்விப்பட்டோம்?

கோவிட் காலத்தில் நான் படிக்க தொடங்கினேன். எழுதுவது என்பது எப்போதும் செய்துகொண்டே இருப்பதுதான். நம்மைச்சுற்றி மனிதர்கள் இல்லாமல் தனியாக இருக்கும்போது எழுதமுடியவில்லை. பெருந்தொற்று காலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்தேன். இவற்றை கவிதை, கட்டுரையாக எழுதி வைத்திருக்கிறேன். 

இந்தியா டுடே

கரிஷ்மா உபாத்யாயா




கருத்துகள்